உலக நீதிநாள் 2021: வரலாறும் முக்கியத்துவமும் என்ன?

நீதிமன்றத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக நீதிமன்றம் அமைக்கப்பட்ட நாளான ஜூலை 17 ஆம் தேதியை சர்வதேச குற்றவியல் நீதிநாளாக ஐ.நா அங்கீகரித்துள்ளது.

நீதிமன்றத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக நீதிமன்றம் அமைக்கப்பட்ட நாளான ஜூலை 17 ஆம் தேதியை சர்வதேச குற்றவியல் நீதிநாளாக ஐ.நா அங்கீகரித்துள்ளது.

 • Share this:
  ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17 ஆம் தேதி உலக நீதி நாள் அல்லது உலக குற்றவியல் நீதி நாள் கடைபிடிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை நிலைநாட்டவும், குற்றவாளிகளை சட்டத்தின்படி தண்டிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதும் இந்நாளின் நோக்கம். நிரபராதிகள் தண்டிக்கப்படாமல் இருப்பதையும், நீதிமன்றங்களின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரிப்பதை உறுதி செய்வதும் உலக நீதிநாளின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. தீவிரவாதம் மற்றும் குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டு அமைதி மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்வது குறித்து இந்நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

  உலக நீதிநாள் வரலாறு

  இதே நாளில் 1998 ஆம் ஆண்டு ரோமில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. இந்த நீதிமன்றத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக நீதிமன்றம் அமைக்கப்பட்ட நாளான ஜூலை 17 ஆம் தேதியை சர்வதேச குற்றவியல் நீதிநாளாக ஐ.நா அங்கீகரித்துள்ளது. சர்வதேச நீதிமன்றம் உருவாகப்பட்டத்தில் இருந்து இதுவரை சுமார் 139 நாடுகள் சர்வதேச நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக கையெழுத்திட்டு, அதன் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நீதி நாளின் மையக்கருத்து

  நீதி என்பது சாமானியன் முதல் சாம்ராட்டுகள் வரை அனைவருக்கும் பொதுவானது என்பதை உறுதி செய்வதாகும். பணம், பொருள், ஏழை, பணக்காரன் என எந்த பாகுபாடும் இல்லாமல் அவர்கள் செய்த குற்றத்தின் அடிப்படையிலும், பாதிக்கப்பட்டவருக்கான உரிமையை நிலைநாட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதனை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஏதாவதொரு மையக்கருத்தை அடிப்படையாக வைத்து நீதிநாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு ’டிஜிட்டல் பொருளாதாரத்தில் சமூகநீதி’ (social justice in the digital economy) என்ற மையக்கருத்து அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

  Also read... International Day of Parliamentarism: சர்வதேச நாடாளுமன்ற தினம் இன்று... அரசாள நாடாளுமன்றம் தோற்றுவிக்கப்பட்டதன் வரலாறும் முக்கியத்துவமும்!

  கொரோனா காரணமாக மக்கள் வீட்டில் முடங்கியிருக்கும் இந்த சூழலில் டெக்னாலஜியை கொண்டு வீட்டில் இருந்து லட்சக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். அவர்களின் வருவாய் மற்றும் பொருளாதாரத்தை உறுதி செய்வதையும், தொழில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை கொடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என உலக நீதி நாளில் வலியுறுத்தப்படுகிறது. டிஜிட்டல் வேலை வாய்ப்பில் தொழிலாளர்களின் வேலை நிரந்தரம் கேள்விக்குள்ளாகியிருப்பதாகவும், அதனை முறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

  உலக நீதிநாள் 2021-ன் முக்கியத்துவம்

  நீதிக்கு ஆதரவாக உலகளவில் ஒருமித்த குரலை எழுப்புவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பாதிக்கப்பட்டர்வர்களின் உரிமைக்களை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ள உலக நீதி நாளில், குற்றச் செயல்களில் தனிநபர்கள் ஈடுபடாமல், தேச பாதுகாப்புக்கு உதவுவது குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. நாட்டில் பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் அமைதியை மேம்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த நாளில் உலகளவில் நடைபெறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பிட்ட இனத்துக்கு எதிரான தாக்குதல் குறித்தி செய்தி நிறுவனங்களால் மக்களின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளன.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: