International Day of the Seafarer 2021: சர்வதேச மாலுமிகள் தினம் 2021 - இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

சர்வதேச மாலுமிகள் தினம்

கடற்படையினரின் பணிகள் மற்றும் வாழ்க்கைமுறை குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக சர்வதேச கடல்சார் அமைப்பு (ஐ.எம்.ஓ) இந்த நாளை கொண்டாடுகிறது.

  • Share this:
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 அன்று சர்வதேச மாலுமிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு கடற்படையினரின் தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

உலகில் நடைபெற்று வரும் சரக்கு வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் கப்பல்களால் கொண்டு செல்லப்படுகிறது, இந்த இந்த கப்பல்களை நிர்வகிக்கும் கடற்படையினர் வர்த்தகம் சீராக நடத்துவதை உறுதி செய்ய இரவு பகல் பாராது அயராது உழைக்கின்றனர். அவர்களின் பங்களிப்புகளை கவுரவிக்கும் விதத்திலும், அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் சர்வதேச மாலுமிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நாளின் வரலாறு :

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனமான சர்வதேச கடல்சார் அமைப்பு 2010ம் ஆண்டு ஜூன் 25ஐ சர்வதேச மாலுமிகள் தினமாக அறிவித்தது. 2011 முதல், உலகளாவிய வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு இன்றியமையாத மாலுமிகள் / கடற்படையினரை கவுரவிக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் சர்வதேச மாலுமிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகளின் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

மாலுமிகள் தினம் 2021 - தீம் :

சர்வதேச மாலுமிகள் தினத்தின் இந்த ஆண்டிற்கான தீம் ‘கடற்படையினர்: கப்பல் போக்குவரத்தின் எதிர்கால தூண்' என்பதாகும். கப்பல் போக்குவரத்து தற்போது சிறப்பாக நடைபெற்று வர கடைப்படையினர் என அழைக்கப்படும் மாலுமிகள் தங்கள் வேலையை சிறப்பாக பணியாற்றுவதே காரணமாகும். எதிர்காலத்தில் அவர்களால் தான் கடற்படை பலம் பெரும் என குறிப்பிடுகின்றனர்.

Also read... COVID vaccine certificate: கோவிட் தடுப்பூசி சான்றிதழில் பிழையா? திருத்துவது எப்படி? விளக்கம்!

முக்கியத்துவம் :

கடற்படையினரின் பணிகள் மற்றும் வாழ்க்கைமுறை குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக சர்வதேச கடல்சார் அமைப்பு (ஐ.எம்.ஓ) இந்த நாளை கொண்டாடுகிறது. இந்த நாளில், வெளிநாட்டு துறைமுகங்களில் மாலுமி உரிமைகள், அவற்றின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தவும், விவாதிக்கவும் IMO வாய்ப்பை பெறுகிறது

மேலும் தனியார் கப்பல் நிறுவனங்கள் தங்கள் கடற்படையினருக்கு கடல்களில் பாதுகாப்பான பயணத்திற்கு போதுமான வசதிகளை வழங்குமாறு வலியுறுத்துவதற்கும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் கடற்படையினரின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படுகிறது.

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் கிட்டத்தட்ட பல்வேறு பொருட்கள் கடல் போக்குவரத்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொண்டு வரப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள 1.5 மில்லியன் மாலுமிகளுக்கு நன்றி செலுத்தவும், அவர்களை கௌரவிக்கவும் இந்த நாளில் உறுதி ஏற்போம். சர்வதேச மாலுமிகள் தினமான இன்று சில நகரங்களில் மாலுமிகளுக்காக சிறப்பு நிகழ்வுகளையும் நடத்துகின்றன. தற்போது கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடைபெறுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: