International Day of Parliamentarism: சர்வதேச நாடாளுமன்ற தினம் இன்று... அரசாள நாடாளுமன்றம் தோற்றுவிக்கப்பட்டதன் வரலாறும் முக்கியத்துவமும்!

சர்வதேச நாடாளுமன்ற தினம்

ஜனநாயகத்தின் அடித்தளமாகவும், மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்துவதிலும், சட்டங்களை இயற்றுவதிலும், சட்டங்களையும் கொள்கைகளையும் செயல்படுத்துவதிலும் மற்றும் அரசாங்கங்களை பொறுப்புக்கூற வைப்பதிலும் பாராளுமன்றங்களின் வலுவான அவசியத்தை இந்த நாள் குறிப்பிடுகிறது.

  • Share this:
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30ம் தேதி சர்வதேச நாடாளுமன்ற தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. 1889 ஆம் ஆண்டில் பாராளுமன்றங்களின் உலகளாவிய அமைப்பான இடை-பாராளுமன்ற ஒன்றியம் நிறுவப்பட்ட நாளையே இந்த தினம் குறிக்கிறது. இந்த நாள் அனைத்து நாட்டின் பாராளுமன்றங்களையும் கொண்டாடுகிறது. மேலும் நவீன சமூகங்களை வடிவமைப்பதில் அரசாங்கத்தின் பாராளுமன்ற அமைப்புகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது.

ஜனநாயகத்தின் அடித்தளமாகவும், மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்துவதிலும், சட்டங்களை இயற்றுவதிலும், சட்டங்களையும் கொள்கைகளையும் செயல்படுத்துவதிலும் மற்றும் அரசாங்கங்களை பொறுப்புக்கூற வைப்பதிலும் பாராளுமன்றங்களின் வலுவான அவசியத்தை இந்த நாள் குறிப்பிடுகிறது. ஜனநாயகத்தின் வேறாக நாடாளுமன்றம் இருப்பதன் முக்கியத்துவத்தை இந்த தினம் மக்களுக்கு உணர்த்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த தினம் தோன்றிய வரலாறு:

2018 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி ஜூன் 30ம் தேதியை சர்வதேச நாடாளுமன்ற தினமாக நியமித்தது. 1889 ஆம் ஆண்டில், நாடாளுமன்றங்களுக்கிடையேயான ஒன்றியம் (IPU), பாராளுமன்றங்களின் உலகளாவிய அமைப்பு நிறுவப்பட்ட தேதியையும் இந்த தினம் குறிக்கிறது. IPU, பாராளுமன்றங்களின் உலக அமைப்பாக, உலக அளவில் அதிக வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பங்கேற்பை ஊக்குவிக்க தேசிய பாராளுமன்றங்களை இணைக்கிறது. அமைதி மற்றும் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் உலக அளவில் நிலையான வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இந்த அமைப்பு ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது.

இந்த தினத்தின் முக்கியத்துவம்:

இந்த நாள் பாராளுமன்றங்களையும், அரசாங்கத்தின் பாராளுமன்ற அமைப்புகளையும் உலகெங்கிலும் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் வழிகளையும் கொண்டாடுகிறது. இந்த நாளில், பாராளுமன்றங்கள் உலக அளவில் சவால்களை எதிர்கொள்வதற்கும், அடையாளம் காண்பதற்கும் ஒரு வாய்ப்பைப் பெறுகின்றன. மேலும் அவற்றை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை பரிந்துரைக்கின்றன. இந்த நாளில், பாராளுமன்றங்கள் தங்களது முந்தைய சட்டத்தின் முன்னேற்றத்தையும் சில முக்கிய குறிக்கோள்களை அடைவதில் பங்களித்த கொள்கைகளையும் மதிப்பாய்வு செய்கின்றன.

Also read... National Statistics Day 2021: தேசிய புள்ளியல் நாள் 2021 - முக்கியத்துவமும், பின்னணியும்!

உலக அளவில் அதிக வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பங்கேற்பை ஊக்குவிக்கும் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தினத்தில் விவாதிப்பர். மக்களின் கவலைகள் மற்றும் தேவைகளை ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பு கொண்டு பகிர்ந்து கொள்வதில் பாராளுமன்ற அமைப்புகளின் முக்கியத்துவத்தை இந்த நாள் அங்கீகரிக்கிறது. இதனால் இந்த அமைப்பு உலகளவில் மிகவும் நெருக்கமாக செயல்பட முடியும். 2021 ஆம் ஆண்டில், IPU மற்றும் அதன் உறுப்பினர் இளைஞர் வலுவூட்டலை மையமாகக் கொண்ட பல நிகழ்வுகளுடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: