சிலந்திகள் வாரம்:உழவனின் நண்பன் சிலந்தி பற்றிய அரிய தகவல்கள்!

சிலந்தி

சிலந்திகள் எப்போதும் அதிகாலை அல்லது மாலை நேரத்தில்தான் வலை பின்னுகின்றன. இந்த நேரத்தில் பூச்சிகள் அதிக அளவில் பறந்து திரியும். அவற்றை வலையில் சிக்க வைக்கவே இந்த நேரத்தில் வலை பின்னுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆகஸ்ட் 14 முதல் 22ம் தேதிவரை சிலந்திகள் வாரமாக கடைபிடிக்கப்படும் நிலையில் சிலந்தி குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை காணலாம்.

பூமியின் 50 ஆயிரம் வகையிலான சிலந்திகள் உள்ளன. இவற்றுள், 1,800 வகை சிலந்திகள் இந்தியாவில் காணப்படுகின்றன. எட்டுக்கால் பூச்சி என்றழைக்கப்படும் சிலந்திக்கு எட்டுக்கால் என்று எல்லோரும்  சொல்லிவிடுவார்கள். ஆனால்,  சிலந்திக்கு, 6 முதல், 8 கண்கள் வரை உள்ளன. *சிலந்தி பூச்சி* என்று அழைத்தாலும் அவை பூச்சி இனத்தில் சேராது என்கிறார்கள் விலங்கியல் ஆய்வாளர்கள் . காரணம், உணர்வுக் கொம்புகளோ, இறக்கைகளோ கிடையாது என்பதால், சிலந்தி பூச்சி இனத்தில் சேராது என்பது அவர்களின் கூற்று.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிலந்திகளில் கடும் விஷத்தன்மை உடையவையும்  உண்டு; ப்ளேக் விடோ, ப்ரவுன் ரெக்கள்ஸ் என்ற சிலந்திகள் கடித்தால் விஷம் ஏறும். ;இத்தகைய விஷச்சிலந்திகள், வட, தென் அமெரிக்காவில் அதிகமாக காணப்படுகின்றன.

ஆண் சிலந்தியை விட, பெண் சிலந்தி உருவம், எடையில் பெரியதாக இருக்கும். சிலந்திக்கு, விஷப்பை, உடலை விட்டு வெளிப்பகுதியில் அமைந்திருக்கிறது. உடல், இரு பகுதியாக காணப்படுகிறது. சிலந்திகள் மிகவும், நுண் அறிவு உள்ளவை. சிலந்திகள் எப்போதும் அதிகாலை அல்லது மாலை நேரத்தில்தான் வலை பின்னுகின்றன.  இதற்கு முக்கிய காரணம் உண்டு; இந்த நேரத்தில் தான், பூச்சிகள் அதிக அளவில் பறந்து திரியும். அவற்றை வலையில் சிக்க வைக்கவே இந்த நேரத்தில் வலை பின்னுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன.

மேலும் படிக்க: தந்தங்களுக்காக அழிக்கப்பட்டு வரும் மாபெரும் உயிரினம்!




சிலந்தி


வலையை, வட்ட வடிவிலோ, எண் கோண வடிவிலோ தான் சிலந்தி அமைக்கும்.சிலந்தி வயிற்றின் அடியில், இரண்டு சுரப்பிகள் உள்ளன. இவை சுரக்கும் திரவத்தால் தான், வலை பின்னுகிறது. இந்த திரவத்தின் மீது காற்று பட்டவுடன், மெல்லிய கம்பி போல் மாறி விடுகிறது. இரண்டு சுரப்பிகளிலிருந்து வெளியேறும் திரவம் வெவ்வேறு தன்மை உடையவை. ஒரு சுரப்பியிலிருந்து வெளியேறும் திரவத்தினால் அமைந்த வலையில் பூச்சிகள் விழுந்தால் ஒட்டிக் கொள்ளும்; இன்னொன்றில் ஒட்டிக் கொள்ளாது.
இதனால் தான், பூச்சிகள் விழுந்ததும் தத்தளிக்கின்றன. விழுந்த இரை மீது விஷத்தைப் பாய்ச்சி கொன்று தனது இரையாக கொள்ளும் சிலந்தி. பெரும்பாலும், சிலந்திகள் தோட்டங்களிலும், காடுகளிலும், வலைக்கு வெளியே, இரையை எதிர்நோக்கி காத்திருக்கும். வீட்டுச் சிலந்திகள் வலைக்குள்ளேயே காத்திருக்கும்.

இதையும் படிங்க: சவுகரியமான கரெக்ட்டான ரன்னிங் ஷூக்களை தேர்தெடுப்பது எப்படி?


*உழவனின் நண்பன்*

சிலந்திகளை உழவனின் நண்பன் என்றும் சொல்லலாம். ஆண்டிற்கு 400 - 800 மில்லியன் டன் தீமை செய்யும் பூச்சிகளை சிலந்திகள் தின்று, தீர்க்கின்றன. தாவரங்களுக்கு குறிப்பாக பயிர்களுக்கு எதிரான தீமை செய்யும் பூச்சிகள் தான் சிலந்திக்கு இலக்கு. ஆகையால், உழவர்களின் உற்ற நண்பனாகவும் திகழ்கின்றன.வீடுகளில் மொய்க்கும்  ஈ, கொசு போன்ற நோய் பரப்பும் பூச்சிகளும்  சிலந்திகளுக்கு உணவாகின்றன.

ஆனால், வேளாண்மையில் திணிக்கப்பட்டுள்ள ரசாயனப் பயன்பாடும் பயிருக்கும் வீடுகளிலும் தெளிக்கப்படும் பூச்சிக் கொல்லிகள் நமக்கு நன்மை செய்யும் சிலந்திக்கு பெரும் தீங்காகி விடுவது பெரும் சோகம். இதைத் தவிர்த்து தீமை செய்யும் பூச்சியினங்களை  உண்டு, உணவுச் சங்கிலியை  பாதுகாக்கும் சிலந்திகளைப் பாதுகாப்பது அவசியம் என்கிறார்கள் சூழலியல் ஆய்வாளர்கள்.
Published by:Murugesh M
First published: