ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

150 குழந்தைகள் மரணம்: இந்தோனேசியாவின் 2 சிரப் நிறுவன லைசன்ஸ் ரத்து... காரணம் என்ன?

150 குழந்தைகள் மரணம்: இந்தோனேசியாவின் 2 சிரப் நிறுவன லைசன்ஸ் ரத்து... காரணம் என்ன?

இருமல் மருந்து

இருமல் மருந்து

இந்தோனேசியா இரண்டு உள்ளூர் நிறுவனங்களின் சிரப் வகை மருந்து உற்பத்திக்கான உரிமத்தை ரத்து செய்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்தோனேசியாவின் உணவு மற்றும் மருந்து நிறுவனம் (BPOM), உற்பத்தி விதிகளை மீறியதற்காக இரண்டு உள்ளூர் நிறுவனங்களின் சிரப் வகை மருந்து உற்பத்திக்கான உரிமத்தை ரத்து செய்துள்ளது.

இந்தோனேசியாவில் கடுமையான சிறுநீரக பாதிப்பு காரணமாக 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். இது குறித்து  தகவல் வந்த நிலையில் இருமல் மற்றும் காய்ச்சல் சிரப்களில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என்று அதன் சுகாதார அமைச்சர் கூறினார். அதன் பின்னர் தான் சில நிறுவனங்களின் உண்மை நிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தோனேசியாவில்  சிரப் அடிப்படையிலான சில மருந்துகளின் விற்பனையை தற்காலிகமாகத் தடைசெய்த பிறகும், சில தயாரிப்புகளில் எத்திலீன் க்ளைகால் மற்றும் டைதிலீன் க்ளைகோலின் (ethylene glycol and diethylene glycol) இருப்பது அடையாளம் காணப்பட்டது. இந்த வேதியல் பொருட்கள் குறிப்பாக ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை உடையது எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:   டவ் ஷாம்பூ ஆபத்தானதா?

இந்த இரண்டு ரசாயன பொருட்களும் உறைதல் தடுப்பு மற்றும் பிரேக் திரவங்களாகவும் பிற தொழில்துறை பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சில மருந்து தயாரிப்புகளில் முக்கியமாக இருமல் மருந்துகளில் கிளிசரின் எனும் கரைப்பானின் மலிவான மாற்றாக இந்த வேதியல் பொருட்களை பயன்படுத்தப்படுகின்றனர்.

இதன் பயன்பாட்டால் PT Yarindo Farmatama மற்றும் PT Universal Pharmaceutical Industries ஆகிய இரு நிறுவனங்களின் "சிரப்" உற்பத்தி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதாக BPOM தலைவர் பென்னி கே. லுகிடோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இரு நிறுவனங்களும் தரமற்ற மூலப்பொருட்களைக் கொண்டு மருந்துகளை உற்பத்தி செய்ததாகவும், மருந்து பொருட்களில் தரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், வழிகாட்டுதல்களை மீறி சில பொருட்களைப் பயன்படுத்தியதாகவும் பென்னி கூறினார்.

இதையும் படிங்க:  உருகும் பனிப்பாறைகள்.. வெளிவரும் படிந்துபோன வைரஸ்கள்... மீண்டும் தொற்று நோய்? அதிர்ச்சி ரிப்போர்ட்

திங்களன்று இந்த கரைப்பான்களில் ஒன்றான புரோபிலீன் கிளைகோல் டவ் கெமிக்கல் தாய்லாந்தால் தயாரிக்கப்பட்டது என்று பிபிஓஎம் தெரிவித்துள்ளது. ஆனால் தாய்லாந்து நிறுவனம் இதை மறுத்துவிட்டது.

மேலும் இரண்டு மருந்து தயாரிப்பாளர்களின் விநியோகஸ்தர்களும் மற்ற மருந்து நிறுவனங்களுக்கு பொருட்களை சப்ளை செய்தார்களா என்பதை BPOM விசாரித்து வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த சிரப் மருந்துகளால் காம்பியாவில் 70 க்கும் மேற்பட்ட இறப்புகள் நிகழ்ந்தன. அதை அடிப்படையாக கொண்டு இந்தோனேசியா, உலக சுகாதார அமைப்புடன் (WHO) ஆலோசித்து கடுமையான சிறுநீரக பாதிப்பு பாதிப்புகள் குறித்து விசாரித்து வருகிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Indonesia, Medicines