ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

இந்தியாவில் ஜீரோ ரூபாய் நோட்டுகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? எதற்காக பயன்படுகிறது!

இந்தியாவில் ஜீரோ ரூபாய் நோட்டுகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? எதற்காக பயன்படுகிறது!

ஜீரோ ரூபாய் நோட்டு

ஜீரோ ரூபாய் நோட்டு

உண்மையில், இந்தியாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஜீரோ ரூபாய் நோட்டுகள் உள்ளன.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

கரன்சி நோட்டுகளை பற்றி நினைக்கும் போது நம் மனதில் எப்போதும் தோன்றும் எண்ணம், அந்த பணத்தை கொண்டு எந்த பொருளையாவது வாங்க வேண்டும் என்பது தான். இந்தியாவில் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 அல்லது ரூ.200 போன்ற குறைந்த மதிப்புள்ள பணம் முதல் ரூ.500 மற்றும் ரூ.2000 வரையிலான அதிக மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை பற்றி நம் அனைவருக்குமே பொதுவாக தெரியும்.

புதிய 2000 ரூபாய் அறிமுகத்திற்கு பிறகு புழக்கத்தில் இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளை முற்றிலும் திரும்ப பெற்று விட்டது ரிசர்வ் வங்கி. ஆனால், ஜீரோ ரூபாய் நோட்டை நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா அல்லது இருக்கிறது என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா.? ஆம், நீங்கள் படித்தது சரிதான். உண்மையில், இந்தியாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஜீரோ ரூபாய் நோட்டுகள் உள்ளன.

இந்தியாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஜீரோ ரூபாய் நோட்டுகள் இருந்தாலும் இந்திய ரிசர்வ் வங்கியால் இவை அச்சடிக்கப்பட்டு வெளியிடப்படாததால் பலருக்கு இது பற்றி தெரியாது. ஆனால் ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் மற்ற ரூபாய் நோட்டுகளை போல இல்லாமல், ஜீரோ ரூபாய் நோட்டுகள் மிகவும் வித்தியாசமானவை மற்றும் இவை ஒரு சிறப்பு நோக்கத்தை குறிக்கோளாக கொண்டவை. அது என்னவென்று தெரியுமா.? தொடர்ந்து படியுங்கள்..

ஜீரோ ரூபாய் நோட்டின் நோக்கம்..

நம் நாட்டில் எதற்கெடுத்தாலும் எங்கெங்கும் நாம் கண்கூடாக பார்க்கும் ஒன்று ஊழல். பல்வேறு வடிவங்களில் நம் நாட்டில் ஊழல் இருப்பதை நம்மில் பெரும்பாலானோர் மறுக்க முடியாது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை லஞ்சம் கேட்பவர்களிடம் கொடுப்பதற்குப் பதிலாக, ஊழல் அதிகாரிகளை ட்ரோல் செய்ய பிரத்யேகமாக ஒரு ரூபாய் நோட்டை உருவாக்கினால் நன்றாக இருக்கும் அல்லவா..?

ALSO READ |  குளிரில் நடுங்கும் குட்டியானைகள் ... போர்வை போர்த்தி பராமரிக்கும் காஸிரங்கா தேசிய பூங்கா

ஊழல் அதிகாரிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர அல்லது அவர்களுக்கு தக்க பதிலடி தரும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த ஜீரோ ரூபாய் நோட்டுகள். ஜீரோ ரூபாய் நோட்டு கடந்த 2007-ஆம் ஆண்டே அறிமுகமாகி விட்டது. தமிழகத்தை சேர்ந்த ஐந்தாவது தூண் (Fifth Pillar) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தான் இந்த மதிப்பில்லா கரன்சி நோட்டை அறிமுகப்படுத்தியது.

நேர்மையற்ற அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை தடுக்க நோட்டின் பின்புறத்தில் உரிய அரசு அதிகாரிகளின் தொடர்பு விவரங்களுடன் ஜீரோ ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஊழலை செய்யும் ஒரு அரசு அதிகாரி லஞ்சம் கேட்கும் போதெல்லாம் இந்த ஜீரோ ரூபாய் நோட்டை 'லஞ்சமாக கொடுங்கள்' என்று குடிமக்களை குறிப்பிட்ட இந்த என்ஜிஓ ஊக்குவித்து வருகிறது.

ALSO READ |  படுத்துக்கொண்டே நீதிமன்ற விசாரணையில் பங்கேற்ற முன்னாள் டிஜிபிக்கு நீதிபதி எச்சரிக்கை

மில்லியன் கணக்கான ஜீரோ ரூபாய் நோட்டை இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் அச்சடித்து உள்ளது தன்னார்வ தொண்டு நிறுவனமான Fifth Pillar. லஞ்சம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் Fifth Pillar-ன் தன்னார்வலர்கள் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மார்க்கெட்கள் போன்ற பொது இடங்களில் இந்த நோட்டுகளை அவ்வப்போது விநியோகிக்கின்றனர்.

மக்களிடம் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான அவர்களின் முதன்மை இலக்கைப் பகிர்ந்து கொள்கிறார்கள். "யாராவது லஞ்சம் கேட்டால், இந்த நோட்டை கொடுத்து அவர்கள் மீது உரிய முறையில் புகாரளிக்கவும்" என்ற வாசகமும் அச்சடிக்கப்பட்டுள்ளது.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: India, Rupee