ஹோம் /நியூஸ் /Explainers /

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு குறைவது என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு குறைவது என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?

மாதிரிப்

மாதிரிப் படம்

அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாய் பலவீனமடைவது இந்தியப் பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  முன்னெப்போதும் இல்லாத வகையில், அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாய் பணப் பரிமாற்ற விகிதம் 77.40 ரூபாயாக அதிகரித்துள்ளது. ரூபாய் தேய்மானம் அடைவதால் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் (உதாரணமாக, கச்சா எண்ணெய்) மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக, நாட்டின் பணவீக்கதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

  அந்நிய செலவாணி விகிதம் எப்படி தீர்மானிக்கப்படுகிறது?  

  ஒரு நாட்டின் நாணயம் மற்றொரு நாட்டின் நாணயத்துக்கு மாற்றப்படும் விகிதம் ' செலவாணி விகிதம்' என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக, இந்தியாவில் ஒரு ஆப்பிளின் விலை 100 ரூபாய் என்று எடுத்துக் கொள்வோம். அதே ஆப்பிள், அமெரிக்காவில் ஒரு டாலர் என்றால், ஒரு டாலர் 100 ரூபாய்க்கு சமமென்று கருதப்படும். எனவே, அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.100 என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது.

  இன்றைய உலகப் பொருளாதார அமெரிக்க டாலர் பங்களிப்பு மிக முக்கிய பங்கினை ஆற்றுகிறது. பெரும்பாலான உலக வர்த்தக பரிவர்த்தனைகள் டாலர் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, உள்நாட்டு செலவாணி சந்தையில் (Foreign Exchange Market) அமெரிக்க டாலரின் தேவை மற்றும் பகிர்வு (Demand and Supply) அடிப்படையில் நாட்டின் செலவாணி விதம் ( அதாவது, உள்நாட்டு பணத்தின் வெளிநாட்டு மதிப்பு ) தீர்மானிக்கப்படுகிறது.

  எப்போதெல்லாம் அந்நிய செலவாணியின் தேவை அதிகரிக்கும்? 

  நாட்டில் இறக்குமதி அதிகரிக்கும் போது அமெரிக்க அந்நிய செலவாணியின் தேவை அதிகரிக்கிறது. உதராணமாக, சர்வதேச சந்தையில் இருந்து கச்சா எண்ணெய்யை அமெரிக்கா டாலர் கொடுத்து இந்தியா வாங்குகிறது. மறுபுறம், அந்நிய செலவாணி விதம் அதிகரிக்கும் போதெல்லம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான விலை அதிகரிக்க தொடங்குகிறது. இதன், காரணமாக நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது. இதன், காரணமாக நாட்டின் பணவீக்கம் உருவாகுகிறது. பணவீக்கம் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது.

  மேலும்,வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கடன் தொகை மற்றும் வட்டி வழங்குதல் (கடன்கள் வெளிநாட்டு நாணயத்தில் பெற்றிருந்தால்) காரணமாகவும் அந்நிய செலவாணியின் தேவை அதிகரிக்கிறது.

   எப்போதெல்லாம் அந்நிய செலவாணி அதிகரிக்கும்?  

  இந்தியாவில் இருந்து பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி அதிகரிக்கும் போது, அந்நியச் செலவாணி இந்தியாவுக்குள் வரும். அதேபோன்று, வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியத்  தொழிலாளர்கள்  தாயகத்திற்கு அந்நியச் செலவாணிகளை அனுப்பும் போதும், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் அதிகரிக்கும் போதும் அந்நியச் செலவாணி கையிருப்பு அதிகமாகிறது.

  அதேபோன்று, வெளிநாட்டுக் காரணங்களினாலும் நாட்டின் அந்நிய செலவாணி விகிதம் அதிகரிக்கும். உதாரணமாக, கொரோனா தொற்றுக்குப் பிந்தைய காலங்களில் அமெரிக்காவின் பொருளாதாரம் மீட்சி  அடைகிறது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக உருவாகும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும். வட்டி விகிதம்  அதிகரிக்கப்பட்டால் டாலருக்கான தேவை அதிகரிக்கும். டாலருக்கான தேவை அதிகரித்தால், இந்தியாவின் ரூபாயின் மதிப்பு தானாகக் குறையும்.

  இந்திய ரூபாய் தேய்வடைவது சரியானதா? :

  இந்திய பொருளாதார சூழலுக்கு வலுவான இந்திய ரூபாய் பலனளிக்காது என்று இந்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் உள்ளிட்ட பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  ரூபாய் பலவீனமாவாதால், உள்நாட்டு நுகர்வோருக்கு இறக்குமதி பொருட்கள் அதிக செலவுடையதாக ஆகிறது. எனவே, அவர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மாற்று நிறுவனத்தின் பொருட்களை நுகரத் தொடங்குகின்றனர். இதன் மூலம், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை (Trade Deficit) குறையத் தொடங்கும்.

  TN Morning Breakfast Scheme: காலை சிற்றுண்டி உணவுத்திட்டம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

  அதேபோன்று, பலவீனமான ரூபாய் வெளிநாட்டு நுகர்வோருக்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் விலையை மலிவாக்குகிறது. இதன்மூலம், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரிக்கத்  தொடங்கும். இந்தியாவில் பழங்கள் ஏற்றுமதி வளர்ச்சியை இதற்கு உதாரணமாக கூறலாம். கடந்த 2013ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் கொய்யா ஏற்றுமதி 260 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

  ஆனால், இந்தியா ஏற்றுமதியைச் சார்ந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடில்லை (Export -Oriented Economy) என்பதாலும், கச்சா எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருவதாலும் ரூபாய் தேய்வடைவது அரசியல் முக்கியத்துவம்  பிரச்னையாக பார்க்கப்படுகிறது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Indian Rupee