முகப்பு /செய்தி /செய்தி விளக்கம் / INS Vikrant : 2 கால்பந்து மைதானத்தை விட பெரிய இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல்

INS Vikrant : 2 கால்பந்து மைதானத்தை விட பெரிய இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல்

ஐஎன்எஸ் விக்ராந்த்

ஐஎன்எஸ் விக்ராந்த்

கப்பலில் பயன்படுத்தப்பட்ட எஃகு மூன்று ஈபிள் கோபுரங்களுக்குச் சமமானது. கப்பலில் பயன்படுத்தப்படும் மின்சாரம் கொச்சி நகரின் பாதியை ஒளிரச் செய்யும்

  • Last Updated :
  • Chennai, India

இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொச்சியில் தொடங்கி வைத்தார். பாதுகாப்புத் துறையில் 'ஆத்மநிர்பர் பாரத்' இலக்கை வலுப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க படியை இது குறிக்கிறது.

விக்ராந்த் என்ற பெயர் ஏன்?

சமஸ்கிருத வார்த்தையான விக்ராந்தில் உள்ள 'வி' தனித்துவமான அல்லது அசாதாரணமான ஒன்றைக் குறிக்கிறது. 'க்ராந்த்' ஒரு திசையில் முன்னேறுவதைக் குறிக்கிறது. சுதந்திர போர் மற்றும் 1971 போரில் முக்கிய பங்கு வகித்த நாட்டின் வீரர்களின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

நோக்கம்:

பென்னண்ட் எண் R11 உடன், புதிதாக இயக்கப்பட்ட INS விக்ராந்த், "ஜயேம சம் யுதி ஸ்ப்ருதா” எனும் ரிக்வேத வரிகளை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அது "எனக்கு எதிராகப் போரிடுபவர்களை நான் வெல்கிறேன்" என்று பொருள்படும்.

கட்டுமானம்:

உலகளவில், ஐந்து அல்லது ஆறு நாடுகளுக்கு மட்டுமே விமானம் தாங்கி கப்பலை வடிவமைத்து செயல்படுத்தும் திறன் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஐஎன்எஸ் விக்ராந்த் இந்திய கடற்படையின் உள் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் (WDB) வடிவமைக்கப்பட்டு, பொதுத்துறை கப்பல் கட்டும் தளமான கொச்சின் கப்பல் கட்டும் தளத்தால் கட்டப்பட்டது. கப்பலின் கட்டுமானம் 2009 இல் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL) இல் தொடங்கியது.

மேம்பட்ட மென்பொருளைப் பயன்படுத்தி கப்பலின் விரிவான பொறியியலை மேற்கொண்டு, விமானம் தாங்கி கப்பலின் அளவுள்ள ஒரு கப்பலை முழுமையாக 3D மாதிரியாக வடிவமைத்து, 3D மாடலில் இருந்து உற்பத்தி வரைபடங்கள் எடுத்து கப்பல் கட்டப்பட்டது. இப்படி 3D மாடல் வைத்து தயாரிப்பது நாட்டிலேயே இதுவே முதல் முறை என்று குழு தெரிவித்தது.

இந்த கப்பல் கட்டுமானத்தின் மொத்த செலவு சுமார் 23,000 கோடி ஆகும். இந்தியாவில் இரண்டு செயல்பாட்டு விமானம் தாங்கி கப்பல்களாக விக்ராந்த் இருக்கும். இது நாட்டின் கடல் பாதுகாப்பை மேம்படுத்தும்.

ஆத்மநிர்பார்பாரத் திட்டத்தின் கீழ் விக்ராந்தில் 76 சதவீத உள்நாட்டு உள்ளடக்கம் உள்ளது. இதில் போர் மேலாண்மை அமைப்பு, மின்னணு போர் தொகுப்பு, தரவு நெட்வொர்க் மற்றும் ஒருங்கிணைந்த இயங்குதள மேலாண்மை அமைப்பு ஆகியவை அடங்கும்.

தாஜ்மஹாலை 'தேஜோ மஹாலயா' என்று பெயர் மாற்ற ஆக்ரா நகர சபையில் முன்மொழியும் பாஜக!

விக்ராந்த் சிறப்பம்சங்கள்:

விக்ராந்தில் 32 தரையிலிருந்து வான்வழி நடுத்தர தூரம் தாக்கும் ஏவுகணைகள் (MRSAM) பொருத்தப்பட்டுள்ளன. விமானம் தாங்கி கப்பலில் AK 630 ரோட்டரி பீரங்கிகள் மற்றும் கவாச் ஏவுகணை எதிர்ப்பு கடற்படை டிகோய் அமைப்பும் பொருத்தப்பட்டிருக்கும்.

விக்ராந்த் கப்பலில் 42,800 டன் எடை கொண்டது. 30-க்கும் மேற்பட்ட விமானங்களையும் சுமந்து செல்லக்கூடிய திறன் பெற்றது. சுமார் 1,600 பேர் கொண்ட பணியாளர்கள் இதில் தங்க முடியும். குறைந்தபட்சம் 18 நாட் தூரம் மற்றும் அதிகபட்சம் 28 நாட் தூரம் என்ற வேகத்தில் பயணிக்கும். விக்ராந்த் அதிகபட்சமாக 7,500 நாட்டிக்கல் மைல்கள் தூரம் செல்லக்கூடியது.

இன்ஸ் விக்ராந்த் எவ்வளவு பெரியது?

262 மீ நீளம் கொண்ட விக்ராந்த் இரண்டு கால்பந்து மைதானங்களை விட 62 மீ அகலம் கொண்டது. அதன் உயரம் 59 மீட்டர்கள், 14 அடுக்குகளில் 2,300 பெட்டிகள் மற்றும் 1,600 பணியாளர்கள் மற்றும் பெண் அதிகாரிகளுக்கான பிரத்யேக அறைகளை உள்ளடக்கியது.

குலசேகரப்பட்டினத்தில் எதற்காக இந்தியா ஏவுதளத்தை உருவாக்கி வருகிறது?

ஆற்றல்

கப்பலில் பயன்படுத்தப்படும் மின்சாரம் கொச்சி நகரின் பாதியை ஒளிரச் செய்யும். கப்பலில் உள்ள அனைத்து கேபிள்களும் மொத்தம் 2,600 கிமீ நீளம் கொண்டது என்று வடிவமைப்பாளர் கட்டிடக் கலைஞர் மேஜர் மனோஜ் குமார் பகிர்ந்து கொண்டார். கப்பலில் பயன்படுத்தப்பட்ட எஃகு மூன்று ஈபிள் கோபுரங்களுக்குச் சமமானது. கப்பலின் உள்ளே இரண்டு ஆபரேஷன் தியேட்டர்கள் கொண்ட முழு செயல்பாட்டு மருத்துவ வளாகம் உள்ளது. குறைந்தது 2,000 ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு சமையலறை உள்ளது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கப்பலில் 150 கிமீ குழாய்கள் மற்றும் 2,000 வால்வுகள் உள்ளன, மேலும் திடமான ஹல் படகுகள், ஏர் கண்டிஷனிங் மற்றும் குளிர்பதன ஆலைகள் மற்றும் ஸ்டீயரிங் கியர் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

டற்படையின் கூற்றுப்படி, இது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட MiG-29K போர் விமானம் மற்றும் Kamov-31 முன்னெச்சரிக்கை ஹெலிகாப்டர்களையும் சுமந்து செல்லும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர்கள் (ALH) மற்றும் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் தயாரித்த MH-60R மல்டிரோல் ஹெலிகாப்டர்களையும் சுமக்கும் தன்மை கொண்டது.

' isDesktop="true" id="795428" youtubeid="i6ThUnw89tY" category="explainers">

இந்தியக் கடற்படை எத்தனை விமான கேரியர்களை இயக்குகிறது?

விக்ராந்த் கடற்படையில் சேர்வதற்கு முன்பு இந்திய கடற்படையுடன் இயங்கி வந்த ஒரே விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகும், இது முந்தைய சோவியத் மற்றும் ரஷ்ய கடற்படையில் ‘அட்மிரல் கோர்ஷ்கோ’ என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டு 2013 இல் இந்தியாவால் வாங்கப்பட்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டதாகும்.

First published:

Tags: Indian Navy