ஹோம் /நியூஸ் /Explainers /

BA.2.12 கொரோனா வகை என்றால் என்ன? ஏன் கவலை அளிக்கிறது?

BA.2.12 கொரோனா வகை என்றால் என்ன? ஏன் கவலை அளிக்கிறது?

ஓமிக்ரான் தொற்று வகை தனது ஸ்பக் பகுதிகளில்  உள்ள அமினோ அமிலங்களில் குறிப்பாக (Receptor Binding Dominee -RBD மற்றும் N -terminal Domain) எண்ணற்ற மாறுபாடுகளை கொண்டுள்ளது

ஓமிக்ரான் தொற்று வகை தனது ஸ்பக் பகுதிகளில்  உள்ள அமினோ அமிலங்களில் குறிப்பாக (Receptor Binding Dominee -RBD மற்றும் N -terminal Domain) எண்ணற்ற மாறுபாடுகளை கொண்டுள்ளது

ஓமிக்ரான் தொற்று வகை தனது ஸ்பக் பகுதிகளில்  உள்ள அமினோ அமிலங்களில் குறிப்பாக (Receptor Binding Dominee -RBD மற்றும் N -terminal Domain) எண்ணற்ற மாறுபாடுகளை கொண்டுள்ளது

 • 3 minute read
 • Last Updated :

  தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா  பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு, BA.2.12 என்ற புதிய மாறுபாடு முக்கிய பங்களிப்பதாக ஆய்வளாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

  B.1.1.529 அல்லது ஒமைக்ரான் என்ற புதிய வகை உருமாறிய சார்ஸ் – கோவ்-2 வைரஸ் (கொரோனா வைரஸ் - 2019 முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது),  2021 நவம்பர் மாதம்  தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அதிவேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை தாக்கி அழிக்கும் தன்மை பெற்றதாகவும் பார்க்கப்பட்டது. எனவே, இதனை கவலையளிக்கக்கூடிய மாறுபாடாக உலக சுகாதார மையம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. இந்தியாவில், மூன்றாவது அலை ஏற்பட முக்கிய பங்கு வகித்தது.

  ஒமைக்ரான் வகையில் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளன (Sub-Lineage). இதில், குறிப்பாக பிஏ.1, பிஏ .2 ஆகிய இரண்டு உட்பிரிவுகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

  தற்போது இந்த பிஏ.2 வகையோடு தொடர்புடைய , பிஏ 2.12.1 மற்றும் பிஏ 2.12 என்ற புதிய உருமாறிய துணை வகை தொற்றுகள், அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

  ஏப்ரல் 1 முதல் 16 வரையிலான அமெரிக்காவின் தொற்று பரவல் போக்கு - பிஏ 2.12.1 பரவலின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கிறது.

  ஏன் இந்த புதிய மாறுபாடு அதிக கவனம் பெறுகிறது? 

  கொரோனா வைரசில் உள்ள புரதம்  ( Spike Protein) , ஏற்பியுடன் இணைக்கும் பகுதியில்(Receptor Binding Dominee -RBD ) என்ற சிறப்பு ஏற்பிப் பகுதியை பெற்றுள்ளது. இது, மனித சுவாசப்பாதையில் எபிதீலியல் செல்களில் உள்ள ACE2 மற்றும் TMPRSS2 ஆகிய ஏற்பிகளுடன் தொடர்பு  கொள்ளும்போது, நமது செல்லுடன் இணைகிறது.

  ஆனால், புதிய உருமாறிய கொரோனா தொற்று TMPRSS2 பயன்படுத்தாமல் வெறும் ACE2 ஏற்பியை மட்டும் பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். மேலும், பழைய கொரோனா மாறுபாடுகள், மனித செல்லின் சைட்டோபிளாசத்துடன் இணைவு கொண்டு (Fused )  தனது மரபணுப் பொருட்களை (ஆர்ஏன்ஏ) கலக்கிறது. ஆனால், ஏற்பி மூலம் உள்நுழைந்த ஓமிக்ரான் வகை தொற்று Endoscope என்ற குமிழி  மூலம் தன்னை கட்டமைத்துக் கொள்கிறது. மனித செல்லுக்குள் குமிழியாக நுழைந்த பின்பு தனது மரபணுப் பொருட்களை வெளிவிடுகிறது. அதன்காரணமாக, பாதிக்கப்பட்ட மனித செல்லில் இருந்து ஆயிரக்கணக்கான வைரஸ் நகல்களை மிகத் துல்லியமாக தயாரித்து விடுகிறது.

  மற்ற கொரோனா வகை மாறுபாடுகள் நுரையீரல் உள்ள மனித செல்லை பாதித்து, தனது நகல்களை தயாரிக்கிறது. ஆனால், ஓமிக்ரான் வகை குமிழி வடிவில் வருவதால், சுவாசப்பாதையில் இருந்தே தனது தாக்குதலை தொடங்குகிறது.

  ஓமிக்ரான் மாறுபாடு நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு தாக்கி அழிக்கிறது?:

  கொரோனா தொற்று கிருமியின் ஆண்டிஜெனுக்கு  எதிரான நமது உடம்பில் ஆண்டிபாடிகளை உற்பத்தி செய்வதே தடுப்பூசிகளின் பிரதமான நோக்கமாகும்.  வைரஸின் சிறப்பு ஏற்பிப் பகுதி (RBD)  ACE2 ஏற்பியுடன் இணைய முற்படும் போதே தடுப்பூசிகள் உடனடியாக செயல்பட்டு ஆடை எதிர்த்து ஆண்டிபாடிகளை உற்பத்தி செய்து முளையிலே கிள்ளி விடும்.

  ஆனால், ஓமிக்ரான் தொற்று வகை தனது ஸ்பக் பகுதிகளில்  உள்ள அமினோ அமிலங்களில் குறிப்பாக (Receptor Binding Dominee -RBD மற்றும் N -terminal Domain) எண்ணற்ற மாறுபாடுகளை கொண்டுள்ளது.    

  இதன் காரணமாக, தடுப்பூசியில் இருந்து பெறப்படும் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து  விடுபடும் தன்மை ஓமிக்ரான் தோற்று வகைக்கு இருப்பதாக கூறப்படுகிறது.    

  தற்போது உலகை அச்சுறுத்தி  வரும் பிஏ 2.12.1 வகை கொரோனா தொற்று ஓமிக்ரானின் உட்பிரிவாக இருந்தாலும் (Omicron BA2 sublineages), அதிகம் பரவ கூடியதாகவும், வீரியம் கொண்டதாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்ற்னர். இதற்கு, முக்கிய காரணம் L452 என்ற மரபணு மாற்றமாகும்.

  ஏனெனில், 2020 அக்டோபர் மாதம் மகாராஷ்டிராவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட (B.1.617- டெல்டா வகை) இந்தியாவில் இரண்டாவது அலை உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த டெல்டா வகையிலும் இந்த L452 மாறுபாடு காணப்பட்டது.

  நியூ யார்க் நகரில் புகை வகை கொரோனா மாறுபாடு காரணமாக புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகிறது

  ஆஸ்திரேலியா நாட்டிலும் புதிய வகை தொற்றின் பாதிப்பு விகிதம் அதிகரிக்காது தொடங்கியுள்ளது.

  நுரையீரல் போன்ற உறுப்புகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மிகப்பெரிய நெருக்கடியை இந்தியா சந்தித்தது. தற்போது வரை, டெல்டா வகை மிகவும் கவலையளிக்கக் கூடியதாக (Variation Of Concern) வகைப்படுத்தப்பட்டுள்ளது

  Published by:Salanraj R
  First published:

  Tags: CoronaVirus, Omicron