நடிகை மீனாவின் கணவர் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகள் காரணமாக உயிரிழந்த நிலையில், கொரோனாவுக்கு பிந்தைய உடல்நல பாதிப்புகள் குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த பின்னர், ஒருவருக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம் என விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
கொரோனா வைரஸ் ஒருவரின் உடலிலிருந்து குறிப்பிட்ட காலத்துக்குள் விலகிவிட்டாலும், அது உடலில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் அதிகமாக காணப்படுவதாக தொற்று நோய் நிபுணர்கள் கூறுகின்றனர். மாரடைப்பு, இதய தசைகள் வலுவிழப்பது, நுரையீரல் தொற்று, நுரையீரல் ரத்தக் கட்டு, நுரையீரலுக்கு வெளியே காற்று அல்லது நீர் கோர்த்து நிற்பது உள்ளிட்ட பாதிப்புகள் கொரோனாவுக்குப் பின் ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
நுரையீரலில் உள்ள ஆல்வியோலே என்ற பலூன் போன்ற பகுதி தான் நுரையீரலுக்குள் ஆக்சிஜன் செல்ல வழி செய்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு இந்தப் பகுதி பாதிக்கப்பட்டு வடு போல் ஆகிவிடுறது. இதனால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதுபோன்ற கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க உரிய மருந்து கிடையாது. எனவே தசைகளை வலுப்படுத்த சில பயிற்சிகள் செய்யலாம் என்றும், நுரையீரலில் ரத்தக் கட்டு இருந்தால் அதை கரைக்க மருந்து கொடுக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கொரோனா என்ற வைரஸை எதிர்க்க உடலின் எதிர்ப்பு சக்தி போராடுகிறது. அந்த போராட்டத்தின்போது உடலின் பிற உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மாரடைப்பு, மூளை பக்கவாதம், சிறுநீரக கோளாறு ஆகியவை ஏற்படும் என்று குறிப்பிடுகின்றனர் மருத்துவர்கள்.
Must Read : வரிகள் தொடங்கி அபராதம் வரை.. ஜூலை 1 முதல் 6 முக்கிய மாற்றங்கள்! - கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க
இதுவரை சர்வதேச அளவில் நுரையீரல் பாதிப்புகள் மட்டும் தான் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் பல்வேறு பாதிப்புகள் நோயாளிகளிடம் காணப்படுகின்றன என்று கூறும் மருத்துவர்கள், இவை சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகிவிடலாம் என்பதால் கொரோனாவுக்கு பின் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது அவசியம் என வலியுறுத்துகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Corona impact, Covid-19