Home /News /explainers /

மோடியைப் புகழ்ந்த இளையராஜா, பாக்யராஜ்- சர்ச்சைகளும் பின்னணியும்

மோடியைப் புகழ்ந்த இளையராஜா, பாக்யராஜ்- சர்ச்சைகளும் பின்னணியும்

விமர்சனம் செய்பவர்களை குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள் என பிரதமருக்கு தான் டிப்ஸ் கொடுப்பதாக பாக்யராஜ் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

விமர்சனம் செய்பவர்களை குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள் என பிரதமருக்கு தான் டிப்ஸ் கொடுப்பதாக பாக்யராஜ் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

விமர்சனம் செய்பவர்களை குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள் என பிரதமருக்கு தான் டிப்ஸ் கொடுப்பதாக பாக்யராஜ் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, சமீபத்தில் ‘அம்பேத்கரும் மோடியும்’ என்ற புத்தகத்தின் முன்னுரையில், ‘அம்பேத்கர் நிச்சயமாக பிரதமர் மோடியின் ஆட்சியைப் பற்றி பெருமைப்படுவார். அம்பேத்கருக்கும் மோடிக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் வறுமையையும் அடக்குமுறையையும் அனுபவித்தவர்கள். ஆகவே, இந்த புத்தகம் சில விஷயங்களை முன்னிலைப்படுத்துவதால் இதனை இளைய தலைமுறைக்கு பரிந்துரைக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

இளையராஜாவின் இந்த கருத்து, தமிழகத்தில் பல தரப்பினரின் எதிர்ப்புகளை பெற்றது. அவரின் இக்கருத்துக்கு திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் அவருக்கு எதிராக பல்வேறு கருத்துகள் வெளியாகின. இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக வந்த கருத்துகளுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் கண்டனம் தெரிவித்ததோடு, திமுக மீதும் குற்றம்சாட்டினார்.

அது குறித்து ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இளையராஜா செய்த குற்றம் என்ன? திமுகவுக்கு பிடிக்காத கண்ணோட்டத்தை அவர் கொண்டிருக்கிறார் என்பதால் இந்த எதிர்ப்புகளா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்கிறது, அதை இளையராஜாவுக்கு மறுத்ததன் மூலம், திமுக தனது தலித் விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான தன்மையைக் காட்டியுள்ளது’ என்று தெரிவித்திருந்தார்.

குறைப்பிரசவம்... மன்னிப்பு கேட்ட பாக்யராஜ்

பிரதமர் மோடியை புகழ்ந்தும், அம்பேத்கருடன் ஒப்பிட்டும் இசையமைப்பாளர் இளையராஜா கூறிய கருத்துக்கு ஆதரவாக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் அறிக்கை வெளியிட்டார். அதில், கடந்த சில நாட்களாக இளையராஜா மீது வரும் கடுமையான விமர்சனங்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அதோடு, தனது ட்விட்டர் பதிவில், ‘வெறுப்பு அரசியலை விதைப்பவர்கள் பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டுப் பேசியதற்காக உலகப் புகழ்பெற்ற இசைஞானி இளையராஜாவை இப்படிக் கடுமையான வார்த்தைகளோடு எதிர்கொள்வது சரியா?’ என்ற கேள்வியோடு பதிவிட்டார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து கூறுகையில், அம்பேத்கரை பிரதமர் மோடியுடன் இளையராஜா ஒப்பிட்டுப் பேசியது அவரின் கருத்து என கூறினார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, ‘அது அவருடைய கருத்து. அவரிடம்தான் கேட்க வேண்டும்’ என்றார் உதயநிதி. இந்த ஒப்பீடு சரியா என நினைக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘எங்கள் தலைவர் கட்சியில் இருக்கும் யாரும் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அது யாரோ ஒருவரின் தனிப்பட்ட கருத்து’ என்றார் உதயநிதி.

அதே நேரத்தில், அம்பேத்கரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு பேசிய இளையராஜாவின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர் கருத்துகள் வந்த நிலையில், நேற்று முன் தினம் அவரது மகனும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தான் கருப்பு டி-சர்ட் மற்றும் வேட்டி அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்’ என்ற கருத்துடன் பதிவிட்டது  தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் திராவிடம் குறித்த விவாதத்தை எழுப்பியது.

இதற்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘யுவன் கருப்பு என்றால், நான் அண்டங்காக்கை கருப்பு, நானும் சுத்த திராவிடன்தான்’ என்று கூறினார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், ‘ஒருவர் கருப்பாக இருப்பதால் அவர்கள் திராவிடர்கள் என்று அர்த்தம் இல்லை’ என்று கூறியுள்ளார். ‘அவர் கருப்பு என்றும் அதனால் திராவிடர் என்றும் கூறுகிறார். தென்னாப்பிரிக்காவில் உள்ள அனைவரும் கருப்பர்கள். அவர்களும் திராவிடர்களா? எருமைமாடு கூடதான் கருப்பாக இருக்கிறது. அதுவும் திராவிடம் என்று அர்த்தமா?’ என யுவன் ஷங்கர் ராஜாவின் பதிவு குறித்து சீமான் விமர்சித்திருந்தார்.

இது எல்லாம் ஒருபக்கம் இருக்க, பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் கூறியது அடுத்த சர்ச்சையை கிளப்பியது. ‘பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட, திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

அப்போது பேசிய பாக்யராஜ், இந்தியாவிற்கு மோடி போன்றவர் தேவை. பிரதமரை விமர்சனம் செய்ய ஆட்கள் எப்போதும் தயாராக இருக்கின்றனர். அதற்கு செவி சாய்க்காமல் செல்ல வேண்டும். விமர்சனம் செய்பவர்களை, குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள் என பிரதமருக்கு தான் டிப்ஸ் கொடுப்பதாக பாக்யராஜ் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இது தொடர்பாக டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவரும் சமூக மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆர்வலருமான தீபக் நாதன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாற்றுத்திறனாளிகள் குறித்த பாக்யராஜ் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். அரசியலில் இருப்பவர்கள் மாற்றுத்திறனாளிகளை மதிக்க விரும்புவதில்லை. முதிர்ச்சியடையாமல் பிறந்த குழந்தைகள் குறித்து உங்களுக்கு என்ன தெரியும். உங்கள் அரசியல் லாபத்திற்காக எங்களை ஏன் கேவலப்படுத்த வேண்டும். மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலி ! அக்குழந்தைகளின் பெற்றோர் வலி தெரியுமா நடிகர் பாக்கியராஜ் அவர்களே? அரசியல் எதிரிகளை விமர்சிப்பவர்கள், குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நீங்கள் சொல்வது ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறைத்து பேசி, அரசியல் ஆதாயம் காணும் முயற்சி.


அரசியலில் உங்கள் எதிரிகளை விமர்சிக்க ஏன் ஊனத்தை கையிலெடுக்கிறீர்கள்? மாற்று திறனாளிகளை ஏன் இழிவுப்படுத்த விரும்புகிறீர்கள்? நாங்கள் இயற்கையின் அங்கமில்லையா? எங்களுக்கும் மான உணர்ச்சி உண்டு ஐயா! தொடர்ந்து அரசியல்வாதிகள் புண்படுத்துகிறார்கள். உளவியல் சமூக குறைபாடுகளை மதிக்கவும்’ என்று தீபக் நாதன் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, பாக்யராஜின் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், சில மணி நேரத்தில் இயக்குநர் பாக்யராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நான் பாஜக கிடையாது, எனது மனதில் திராவிடத் தலைவர்களின் சிந்தனைகளே ஓடிக்கொண்டிருக்கின்றன. பெரியார், அண்ணா, கலைஞர், ஜீவா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் நினைவுகளை மனதில் ஏந்தி உள்ளேன், என தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்பதாக இயக்குநர் பாக்யராஜ் கூறியுள்ளார்.
Published by:Archana R
First published:

Tags: Explainer, Ilaiyaraja, Narendra Modi, Tamil Nadu

அடுத்த செய்தி