ஒரு ஆண், குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?... பெண்ணிலிருந்து, ஆணாக மாறியவர்களிடம் சாத்தியம் என்பது சமீபத்தில் சஹத் - ஜியா தம்பதி மூலம் பலருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆணாக மாறியபின் எப்படி இது சாத்தியமாகிறது?
நாம், நினைப்பது போன்று இது கடினமான விஷம் இல்லை, பொதுவான விஷயம்தான். பிறக்கும்போது ஆணாக இருக்கும், சிலர் பிற்காலத்தில் ஆணாகவே இருப்பதில்லை. அதேபோல பிறக்கும் போது பெண்ணாக இருக்கும் சிலரும் பெண்ணாகவே தொடருவதும் இல்லை. அவர்கள் திருநங்கை அல்லது திருநம்பி என்று அறியப்படுகின்றனர். இதை மருத்துவத்தில் AFAB மற்றும் AMAB என்ற குறிப்பிடப்படுகிறது. அதாவது “assigned female/male at birth” என்பதே விரிவாக்கம்.
திருநங்கை, திரு நம்பிகள் உருவாகக் காரணம்?
மனித உடலில் ஒவ்வொரு செல்களிலும் 46 குரோமோசோம்கள் இருக்கும். குரோமோசோம் என்பது மனித உடலை பற்றிய தகவல் அடங்கிய மூலக்கூறு. இந்த 46 குரோமோசோம்களும் 23 ஜோடிகளாவே இருக்கின்றன. இதில் முதலில் இருக்கும் 22 ஜோடி குரோமோசோம்களை ஆட்டோ சோம் என்று குறிப்பிடுகின்றனர். இது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். 23வது ஜோடி குரோமோசோமானது பாலியலை முடிவு செய்யும் குரோமோசோமாக. 23வது குரோமோசோம் ஆணாக இருந்தால் XY என்றும், பெண்ணாக இருந்தால் XX என்றும் இடம்பெறுகிறது.
பெண்ணின் கருமுட்டையில் XX குரோமோசோம் மட்டும் இடம்பெற்றிருக்கும். அதுவே ஆண்ணின் விந்தணுவில் XY குரோமோசோம்கள் இருக்கும். அதில் எந்த குரோமோசோம் கருமுட்டையுடன் இணையுமோ, அதுவே குழந்தையின் பாலினமாக அமைகிறது.
ஒரு கரு உருவாகி 7வது வாரத்திலிருந்து, 12-வது வாரத்துக்குள் அது ஆணா இல்லை பெண்ணா என்பது முடிவாகிறது. உடலில் இருக்கும் proto gonads என்ற சதை அமைப்பு, பெண்ணுறுப்பாகவோ, பெண்ணுறுப்பாகவோ வளர்ச்சியடையும். XY குரோமோசோம் கொண்ட சில குழந்தைகளில் Y குரோமோசோம் 7 வாரங்கள் கடந்தும் பாலின உறுப்பு வளர்ச்சியடையாமல் அப்படியே இருக்கும். அப்படி இருந்தால், அது பெண்ணுறுப்பு வளரத்தொடங்கும். அந்த குழந்தை பிறக்கும் போது நமக்கும், பெண் குழந்தையாகவே தெரியும். அந்த குழந்தைகள் வளர வளர ஆண்களின் குணம் வெளிப்படும். அவர்களே திருநம்பியாக மாறுகின்றனர்.
பிற்காலத்தில் அவர்கள், transmen-ஆக மாற முடிவு செய்கையில், Masculinizing hormone தெரபி வழங்கப்படுகிறது. அதாவது டெஸ்டோஸ்டெரோன் (Testosterone) ஹார்மோன்ஸ் ஊக்குவிக்கப்படுகிறது. இதனால், தாடி வளர்ச்சியடைவது போன்ற சில உடல் மாற்றங்கள் ஏற்படும். அத்தோடு, அவர்களின் மார்பங்கள் அகற்றப்பட்டு முற்றிலும் ஆணாக மாறும் அறுவை சிக்கை எடுத்துக்கொள்கின்றனர்.
சஹத் - ஜியா விஷயத்தில் அவர்கள் முழுவதும் ஆணாகவோ, பெண்ணாகவே மாறும் சிகிச்சை முடிவடையவில்லை. எனவே அவர்களுக்குள் இன்னும் பழைய தன்மை அப்படியே இருக்கும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
டெஸ்டோஸ்டெரோன் ஹொர்மோன்ஸ் உள்ளவர்கள், பெண்ணாகவோ ஆணாவோ இருந்தாலும் அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. பெண்ணிலிருந்து ஆணாக மாறும், திரும்நம்பிகளுக்கு டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன்ஸ் தூண்டப்படுகிறது. அது நிறுத்தப்படுகையில், அவர்கள் கருத்தரிக்க முடியும். ஹார்மோன்ஸ்களின் தூண்டுதலைக் கட்டுப்படுத்தி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை 2013-ம் ஆண்டில் journals.lww.com உறுதியும் செய்துள்ளது. உலக அளவில் தற்போது வரை திருநங்கை மற்றும் திருநம்பி இணைந்து குழந்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pregnancy, Trans Community, Transgender