ஆதாரில் உங்கள் மொபைல் எண்ணை நீங்களே ஆன்லைனில் அப்டேட் செய்ய முடியுமா?

ஆதார் கார்டு - மாதிரி படம்

உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து வருமான வரி ரிட்டர்ன்ஸ் வரை பல அரசு திட்டங்கள் என இப்போது அனைத்தும் ஆதாருடன் இணைக்கப்பட்டு விட்டன

  • Share this:
உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில் குடிமக்களுக்கான அடையாள ஆவணத்தின் மிக முக்கியமான வடிவமாக ஆதார் அடையாள அட்டை மாறியுள்ளது. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கமாகும்.

உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து வருமான வரி ரிட்டர்ன்ஸ் வரை பல அரசு திட்டங்கள் என இப்போது அனைத்தும் ஆதாருடன் இணைக்கப்பட்டு விட்டன. உங்கள் ஆதாரை நிதி சேவைகளுடன் இணைப்பதன் மூலம் அரசு வழங்கும் வெவ்வேறு மானியங்களை பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பெறலாம். இதற்காக பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு உறுதிப்படுத்தல் செய்தி அனுப்பப்படுகிறது.

உங்கள் மொபைல் எண் ஆதாரில் பதிவு செய்யப்படாவிட்டால், நீங்கள் அத்தகைய மெசேஜை பெற மாட்டீர்கள் மற்றும் நீங்கள் பெற தகுதியான எந்த ஒரு அரசு நன்மைகளையும் நீங்கள் பெறுவதில் தடை ஏற்படும். அதே போல தற்போது அரசு மற்றும் பல நிறுவனங்கள் வழங்கும் பல ஆன்லைன் சேவைகளுக்கு OTP மூலம் ஆதார் அட்டை சரிபார்ப்பு தேவைப்படுகிறது. இந்த சேவைகளை நீங்கள் பெற வேண்டுமானால், உங்கள் மொபைல் எண்ணை UIDAI (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) டேட்டாபேஸில் அப்டேட் செய்வது அவசியம்.

ஆதாரில் மொபைல் எண்ணை புதுப்பிப்பது அல்லது சேர்ப்பது எப்படி?

உங்களது ஆதார் கார்டில் உங்களது மொபைல் எண்ணை நீங்கள் பதிவு செய்யவில்லை என்றாலோ அல்லது ஆதாரில் இருக்கும் தற்போதைய மொபைல் எண்ணுக்கு பதிலாக நீங்கள் உங்களது வேறு எண்ணை மாற்ற விரும்பினால் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு செல்வதன் மூலம் அதை எளிதாக செய்யலாம். இந்த மொபைல் எண் செயல்பாட்டிற்கு உங்கள் ஆதார் அட்டையைத் தவிர வேறு எந்த ஆவணமும் நீஞ்கள் எடுத்து செல்ல தேவையில்லை. மொபைல் எண் சேர்த்தல் மற்றும் மாற்றுவதற்கான விண்ணப்ப படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்து செயல்முறைக்கு பயோமெட்ரிக் அங்கீகாரத்தை செய்ய வேண்டும்.

ஆதார் மையத்தில் இருக்கும் நிர்வாகி உங்களிடம் ஒரு ஒப்புகை சீட்டை கொடுப்பார். இந்த சீட்டில் URN எனப்படும் புதுப்பிப்பு கோரிக்கை எண் குறிப்பிடப்பட்டிருக்கும். உங்கள் ஆதார் அப்டேட்டின் ஸ்டேட்ஸை கண்டறிய இந்த எண்ணைப் பயன்படுத்தலாம் . உங்கள் மொபைல் எண்ணை ஆதாரில் புதுப்பித்தவுடன், நீங்கள் மற்றொரு ஆதார் அட்டையைப் பெற தேவையில்லை. உங்கள் மொபைல் எண் உங்கள் ஆதாரில் பதிவுசெய்யப்பட்டவுடன் பல வசதிகளைப் பெறுவதற்காக நீங்கள் ஆதார் OTP-களைப் பெறத் தொடங்குவீர்கள். ஆதார் அப்டேட் ஸ்டேட்ஸை செக் செய்ய, நீங்கள் UIDAI-ன் கட்டணமில்லா எண்ணை 1947-ஐ அழைக்கலாம்.

ஆன்லைன் மூலம் ஆதாரில் மொபைல் எண்ணை புதுப்பிக்கலாமா?

ஆதார் யூஸர்களின் டேட்டாக்களை பாதுகாக்க, ஆதார் அட்டைகளில் ஆன்லைனில் மொபைல் எண்களை அப்டேட் செய்வதை UIDAI ரத்து செய்துள்ளது. ஆதார் மையத்திற்கு நேரடியாக சென்று உங்கள் மொபைல் எண் தொடர்பான அப்டேட்களை செய்து கொள்வதே இப்போது இருக்கும் ஒரே வழி. ஆனால் ஆதார் மையத்தில் நீங்கள் செலவிடும் நேரத்தை குறைக்க உங்கள் மொபைல் எண்ணை மாற்ற அல்லது புதுப்பிப்பதற்கான விண்ணப்ப படிவத்தை நீங்களே டவுன்லோட் செய்து கொள்ளலாம். எனினும் ஆன்லைனில் உங்கள் முகவரி போன்ற பல்வேறு விவரங்களை புதுப்பிக்க / மாற்றும் விருப்பம் நடைமுறையில் உள்ளது.

https://ssup.uidai.gov.in என்ற வெப்சைட்டிற்கு சென்று, வலைத்தளத்தின் முகப்புப்பக்கத்தில் இருக்கும் ‘Update Aadhaar option’ சென்று அதில் கூறப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றவும். புதுப்பிப்பிற்காக உங்கள் புதிய முகவரி ஆதாரத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை நீங்கள் அப்லோட் செய்ய வேண்டும். புதுப்பிப்புக்கு தேவையான முகவரி ஆதாரம் இல்லாத யுஸர்கள், Update Address via Secret Code என்ற விருப்பத்தை பயன்படுத்தலாம். இதற்கு உங்கள் புதிய முகவரிக்கு முகவரி ஆதாரம் மற்றும் ‘verifier-ன்’ ஆதார் விவரங்கள் தேவைப்படும்
Published by:Arun
First published: