ஹோம் /நியூஸ் /Explainers /

Facebook புகைப்படங்கள், வீடியோக்களை Google ஃபோட்டோஸுக்கு டிரான்ஸ்ஃபர் செய்வது எப்படி?

Facebook புகைப்படங்கள், வீடியோக்களை Google ஃபோட்டோஸுக்கு டிரான்ஸ்ஃபர் செய்வது எப்படி?

Facebook

Facebook

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்ய பல்வேறு ஆப்ஸ்கள் உள்ளன. சமீபத்தில், கூகுள் ஃபோட்டோஸுக்கு ஃபேஸ்புக்கில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்யும் அம்சத்தை ஃபேஸ்புக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  சமூக வலைத்தளங்களில், குறிப்பாக ஃபேஸ்புக்கில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அப்லோடு செய்து பகிர்வது வழக்கமானது. உங்களுடைய மொபைல் தொலைந்து போனாலோ அல்லது மொபைலில் இருந்த புகைப்படங்கள் அழிந்து போனாலோ, நீங்களே தெரியாமல் நீக்கிவிட்டாலோ, உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் பத்திரமாக இருக்கும். அது மட்டுமின்றி, நீங்கள் அப்லோடு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்கள் டவுன்லோடு செய்யும் வசதியும் உள்ளது.

  ஃபேஸ்புக்கில் உங்கள் புகைப்படங்கள் மற்றும் பிற மீடியா தரவுகளை நீங்கள் கூகுள் ஃபோட்டோஸ் உள்ளிட்ட மற்ற தளங்களுக்கு டிரான்ஸ்ஃபர் செய்யலாம். இதனால், உங்களுடைய பெர்சனல் புகைப்படங்கள் டவுன்லோடு செய்வது மேலும் எளிதாகிறது. Transfer a Copy of Your Information என்ற ஃபேஸ்புக் அம்சம் வழியே, உங்கள் தகவலை நகலெடுத்து, மற்றொரு தளத்துக்கு டிரான்ஸ்ஃபர் செய்யலாம்.

  Also Read : உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கிறதா? கண்டுபிடிக்க சூப்பரான டிப்ஸ்!

  உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டிரான்ஸ்ஃபர் செய்வது எப்படி?

  பின்வரும் வழிமுறைகளின் படி, நீங்கள் கூகுள் ஃபோட்டோஸில் உங்கள் மீடியா தரவுகளை டிரான்ஸ்ஃபர் செய்யலாம்..,

  மொபைலில் உங்கள் ஃபேஸ்புக் செயலியை திறந்து கொள்ளுங்கள். Settings என்ற பகுதிக்கு சென்று, வலது மூலையில் இருக்கும் ஹாம்பர்கர் மெனுவை தட்டவும். “Settings and Privacy” என்ற தேர்வு வரும் வரை, நீங்கள் திரையை ஸ்க்ரோல் செய்யவும். பின்பு, மீண்டும் “Settings” என்பதை தட்டி, அதைத் தேர்வு செய்ய வேண்டும்.

  உங்கள் மொபைல் திரையில் “Your Information” என்ற பகுதி வரும் வரை நீங்கள் திரையை ஸ்க்ரோல் செய்ய வேண்டும். அதற்குப் பிறகு, திரையில் நீங்கள் பின்வரும் செய்தியைப் பார்ப்பீர்கள். “Transfer a Copy of Your Information” என்ற கருவி காணப்படும். அதைக் கிளிக் செய்து, பின்பு ‘next’ என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.

  எந்த இடத்தில் அல்லது தளத்தில் நீங்கள் உங்கள் தரவுகளை டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்பினால், கூகிள் ஃபோட்டோஸ் சிறந்த தேர்வாகும்.

  நீங்கள் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்பும் படங்களை தேர்ந்தெடுத்த பிறகு, ‘Next’ என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். நீங்கள் கூகிள் ஃபோட்டோஸ் கணக்கில் சைன்-இன் செய்ய வேண்டும். அடுத்ததாக, நீங்கள் உங்கள் கூகிள் ஃபோட்டோஸ் கணக்கில் புகைப்படங்களை சேர்க்க ஃபேஸ்புக்கிற்கு அனுமதி அளிக்க வேண்டும். பின்னர், டிரான்ஸ்ஃபர் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

  நீங்கள் டிரான்ஸ்ஃபர் செய்த உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் உங்கள் ஃபேஸ்புக் கணக்கிலும் இருக்கும்.

  குறிப்பு: நீங்கள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மொத்தமாக டிரான்ஸ்ஃபர் செய்யலாம் அல்லது குறிப்பிட்ட ஆல்பம் அல்லது புகைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம். இந்த ஆப்ஷனை ஃபேஸ்புக் உங்களுக்கு வழங்குகிறது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Facebook, Google