Home /News /explainers /

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி.? முழு வழிமுறைகள்!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைப்பது எப்படி.? முழு வழிமுறைகள்!

வாக்காளர் அடையாள அட்டை - ஆதார்

வாக்காளர் அடையாள அட்டை - ஆதார்

Aadhaar with voter ID : ஆதார் நம்பரை ஓட்டர் ஐடி-யுடன் இணைக்க விரும்பினால் இன்டர்நெட், எஸ்எம்எஸ் அல்லது ஃபோன் கால் மூலமாக செய்யலாம்.

    மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட சமீபத்திய தேர்தல் மசோதாவின் படி, இந்திய குடிமக்களின் ஆதார் கார்டு அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்படும்.

    வாக்காளர் பட்டியல் டேட்டாவை (electoral roll data) ஆதார் அட்டையுடன் இணைக்கும் நோக்கில் இந்த வாரம் தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2021 லோக்சபாவில் ஒப்புதல் பெற்ற ஒரு நாள் கழித்து ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு முன்மொழிந்தார். தெரியாதவர்கள், வாக்காளர்களாகப் பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்களின் 12 இலக்க ஆதார் எண்ணைக் கேட்டுத் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த தேர்தல் பதிவு அலுவலர்களை அனுமதிக்கும் வகையில் புதிய மசோதா உள்ளது.

    இந்த புதிய மசோதா வாக்காளர்களாகப் பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்களின் அடையாளத்தை நிறுவ 12 டிஜிட் ஆதார் நம்பரை கேட்க, தேர்தல் பதிவு அலுவலர்களை (electoral registration officers ) அனுமதிக்கும். மசோதாவின் படி, வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ள நபர்களிடம் இருந்து பதிவுகளை அங்கீகரிக்க மற்றும் டூப்ளிகேட்களை தவிர்க்க வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆதார் எண்ணை பெறலாம். அதே போல இந்த மசோதாவின் ஒரு விதி, வாக்காளர் பதிவுக்கான கூடுதல் தகவல்களை வழங்குவது தன்னார்வமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, வாக்காளராக பதிவு செய்ய விரும்புவோர் அல்லது ஏற்கனவே பதிவு செய்துள்ள வாக்காளர்கள் தங்கள் ஆதார் நம்பரை வழங்குவது கட்டாயமில்லை. உங்கள் ஆதார் நம்பரை ஓட்டர் ஐடி-யுடன் இணைக்க விரும்பினால் இன்டர்நெட், எஸ்எம்எஸ் அல்லது ஃபோன் கால் மூலமாக செய்யலாம்.

    இதையும் படிங்க.. சென்னை மாநகராட்சி மூலம் கடன்.. யாரெல்லாம் பெற முடியும் முழு விபரம்

    வாக்காளர் அடையாள அட்டையுடன் உங்கள் ஆதார் கார்டை எவ்வாறு இணைப்பது என்பதை அறிய கீழ்காணும் படிகளை பார்க்கவும்..

    SMS மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது எப்படி.?

    * உங்கள் மொபைலில் SMS app-ஐ ஓபன் செய்து கொள்ளளவும்

    * புதிய மெசேஜ்-க்கு சென்று டைப் செய்யவும்

    * இந்த மெசேஜை 51969 அல்லது 166 என்ற நம்பருக்கு அனுப்ப வேண்டும்

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை போன் கால் மூலம் இணைப்பது எப்படி.?

    * உங்கள் போனிலிருந்து 1950 என்ற நம்பரை அழைக்கவும். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இந்த சேவை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

    * இந்த நம்பருக்கு கால் செய்த பிறகு நீங்கள் காதில் கேட்கும் வழிமுறைகளைப் பின்பற்றி, கேட்கப்பட்டபடி ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள விவரங்களை வழங்கவும்.

    இதையும் படிங்க.. ஆதார் கார்டில் பெயர் மற்றும் பிறந்த தேதியை எத்தனை முறை மாற்றலாம் தெரியுமா?

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இன்டர்நெட் மூலம் இணைப்பது எப்படி.?

    * வெப் பிரவுசரில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் உள்ள வாக்காளர் போர்ட்டலான https://voterportal.eci.gov.in/ என்பதற்கு செல்லவும்.

    * போர்ட்டலில் Login செய்ய உங்கள் இமெயில் அட்ரஸ், தொலைபேசி எண், வாக்காளர் அடையாள எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தவும். நீங்கள் போர்ட்டலின் புதிய யூஸராக இருந்தால் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும்.

    * Login செய்த பிறகு, உங்கள் மாவட்டம் மற்றும் மாநிலத்தை என்டர் செய்யவும். பின் உங்கள் பெயர், தந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற உங்களின் தனிப்பட்ட விவரங்கள் என்டர் செய்யவும்.

    இதையும் படிங்க.. கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பெயர் திருத்தம் செய்வது எப்படி? இதோ எளிய வழி

    * search பட்டனை கிளிக் செய்து அரசின் டேட்டாபேஸில் உங்கள் விவரங்களை காண முடியும்

    * பின் Feed Aadhaar No. ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் ஆதார் எண், வாக்காளர் அடையாள எண், பதிவு செய்யப்பட்ட இமெயில் அட்ரஸ் அல்லது உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை என்டர் செய்யவும்

    * இறுதியாக Submit பட்டனை கிளிக் செய்யவும்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Aadhar, Aadhar Mandatory, Voters ID

    அடுத்த செய்தி