Explainer: இனிக்காத இல்லற வாழ்வு - பரஸ்பர ஒப்புதல் விவாகரத்து முறை சிறந்த தீர்வு தருமா?

Explainer: இனிக்காத இல்லற வாழ்வு - பரஸ்பர ஒப்புதல் விவாகரத்து முறை சிறந்த தீர்வு தருமா?

மாதிரி படம்

பரஸ்பர ஒப்புதல் விவாகரத்தில் இரு தரப்பினரையும் ஒரே வழக்கறிஞர் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பெரியவர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணங்கள் அல்லது காதல் திருமணங்கள் என எந்த வகையான திருமண வாழ்க்கையிலும், மன ஒற்றுமை மற்றும் கருத்தொற்றுமை இல்லாத காரணத்தால் தம்பதியர் இடையே மிக பெரும் விரிசல் ஏற்படுகின்றன.

ஒரு சில தம்பதியர் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து சென்றாலும் தங்களுக்குள் ஏற்படும் மனக்கசப்புகளை சில நாட்கள் கழித்து தீர்த்து கொள்வர். ஆனால் ஒரு சில தம்பதியரின் விரிசலை ஆண்டுகள் கழிந்தாலும் சரி செய்ய இயலாது. சேர்ந்து வாழ்வதில் இல்லாத ஒற்றுமை விவாகரத்து செய்வதில் இருவருக்கும் இருப்பின் அது Mutual Consent Divorce எனப்படும் பரஸ்பர ஒப்புதல் விவாகரத்து செய்து கொள்வதற்கு வழிவகுக்கிறது.

பரஸ்பர சம்மதத்தால் பெறும் விவாகரத்து என்றால் என்ன?

கணவன்-மனைவி இருவரும் தாங்கள் இருவரும் இணக்கமாக இனி எப்போதும் ஒன்றாக வாழ முடியாது என்பதை ஒப்புக் கொள்ளும் போது பரஸ்பர சம்மத விவாகரத்து செய்வது என்பது சாத்தியமாகிறது. விவகாரத்தில் பல வகை இருப்பினும் பரஸ்பர சம்மத விவாகரத்து முறையே விவாகரத்துக்கு சிறந்த தீர்வு என கருதப்படுகிறது.

பரஸ்பர ஒப்புதல் விவாகரத்து மனுவை (இந்து திருமணச் சட்டம், 1955-ன் பிரிவு 13 பி இன் கீழ்) மற்றும் (சிறப்பு திருமணச் சட்டம், 1954 இன் பிரிவு 28-ன் கீழ்) குடும்ப நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதன் மூலம் நீங்கள் விவாகரத்து செய்யலாம்.

விவாகரத்து மனுவை எங்கே தாக்கல் செய்வது.?

பரஸ்பர ஒப்புதல் விவாகரத்து மனுவை திருமணம் நடந்த பகுதியில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் அல்லது இருவரும் கடைசியாக ஒன்றாக வசித்த இடம் அல்லது துணை வசிக்கும் இடத்தின் அருகிலுள்ள குடும்ப நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.

வழக்கறிஞர் தேவையா.?

வக்கீல் இல்லாமல் தனியாக பரஸ்பர ஒப்புதல் விவாகரத்து மனு தாக்கல் செய்வதற்கு தடை இல்லை என்றாலும், அதற்கு சிறப்பு வரைவு(drafting) தேவைப்படுகிறது. மேலும் துணையை பிரியும் போது உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய ஒரு வழக்கறிஞரின் வழிகாட்டுதலை பெறுவது நல்லது என எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது.

பரஸ்பர சம்மத விவகாரத்திற்கான செயல்முறை என்ன?

இந்து திருமணச் சட்டம், 1955 இன் பிரிவு 13 பி (1) இன் கீழ் முதல் மனு, முதல் மனுவில் அறிக்கையைப் பதிவுசெய்த பிறகு, குறைந்தபட்சம் 6 மாதங்கள் மற்றும் அதிகபட்சம் 18 மாதங்கள் என்ற சட்டரீதியான கூலிங் பீரியட் எனப்படும் சமாதானத்திற்கான நேரம் கொடுக்கப்படும். இந்த காலகட்டம் தம்பதியர்த் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய கொடுக்கப்படும். இதன் பிறகும் இருவருக்கும் இடையே பிரிவு இருந்தால் விவாகரத்து வேண்டும், என்று கோரிக்கையுடன் கூடிய மனுவை அவர்கள் தாக்கல் செய்ய வேண்டிய அடுத்த கட்டத்திற்கு செல்கிறார்கள்.

கூலிங் பீரியடை தவிர்க்க முடியுமா.?

சமாதானத்திற்காக அளிக்கப்படும் இந்த காலகட்டத்திற்கு 4 குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் விலக்கு அளிக்க முடியும் என்றும் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் இந்த பீரியட் தள்ளுபடி செய்யப்படலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. இதற்காக செகண்ட் மோஷன் 13 பி (2) க்கான மனுவுடன் கூடுதல் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட வேண்டும். இது கூலிங் பீரியட் ஏன் பொருந்தாது என்று பட்டியலிடும்.

Also read... Explainer: உங்கள் கார் திருடப்பட்டால் செய்ய வேண்டியது என்னென்ன? - முழு விவரம்!

பரஸ்பர ஒப்புதல் விவாகரத்தில் இரு தரப்பினரையும் ஒரே வழக்கறிஞர் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். மேலும் பரஸ்பர ஒப்புதல் மூலம் விவாகரத்தை 1 முதல் 2 மாதங்களுக்குள் விரைவாக பெற முடியும். பரஸ்பர சம்மதத்தால் விவாகரத்து இரு தரப்புக்கும் நேரம், பணம் மற்றும் ஆற்றலை மிச்சப்படுத்துகிறது, தேவையற்ற சண்டைக்கு இடமளிக்காது, மிக முக்கியமாக பொதுவெளியில் தேவையற்ற சக்கரவுகளை தவிர்க்க உதவுகிறது.

தற்போதைய காலகட்டத்தில் விவாகரத்து விண்ணப்பங்கள் அதிகரித்து வருவதோடு, விரைவான விவாகரத்துக்கான கோரிக்கையும் அதிகரித்து வருவதால், பரஸ்பர ஒப்புதல் விவாகரத்து சிறந்த வழியாக பார்க்கப்படுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: