Home /News /explainers /

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பெயர் திருத்தம் செய்வது எப்படி? இதோ எளிய வழி

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பெயர் திருத்தம் செய்வது எப்படி? இதோ எளிய வழி

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் ஏற்படும் பிழைகளை நாம் சரிசெய்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

    கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கான சான்றிதழை அரசு வழங்கி வருகிறது. மாநிலம் விட்டு  மாநிலம் பயணம் செய்பவர்கள் அவசியம் கொரோனா சான்றிதழ் கையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

    கொரோனா தடுப்பூசி செலுத்தும் இடங்களில்  உள்ள கூட்ட நெரிசல் காரணமாக சில நேரங்களில் நமது தகவல்களை பதிவு செய்யும்போது பிழைகள் ஏற்பட்டு விடுகின்றன. இந்த பிழைகளை நாம் சரிசெய்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இந்த பிழைகளை திருத்தம் செய்துக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

    கொரோனா சான்றிதழில் பெயரில் திருத்தம் செய்வது எப்படி?

    www.cowin.gov.in என்ற கோவின் இணையதளத்தில் , நீங்கள் தடுப்பூசி செலுத்தும் போது பதிவு செய்த செல்போன் எண்ணைக் கொண்டு உள்ளே ( Sign in) நுழையுங்கள். உங்கள் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி (OTP) எண்ணைக் கொண்டு உள்ளே செல்லவும்.

    Raise on Issue


    அங்கு உங்கள் பிரச்னைகளை தெரிவிக்க (Raise on issue) என்ற பட்டன் க்ளிக் செய்தால்..

    • கோவிட் சான்றிதழில் உங்கள் பெயர், வயது, பாலினம் திருத்தம்

    • கொரோனா சான்றிதழில் பாஸ்போர்ட் விவரங்கள் சேர்க்க

    • இரண்டு டோஸ் தடுப்பூசிகளை ஒன்றாக இணைக்க

    • மொபைல் எண் மாற்றம் என சில திருத்தங்கள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.


    பெயர் திருத்தம் செய்யும் வழிகள்


    பெயரில் திருத்தம் செய்வது எப்படி?

    பெயர் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் (Certificate Name/ Age/Gender/ photo ID) என்பதை  தெரிவு செய்ய வேண்டும். இப்போது அந்தப்பக்கம் விரிவடையும்.

    அதில் Select a Member என்ற இடத்தில் உங்கள் பெயரை தெரிவு செய்ய வேண்டும். அதன்பின்னர் உங்கள் பெயரில் எழுத்துப்பிழை இருந்தால் அதனை சரி செய்து கொள்ளலாம். பின்னர் Continue கொடுத்தால் நீங்கள் செய்த மாற்றம் உறுதிசெய்யப்படும்.  48 மணி நேரத்திற்குள் நீங்கள் செய்த மாற்றங்கள் உங்கள் சான்றிதழில் இடம்பெறும்.

    இதில் முக்கியமான விஷயம் என்றால் இந்த சேவையை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். அதாவது உங்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை ஒரே ஒருமுறை தான் மாற்றியமைக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Corona, Corona Vaccine, Covid-19, Covid-19 vaccine, Cowin, Fake certificate

    அடுத்த செய்தி