• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • இன்ஸ்டாகிராம், யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

இன்ஸ்டாகிராம், யூடியூப் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

இன்ஸ்டாகிராம், யூடியூப்

இன்ஸ்டாகிராம், யூடியூப்

யூடியூப், டிக்டாக், இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர்கள் ஏராளம். உதாரணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு வந்திருந்த போது வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி என்ற யூடியூப் சேனலை சார்ந்தவர்களை சந்தித்து அவர்களுடன் சமைத்து மகிழ்ந்தார்.

  • Share this:
ஸ்மார்ட் போன்களின் வருகைக்கு பிறகு இந்தியாவில் இணையதளங்களின் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். முன்பெல்லாம் நீங்கள் ஸ்டாராக வேண்டும் என்றால் நீங்கள் திரைப்படங்களிலோ, அல்லது டிவி சீரியல்களிலோ நடித்திருக்க வேண்டும். ஆனால் இப்போது சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டால் அதிக ஃபாலோயர்களை பெற்று நீங்களும் ஸ்டாராகலாம். அதன் மூலம் வருமானமும் பெறலாம்.

யூடியூப், டிக்டாக், இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமானவர்கள் ஏராளம். உதாரணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு வந்திருந்த போது வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி என்ற யூடியூப் சேனலை சார்ந்தவர்களை சந்தித்து அவர்களுடன் சமைத்து மகிழ்ந்தார். அந்த வீடியோ யூடியூபில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த சேனல் யூடியூபில் அதிக ஃபாலோயர்களை பெற்றுள்ளது. அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் சமைத்து, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இது ஒரு உதாரணம் தான். இவர்கள் போல் எண்ணற்ற பிரபலங்கள், டிக்டாக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களின் மூலம் பிரபலமாகி நல்ல வருமானம் பெற்று வருகின்றனர். பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை பிரபலப்படுத்த சமூக வலைதளங்களில் பிரபலமானவர்களை பயன்படுத்தி வருகின்றன. இதே போல் சினிமாவின் மேல் ஆர்வம் கொண்டோர் மூவி டிராக்கர்களாக டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அதிக பின்தொடர்பாளர்களை பெற்று அதன் மூலம் சினிமாவை விளம்பரப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு கணிசமான தொகையை பட நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. சிலர் சினிமா விமர்சனங்கள் மூலம் யூடியூபில் நல்ல வருமானம் பெற்று வருகின்றனர்.

சிலர் பல்வேறு உணவகங்களுக்கு சென்று உணவுகளை விமர்சனம் செய்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். சினிமா, டிவி பிரபலங்களுக்கு வெகு இலகுவாக அதிகளவில் பின்தொடர்பாளர்கள் கிடைத்துவிடுவார்கள். ஆனால் சாதாரண நபர்களுக்கு சற்று கடினம் தான். ஆனால் மிகக் கடினமானது அல்ல. சமூக வலைதளங்களின் மூலம் வருமானம் பெற நல்ல ஐடியாவும், பொறுமையும் , தன்னம்பிக்கையும் இருந்தால் போதும்.

இந்நிலையில் ஹோப்பர் எச்க்யூ (Hopper HQ) என்ற நிறுவனம் இன்ஸ்டாகிராமில் உள்ள பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தி ராக் என அழைக்கப்படும் ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் ஒரு பதிவுக்கு ரூ. 7.6 கோடி சம்பாதிக்கிறாராம்.

ஆனால் பலருக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்று போதிய விழிப்புணர்வு இருக்காது. இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் எவ்வளவு பின்தொடர்பாளர்கள் இருந்தால் உங்களுக்கு வருமானம் கிடைக்கும் என்பது குறித்து தகவல்கள் இதோ.,

நீங்கள் சமூக வலைதளங்கள் மூலம் ரூ.50,000 சம்பாதிக்க வேண்டும் என்றால் சராசரியாக எவ்வளவு ஃபாலோயர்களை பெற்றிருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம். இன்ஸ்டாகிராமில் நீங்கள் 5,000 பின்தொடர்பாளர்களையும் 25 விளம்பர பதிவுகளை வெளியிட்டிருந்தால் உங்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000 கிடைக்கும். உங்களது யூடியூப் பக்கம் 1000 சப்கிரைபர்ஸ் மற்றும் உங்களது வீடியோ பதிவுகள் 19,13,876 பார்வையாளர்களையும் பெற்றிருக்க வேண்டும். மேலும் டிக்டாக்கில் 10,000 சப்கிரைபர்ஸ் மற்றும் உங்களது பதிவுகள் 2,16,21,622 பார்வையாளர்கள் பெற்றிருக்க வேண்டும். பிறகு என்ன மேலே சொன்ன படி உங்கள் பாலோயர்களையும், சப்ஸ்கிரைபர்ஸையும் கணக்கிடுங்கள். பக்கத்தை மெறுகேற்றுங்கள். வாழ்த்துகள்!



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: