குடும்ப அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது இவ்வளவு ஈசியா?

மாதிரிப் படம்

குடும்ப அட்டையை பெற வேண்டும் என்றால் முன்பெல்லாம் அதற்கான அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது, இதனை ஆன்லைனில் எளிதாக பெறும் வசதியை அரசு ஏற்படுத்தியுள்ளது

  • Share this:
மக்களின் முக்கிய ஆவணங்களில் ஒன்றான குடும்ப அட்டையை ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தே எவ்வாறு பதிவு செய்யலாம் என்பதை காணலாம்.

மக்களின்  உணவுத்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி நியாயவிலைக் கடைகளில் மானிய விலையில் அரிசி, உணவு தானியங்கள், மண்ணெண்ணெய் போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம்.  முக்கிய ஆவணமாகவும் குடும்ப அட்டை விளங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இத்தகைய குடும்ப அட்டையை பெற வேண்டும் என்றால் முன்பெல்லாம் அதற்கான அலுவலகங்களுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது, இதனை ஆன்லைனில் எளிதாக பெறும் வசதியை அரசு ஏற்படுத்தியுள்ளது. குடும்ப அட்டையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி மற்றும் அதில் உள்ள தகவல்களை புதுப்பிப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கான பிரதமரின் கிஷான் திட்டத்தில் 5 முக்கிய மாற்றங்கள்!


குடும்ப அட்டையை பதிவிறக்கம் செய்ய:

தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கமான https://www.tnpds.gov.in/home.xhtml   பக்கத்துக்கு செல்ல வேண்டும்.

அதில், பயனாளர் நுழைவு என்னும் டேப்பை கிளிக் செய்ய வேண்டும். அதன் உள் சென்றதும் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும் . அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும்  ‘ஓடிபி’ஐ  உள்ளீடு செய்ய வேண்டும்.  தற்போது குடும்ப அட்டையை பதிவிறக்கம் செய்யும் டேப்ஐ காணமுடியும். அதன் உள்ளே சென்று ‘ Smart Card Print' என்னும் ஆப்ஷனை  கிளிக் செய்த பின் உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் சேவ் என கொடுத்தால் பிடிஎஃப் வடிவதில் உங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டை பதவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் படிக்க: எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்கள்- இந்த எச்சரிக்கை உங்களுக்குதான்!


திருத்தங்கள் செய்வது எப்படி?

பயனாளர் நுழைவு என்னும் டேப்பை கிளிக் செய்ய வேண்டும். அதன் உள் சென்றதும் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும் . அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும்  ‘ஓடிபி’ஐ  உள்ளீடு செய்ய வேண்டும். தற்போது  Smart Card Details என்னும் ஆப்சனை கிளிக் செய்து உள்நுழைந்த பின் Edit பட்டனை கிளிக் செய்து தேவையான திருத்தகங்கள் செய்துகொள்ளலாம். திருத்தம் செய்ய தேவைபடும் ஆவணங்களின் நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியில் Submit என்னும் பட்டனை  கிளிக் செய்ய வேண்டும்.  அங்கீகரிக்கப்பட்ட பின்னர் புதிய தகவல்கள் அப்டேட் ஆகிவிடும்.
Published by:Murugesh M
First published: