முகப்பு /செய்தி /Explainers / Explainer | மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சல் டெங்குவா? கொரோனாவா? என்பதை அறிவது எப்படி?

Explainer | மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சல் டெங்குவா? கொரோனாவா? என்பதை அறிவது எப்படி?

வலி நிவாரணத்திற்காக பொதுவாக பயன்படுத்தக் கூடிய டைகிளோஃபினாக் (Diclofenac) என்னும் மாத்திரையை அடிக்கடி பயன்படுத்துவதால் மாரடைப்பு , பக்கவாதம் போன்ற இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆபாயம் அதிகரிக்கிறது. இதுகுறித்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் பாரசிட்டமல் மற்றும் பிற வலி நிவாரணி மாத்திரைகளுடன் டைகிளோஃபினாக் மாத்திரையும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த ஆய்வின் இறுதி முடிவாக வலி நிவாரணி மாத்திரைகள் தடை செய்யப்படக் கூடியவை என்று கூறியுள்ளது.

வலி நிவாரணத்திற்காக பொதுவாக பயன்படுத்தக் கூடிய டைகிளோஃபினாக் (Diclofenac) என்னும் மாத்திரையை அடிக்கடி பயன்படுத்துவதால் மாரடைப்பு , பக்கவாதம் போன்ற இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆபாயம் அதிகரிக்கிறது. இதுகுறித்து ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் பாரசிட்டமல் மற்றும் பிற வலி நிவாரணி மாத்திரைகளுடன் டைகிளோஃபினாக் மாத்திரையும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த ஆய்வின் இறுதி முடிவாக வலி நிவாரணி மாத்திரைகள் தடை செய்யப்படக் கூடியவை என்று கூறியுள்ளது.

எந்த உணவையும் தொடுவதற்கு முன்பும் கைகளை நன்கு கழுவிக்கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்கியவுடன், மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய் பாதிப்பு தீவிரம் அதிகரித்து வருகின்றன. இது சீசன் நோய் என்று எடுத்துக்கொண்டாலும் ​தற்போதைய கொரோனா நெருக்கடியில் மிகப்பெரிய கவலையாக உருவாகியுள்ளது.

ஏனெனில், கொரோனா தொற்றின் அறிகுறிகள் மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களின் அறிகுகளோடு ஒத்துப்போகின்றன. இதனால், ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்படும் போது அவை சீசன் நோய்களா, இல்லை கொரோனா பாதிப்பா? என்று குழப்பமடைவர். இந்த சந்தேகங்களை நீக்க மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பின் தனித்துவமான நோயறிதல் குறித்து விளக்கியுள்ளனர்.

பயோடெக்னாலஜி இன்ஃபர்மேஷன் தேசிய மையத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, "டெங்கு மற்றும் கொரோனா வைரஸ் நோய் 2019 (கோவிட் -19) ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒரே மாதிரியான அறிகுறிகள் மற்றும் ஆய்வக கண்டுபிடிப்புகள் காரணமாக சில ஆசிய நாடுகள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களில் நோயறிதலை கண்டறிவதில் சவால்களை எதிர்கொண்டுள்ளன. இந்தோனேஷியாவின் பாலி மருத்துவமனைகளில் கொரோனா அல்லது டெங்கு நோய்த்தொற்று பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட மூன்று நபர்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஒரு நோயாளிக்கு டெங்கு மற்றும்

கோவிட் -19 நோய்த்தொற்று இரண்டும் இருப்பது கண்டறியப்பட்டது.

மலேரியா, டெங்கு மற்றும் கொரோனா ஆகியவற்றின் அறிகுறிகள் ஒரேமாதிரியாக இருப்பதால் நோயறிதல் மற்றும் அதற்கான சிகிச்சையை கடினமாக்குகிறது. மேலும், கோவிட் -19 மற்றும் டெங்கு, மலேரியா போன்ற திசையன் மூலம் பரவும் நோய்களை ஒரே நேரத்தில் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டெங்கு போன்ற இணை நோய்த்தொற்றைத் தடுப்பது மற்றும் சரியான நோயறிதலை கண்டறிவது எப்படி ?

இதுகுறித்து கோஹினூர் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஷரத் கோல்கே கூறியதாவது "ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது மலேரியா, லெப்டோஸ்பிரோசிஸ், மஞ்சள் காமாலை போன்ற நோய்களின் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, தலைவலி மற்றும் மூட்டு வலி போன்ற அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். இவை அனைத்தும் கொரோனா பாதிப்பின் அறிகுறிகளாக இருந்தாலும், இருமல், வாசனை இழப்பு அல்லது சுவை இழப்பு போன்ற கூடுதல் அறிகுறிகள் மற்றும் தொண்டை புண் ஆகியவை கொரோனா பாதிப்பிற்கான நோயறிதலை கண்டறிய உதவக்கூடும்.

மேலும் இணை நோய்த்தொற்றை வரமால் தடுப்பதன் மூலமும், கொரோனா நோயாளிகளைத் துல்லியமாகப் பிரித்து அவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும். அதுவே, தவறான நோயறிதல் அதற்கான சிகிச்சை வாய்ப்புகளைக் குறைத்து, அதிக நோயுற்ற தன்மை அல்லது இறப்பு விகிதங்களுக்கு வழிவகுக்கும், " என்று கூறியுள்ளார். பருவகால நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு பருவமழை நோய்களின் அறிகுறிகளையும் கவனமாக கவனிக்க வேண்டும். உதாரணமாக, திடீரென அதிக காய்ச்சல், குமட்டல், வாந்தி, கடுமையான உடல் வலி, பிளேட்லெட் எண்ணிக்கை, தடிப்புகள் போன்றவை டெங்குவால் ஏற்படும் பொதுவான அறிகுறிகள் ஆகும். லெப்டோஸ்பிரோசிஸ் நோயை பொறுத்தவரை, சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள், மஞ்சள் காமாலை, கண்களில் சிவத்தல் ஆகியவை பொதுவான அறிகுறியாக இருக்கும்.

Must Read | வருகிறது மழைக்காலம்… காய்ச்சல், சளியில் இருந்து தப்பிக்க சில வழிகள்!

செம்பூர் ஜென் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆலோசனை மருத்துவர் மற்றும் தீவிர மற்றும் தொற்று நோய் நிபுணரான டாக்டர் விக்ராந்த் ஷா என்பவர் இது குறித்து பேசுகையில், " பருவமழை காரணமாக தற்போது டெங்கு மற்றும் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எங்கள் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு லெப்டோஸ்பிரோசிஸ் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே 2-3 நாட்களுக்குள் காய்ச்சல் குறையவில்லை என்றால் மக்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

காய்ச்சலோடு சளி, சொறி, தலைவலி இருந்தால் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த அறிகுறிகள் மலேரியா, டெங்கு காரணமாக வரலாம். மேலும் தற்போதைய காலத்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்களின் உடல்நலத்தில் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும் பருவமழையில், வாந்தி மற்றும் தளர்வான மலத்துடன் காய்ச்சல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுவது, கடுமையான இரைப்பை குடல் அழற்சி ஆகியவை மஞ்சள் காமாலை நோய் இருப்பதை குறிக்கிறது. இதற்கு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் எந்த வீட்டு வைத்தியத்தையும் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்தாதீர்கள், " என்று எச்சரித்துள்ளார்.

இந்த மழைக்காலத்தில் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான வழிகள்:

உங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை கொசுக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

வெளியே செல்வதற்கு முன் கொசு விரட்டிகளைப் பயன்படுத்துங்கள் மற்றும் முழுக்கால் ஆடைகளை அணியுங்கள்

வைரஸ் தொற்று அபாயத்தைக் குறைக்க நெரிசலான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும்

வீட்டில் சூடாக சமைத்த உணவை உட்கொள்ளுங்கள்

உங்கள் வீடு நன்கு காற்றோட்டமாக இருப்பதை உறுதி செய்யவும்

எந்த உணவையும் தொடுவதற்கு முன்பும் கைகளை நன்கு கழுவிக்கொள்ளுங்கள்

கைகளை கழுவாமல் மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த காலத்தில் இரைப்பை குடல் தொற்றுகளைத் தவிர்ப்பது எப்படி?

இது குறித்து மருத்துவர் ஷா பகிர்ந்ததாவது, "இரைப்பை குடல் நோய்த்தொற்றுகளைத் தடுக்க, நல்ல கை-சுகாதார நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும். பழைய உணவு வேகவைக்காத உணவு அல்லது துரித உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். அதேபோல கடைகளில் பதில் ஜூஸ் மற்றும் பழச்சாறுகளை வாங்கிக் குடிப்பதைத் தவிர்க்கவும். குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிட வேண்டும்.

திறந்து வாய்த்த உணவு பொருளை சாப்பிட வேண்டாம். இரைப்பை குடல் அழற்சி மற்றும் மஞ்சள் காமாலை போன்ற கோளாறுகளைத் தடுக்க, சமைக்காமல் பச்சையாக இருக்கும் உணவை உண்ண வேண்டாம். லெப்டோஸ்பிரோசிஸை ஏற்படுத்தும் கொறித்துண்ணிகளைத் தடுக்க குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும். மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதேபோல தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் விலங்குகளின் சிறுநீர் கழிவுகளை தொடுவதை தவிர்க்க வேண்டும்" என்று எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விவரித்தார்.

First published:

Tags: Covid-19, Dengue, Explainer