• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரை மாற்ற இடைத் தரகர்களிடம் ஏமாறும் மக்கள்- எளிமையான வழி இதோ

ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரை மாற்ற இடைத் தரகர்களிடம் ஏமாறும் மக்கள்- எளிமையான வழி இதோ

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இணையத்தில் எளிமையான முறையில் ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரை மாற்ற முடியும்.

  • Share this:
    தி.மு.க ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், கொரோனா இழப்பீடு 4,000 ரூபாய் உள்ளிட்ட திட்டங்களை மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு உடனடியாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை.

    இதற்கிடையில், ரேஷன்கார்டில் குடும்பத் தலைவருக்கு பதிலாக குடும்பத் தலைவி என்றிருந்தால் மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று வதந்தி பரவியது. அதனால், பலரும் தங்களது ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவி என்று மாற்றிவருகின்றனர். பலருக்கும், பெயர் மாற்றம் செய்யும் வழிமுறைகள் தெரியாததால் இடைத் தரகர்களிடம் 1,000 ரூபாய் வரை கொடுத்து ஏமாறும் சூழல் உள்ளது. ஆனால், ஆன்லைனில் நாமே எளிதாக பெயர் மாற்றம் செய்ய முடியும்.

    குடும்பத் தலைவர் பெயர் மாற்றும் முறை:

    முதலில் நீங்கள் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் குடும்ப தலைவர் மாற்றம் என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உங்களது ரேஷன் அட்டையில் பதிவு செய்துள்ள மொபைல் நம்பரை கொடுத்து, கேப்ட்சா குறியீட்டினை கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.

    அதன்பின் நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஒடிபி எண் வரும். அதனை பதிவு செய்தால், உங்கள் பக்கம் login ஆகிவிடும். அதை தொடர்ந்து குடும்ப தலைவர் மாற்றம் செய்வதற்கான ஆப்சன்கள் இருக்கும். அதில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் யாரை குடும்ப தலைவராக மாற்ற வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் குடும்ப தலைவராக மாற்றுவோரின் பெயருக்கு நேரே உள்ள பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்.

    இதன் பிறகு நீங்கள் குடும்ப தலைவராக மாற்ற செய்ய விரும்புவரின் ஆதார் அட்டை, இறப்பு சான்றிதழ், விவகாரத்து சான்றிதழ், வருவாய் ஆய்வாளர் தடையின்மை சான்றிதழ் இதில் ஏதேனும் ஒரு சான்றை பதிவேற்ம் செய்ய வேண்டும். அவர்களின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 1 MB அளவுக்குள் இருக்க வேண்டும். அதையும் புகைப்படம் என்று இருக்கும் பாக்ஸில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இவை அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் உங்களது கோரிக்கை வெற்றிகரகமாக பதிவேற்றம் செய்ததற்கான தகவல் வரும். அதனை நீங்கள் சேமித்து வைத்து கொள்ள வேண்டும். உங்கள் கோரிக்கையின் நிலையை முகப்பு பக்கத்தில் சென்று அட்டை தொடர்பான சேவை நிலையை அறிய என்பதை தேர்வு செய்து எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

    பிற மாற்றங்கள்:

    தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.tnpds.gov.in-சென்று பயனாளர் நுழைவு’ என்பதை கிளிக் செய்து உள்ளே செல்லவும். அடுத்த பக்கத்தில் உங்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ணை பதிவிடவும். பின்னர், கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.

    உங்கள் மொபைல் எண்ணுக்கு கிடைக்கும் ஒடிபியை உள்ளிட்டு அடுத்த பக்கத்திற்கு செல்லவும். இதில் ‘குடும்ப உறுப்பினர்கள்’ என்பதை தேர்வு செய்து நீங்கள் குடும்ப தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களின் பெயர்களைக் காணலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் புகைப்படத்தை மாற்ற, அட்டை பிறழ்வுகள் என்னும் பிரிவை கிளிக் செய்து புதிய கோரிக்கை-ஐ தேர்ந்தெடுத்து, அதில் புகைப்படம் அல்லது பெயர் இவற்றில் செய்ய வேண்டிய மாற்றத்தை செய்யலாம்.

    தேவையான மாற்றங்களை செய்த பின்னர் ‘ஓகே’ கொடுத்து வெளியேவரவும். நீங்கள் செய்த மாற்றங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படும். ஆன்லைனில் இந்த செயல்முறையை எளிதாக செய்து முடிக்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: