Home /News /explainers /

அதிகரிக்கும் டேட்டாபேஸ் டெவலப்பர் வேலைக்கான டிமாண்ட்: டேட்டாபேஸ் டெவலப்பர் ஆவதற்குத் தேவையான தகுதிகள் மற்றும் திறன்கள்?

அதிகரிக்கும் டேட்டாபேஸ் டெவலப்பர் வேலைக்கான டிமாண்ட்: டேட்டாபேஸ் டெவலப்பர் ஆவதற்குத் தேவையான தகுதிகள் மற்றும் திறன்கள்?

மாதிரி படம்

மாதிரி படம்

கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுக்கும் டேட்டாபேஸ் டெவலப்பர்கள் தேவை. இருப்பினும், அவர்களின் எண்ணிக்கை மற்றும் பொறுப்புகள் ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஏற்றவாறு மாறுபடலாம்.

    டேட்டாபேஸ் என்பது தகவல்களை ஒரு குறிப்பிட்ட கட்டமைக்கப்பட்ட முறையில் வரிசைப்படுத்தல், சேமித்தல், சேமித்த டேட்டாவை மாற்றியமைத்தல் உள்ளிட்டவற்றைக் குறிக்கிறது. ஒரு அப்ளிகேஷன் இயங்கும் போதெல்லாம், அந்த அப்ளிகேஷனில் நாம் அளிக்கும் தகவல்களை சேமித்து வைக்கிறது. தேவைப்படும் போது, அந்த தகவலை மறுபகிர்வு செய்கிறது. இன்றைய டிஜிட்டல் உலகில், ஒவ்வொரு வணிகமும், ஒவ்வொரு சேவையும், அதன் வாடிக்கையாளர்களின் டேட்டாவைத் தான் நம்பி இயங்குகிறது. எனவே தரவு உருவாக்கம் (data creation or development) மற்றும் சேகரிப்பு (collection) ஆகியவை ஒவ்வொரு வணிகத்தின் முக்கிய அங்கமாகிவிட்டன.

    ஒவ்வொரு குறிப்பிட்ட டேட்டாவும் எப்படி சேகரிக்கப்படுகிறது, யார் எதை உள்ளிடுகிறார் என்றெல்லாம் டேட்டா சேகரிப்பு மற்றும் ஸ்டோரேஜ் பற்றி உங்களுக்கு பல சந்தேகம் எழலாம். இதற்கென்று ஒரு தனி துறையே உருவாக்கும் அளவுக்கு தேவை அதிகரித்துள்ளன. தொழில்நுட்பம் தொடர்ந்து மேம்பட்டு வரும் நிலையில், கம்ப்யூட்டர் புரோக்ராம்களில் ஏற்படும் மாற்றங்களில் டேட்டா உருவாக்கப்படும், சேமிக்கப்படும், நிர்வகிக்கப்படும் மற்றும் ரிட்ரீவ் செய்யப்படும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. டேட்டாபேஸ் டெவலப்பர் வேலைகளுக்கு நல்ல டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

    டேட்டாபேஸ் உருவாக்கம் மற்றும் நிர்வாகம்:

    எந்தவொரு நிறுவனத்திலும் டேட்டாவை நிர்வகிப்பத்தில் இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன. அவை, டேட்டாபேஸ் டெவலப்பிங் மற்றும் டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ஆகும். ஆனால் சில நேரங்களில் குறைவான பட்ஜெட், குறைந்த டேட்டா உள்ள நிறுவனங்கள் பெரும்பாலும் இந்த இரண்டையும் ஒருங்கிணைந்து, ஒரே பணியாக வெளியிடுகின்றன.

    ஒரு டேட்டாபேஸ் டெவலப்பரின் கடமைகள் மற்றும் இந்தத் துறையில் ஒரு வேலை அல்லது தொழிலைத் தொடங்கும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களின் வழிகாட்டுதல்கள் இங்கே.

    டேட்டாபேஸ் டெவலப்பர்களின் முக்கிய பொறுப்புகள்:

    டேட்டாபேஸ் உருவாக்குபவர்கள், டேட்டாபேஸ் டிசைனர்கள் அல்லது டேட்டாபேஸ் புரோகிராமர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

    டேட்டாபேஸ் டெவலப்பர்களுக்கு வழக்கமான ஒரு இயங்குதளத்தில் புதுப்பித்தல்கள் மற்றும் யூசரின் தேவைகளை ஏற்ப ஏற்கனவே உள்ள டேட்டாபேஸ் ங்களை மறுவடிவமைத்தல், புதிதாக உருவாக்குதல், புரோகிராம் எழுதுதல், பிராசஸ் செய்தல் மற்றும் மாற்றியமைத்தல் ஆகிய பொறுப்புகள் உள்ளன. நிறுவனம் அல்லது கிளையன்ட்டின் தேவைக்கு ஏற்ப, சிறந்த டேட்டாபேஸ் நிர்வாக அமைப்புகளை செயல்படுத்துகின்றனர். மேலும், டேட்டாபேஸின் புரோக்ராம் திறன்கள், பெர்ஃபார்மான்ஸ் மற்றும் சிக்கல்கள் அல்லது பிழைகளை சோதித்து சரிசெய்தல் ஆகிய பொறுப்புகளும் உள்ளன.

    Gmail யூஸர்களே உஷார்... மெயில் மூலம் நடக்கும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள்!

    தொழில்நுட்ப ரீதியாக பார்க்கும் போது, ஒரு டேட்டாபேஸ் டெவலப்பர் என்பவர் ஒரு IT வல்லுநர் ஆவார். டேட்டாபேஸ் டெவலப்பர் தொழில்நுட்பங்களை பல வழிகளில் ஒருங்கிணைக்கிறார். அவர்களின் அன்றாட கடமைகள் மற்றும் பொறுப்புகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது.

    - டேட்டாபேஸ் மேலாண்மை அமைப்புகளை வடிவமைத்தல்

    - டேட்டாபேஸ் ஆவணங்களை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்

    - திட்ட விவரக்குறிப்புகளை பகுப்பாய்வு செய்தல், புதிய அம்சங்களை உருவாக்குதல்

    - கணினி மென்பொருள் மற்றும் வன்பொருளைப் பயன்படுத்தி புரோகிராம் கோடு எழுதுதல் மற்றும் மாற்றுதல்

    - பிழைகளை சரிசெய்ய புரோகிராம் கோடுகள் மற்றும் ஆவணங்களை மாற்றியமைத்தல்

    - புரோகிராம் கோடுகளில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து சரிசெய்தல்

    - பகுப்பாய்வு, கடுமையான சோதனை முறைகளைப் பயன்படுத்தி சிக்கல்களை தீர்த்து வைத்தல்

    - சோதனை பேக்கேஜ்களை உருவாக்குதல், சரிபார்ப்பு செயல்முறையை யோக்குதல்

    - அப்ளிகேஷனை பாதிக்காமல் நேரடி சூழலில் புரோகிராம் கோடுகளை இயக்குதல்

    டேட்டாபேஸ் தேவாலப்பர்களின் பணி, தொழில்நுட்பத்தை சூழ்ந்து இயங்குகிறது. தொடர்ந்து வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு, டிரெண்டுகளுக்கு ஏற்றவாறு திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    டேட்டாபேஸ் டெவலப்பர் ஆவதற்குத் தேவையான தகுதிகள் மற்றும் திறன்கள்?

    அதிக டிமாண்ட் இருக்கும் துறையில், அதிக மற்றும் தனித்துவமான திறன்களும் தேவை. டேட்டாபேஸ் டெவலப்பராக உங்கள் தொழிலில் வளர, பின்வரும் திறன்கள் மகிவும் அவசியம்.

    முறையான தகுதி உள்ளவர்கள் அல்லது அடிப்படை கணினி கல்வியறிவு பெற்றவர்கள் கூட ஒரு டேட்டாபேஸ் டெவலப்பராக தங்கள் தொழில் அல்லது வேலையைத் தொடங்கலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது வேறு ஏதேனும் தொடர்புடைய துறையில் திறன் கொண்டவர்களை நிறுவனங்கள் இந்த பணிகளுக்கு வேலைக்கு அமர்த்துகின்றன. இருப்பினும் அந்த வேலைக்கு நல்ல தொழில்நுட்ப அறிவு அவசியம். உடன், ஆர்வமும் இருப்பது விரைவாக முன்னேற உதவும்.

    டேட்டாபேஸ் என்பது தொழில்நுட்பங்களை இணைப்பதால், பலருடன் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, இந்த ரோலில் வளர்ச்சி அடைய விரும்புவர் ஒரு புரொபஷனலாக, தனியாகவும் மற்றும் குழுவாகவும் இயங்குவதற்கு பொருத்தமாக. டேட்டாபேஸ் தீர்வுகளை டிசைன் செய்வது மற்றும் சொந்தமாக சோதனை அமைப்புகளை உருவாக்குவது போன்ற விஷயங்களில் சுயாதீனமான முடிவுகளை எடுக்கும் திறனும் இருக்க வேண்டும்.

    டேட்டாஹெஸ் டெவலப்பர் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை திறன்கள்

    - SQL சர்வர்கள் & ஆரக்கிள் டேட்டாபேஸ் பற்றிய அறிவு

    - SQL, T-SQL, PL / SQL பற்றிய அறிவு

    - டேட்டாபேஸ் வடிவமைப்பு மற்றும் டெலவப்மென்ட்டில் முன்-அனுபவம்

    - விண்டோஸ், லினக்ஸ் போன்ற இயங்குதளங்களில் அடிப்படை அறிவு

    - கணினி பகுப்பாய்வு செய்யும் திறன்

    - c++, ஜாவா போன்ற பல்வேறு புரோகிராம் மொழிகளின் அறிவு

    - பைதான், ஜாவாஸ்கிரிப்ட், PHP போன்ற ஸ்கிரிப்டிங் மொழிகளின் அறிவு

    - இணைய சேவையகங்கள், இடைமுகங்கள், IT மேலாண்மை, IT கருவிகள் பற்றிய அறிவு

    - திட்ட மேலாண்மை, கணினி ஒருங்கிணைப்பு, தர சோதனை ஆகியவற்றில் அனுபவம்

    - புதிய டேட்டாபேஸ் செயலாக்க செயல்முறையைப் புரிந்துகொள்லும் திறன்

    டேட்டாபேஸ் டெவலப்பர்களுக்கான தேவை ஏன் அதிகமாக உள்ளது?

    தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, மருத்துவம் மற்றும் சுகாதாரம், போன்ற முக்கிய துறைகள் மட்டுமின்றி, அனைத்து துறைகளிலும் டேட்டாபேஸ் டெவலப்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தரவு சேகரிப்பு, உருவாக்கம், செயலாக்கம் ஆகியவற்றை சார்ந்து நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த தரவு கோப்புகள் எண்ணிக்கையில், அளவில் பெரியவை. எனவே அவற்றை சேமிப்பதிலும் நிர்வகிப்பதிலும் சிறப்பு கவனம் தேவை. டேட்டாவை முறையாகச் சேமித்து நிர்வகிக்க நல்ல திறமையான டேட்டாபேஸ் டெவலப்பர் மற்றும் மேனேஜர்கள் தேவை. டேட்டாபேஸ் டெவலப்பர்கள் தான் இந்த டேட்டாபேஸின் மூளையாக உள்ளனர்.

    டேட்டாபேஸ் டெவலப்பர்களின் சம்பளம் மற்றும் எதிர்கால வாய்ப்புகள்

    கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுக்கும் டேட்டாபேஸ் டெவலப்பர்கள் தேவை. இருப்பினும், அவர்களின் எண்ணிக்கை மற்றும் பொறுப்புகள் ஒவ்வொரு நிறுவனத்திற்கு ஏற்றவாறு மாறுபடலாம்.

    நிறுவனத்தின் அளவு, பொறுப்பு, டெவலப்பரின் திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து சம்பளம் தீர்மானிக்கப்படும். Glassdoor இன் கூற்றுப்படி, இந்தியாவில் டேட்டாபேஸ் டெவலப்பரின் சராசரி சம்பளம் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் ஆகும். இதைத் தவிர்த்து, போனஸ் மற்றும் கமிஷன்களும் வழங்கப்படுகின்றன.

    ஒரு டேட்டாபேஸ் டெவலப்பர் துறை சார்ந்த விஷயங்களை கற்றுத் தேர்ந்தால், மிக விரைவில் ஒரு நல்ல நிலையை அடைந்து முன்னேறிச் செல்ல முடியும். டேட்டாபேஸ் இன்ஜினியர் அல்லது அனலிஸ்ட் போன்ற வேலைப் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். பெருநிறுவனங்களின் பெரிய அளவிலாய்ன தரவுகளைக் கையாளும் பொறியாளர்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், டேட்டாபேஸ் உருவாக்குநர்களின் சம்பளம் உயர்ந்து வருகிறது.

    உலகம் டிஜிட்டலாக மாறி வருவதால், டேட்டாபேஸ் டெவலப்பர்களின் எதிர்காலம் குறித்து கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லை. பிரகாசமான வேலைவாய்ப்புகள் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது. ஆன்லைன் கருவிகள், பயிற்சிகள் மற்றும் கற்றல் தளங்களின் உதவியுடன் நீங்கள் இந்தத் துறையில் நுழையலாம்.

    2020 மற்றும் 2030 க்கு இடையில் டேட்டாபேஸ் டெவலப்பர்கள் மற்றும் தொடர்புடைய துறைகளுக்கான வேலைகள் 8-10% அதிகரிக்கும் என்று சமீபத்திய புள்ளியியல் அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே தொழில்நுட்பம் சார்ந்த பணியில் ஈடுபட விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி