நீங்கள் பிஃஎப் தொகையை பெற வேண்டுமா ? உங்களது வங்கிக் கணக்கை EPFO இணைய பக்கத்துடன் இணைப்பது எப்படி ?

ஊழியர் வருங்கால வைப்பு நிதி

நீங்கள் பிஎஃப் பணம் பெற வேண்டிய வங்கி கணக்கு எண்ணை EPFO இணைய பக்கத்துடன் இணைத்திருக்க வேண்டும். அவற்றை எப்படி இணைக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

  • Share this:
கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பிறகு உடல் ரீதியான பாதிப்புகள் ஒருபுறம் இருக்க பலரது வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை திடீரென வேலையை விட்டு நீக்கியுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் சம்பளத் தொகையை பாதியாக குறைத்தன. தங்கள் அன்றாட செலவுகளுக்கே அல்லல்பட்டு வரும் நிலையில் கூடுதல் சுமையாக தங்களின் மருத்துவ செலவுகளும் வந்து விழுந்துள்ளது.

இந்நிலையில் அவர்களுக்கு கைகொடுத்தது பிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி. ஆனால் அதிலும் பிஎஃப் தொகையை பெறுவதிலும் சிலர் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். தொழிலாளர் வைப்பு நிதி ஆணையம் (EPFO) பல்வேறு மாறுதல்களை கொண்டு வந்துள்ளது. உங்கள் பிஎஃப் தொகையை பெறுவதற்கு UAN எனப்படும் பிரத்யேக 12 இலக்க எண் கட்டாயம் தேவைப்படும்.

மேலும் நீங்கள் பிஎஃப் தொகையை பெற விரும்பும் வங்கி கணக்கு எண்ணை EPFO பக்கத்துடன் இணைத்திருக்க வேண்டும். அப்படி நீங்கள் பிஎஃப் பணம் பெற வேண்டிய வங்கி கணக்கு எண்ணை EPFO இணைய பக்கத்துடன் இணைத்திருக்க வேண்டும். அவற்றை எப்படி இணைக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

முதலில் https://www.epfindia.gov.in/ அல்லது என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்கள் UAN எனப்படும் உங்களது பிரத்யேக எண் மற்றும் பாஸ்வேர்டு மூலம் லாகின் செய்ய வேண்டும்.

AlsoRead:உங்கள் ஆதாரில் பிறந்த தேதியை மாற்ற வேண்டுமா? ஆன்லைனில் மாற்றலாம்!

அதனைத் தொடர்ந்து Manage என்ற கிளிக் செய்து KYC என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். அதில் Bank ஆப்சனை கிளிக் செய்து அதில் Documents என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் வங்கி கணக்கு எண் மற்றும் IFSC code ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். அப்டேட் ஆன பிறகு Save என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். உங்களது வங்கி விவரங்களை ஆதாரமாக சமர்பிக்க வேண்டும்.

சமர்பித்த விவரங்களை சரிபார்ப்பதற்கு KYC Pending for approval என்பதில் இருந்து Digitally approved KYC என்று மாறும் வரை கைத்திருக்கவும். பின்பு உங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் சார்பாக உங்களது வங்கி கணக்கு அப்டேட் ஆனதாக எஸ்எம்எஸ் வரும். அப்படி வந்தால் உங்கள் வங்கி கணக்கு எண் EPFOவுடன் இணைக்கப்படது உறுதி செய்யப்பட்டதை அறிந்து கொள்ளலாம்.

வருங்கால வைப்பு நிதியாக தொழிலாளர்களும், தொழிற்சாலை நிர்வாகங்களும் தொழிலாளர்களின் பெயரில் மாதந்தோறும் சந்தா செலுத்த வேண்டும். இதில் தொழிலாளி வாங்கும் சம்பளம் மற்றும் இதரபடிகளின் மொத்தக்கூட்டுத் தொகையில் 12 சதவிகிதத் தொகையை தொழிலாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்து நிர்வாகம் அந்தத் தொழிலாளர் பெயரில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் செலுத்த வேண்டும்.

இந்தத் தொகை முழுவதும் அந்தத் தொழிலாளர் பெயரில் வருங்கால வைப்பு நிதியாக வைக்கப்படும். இந்த வைப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட சதவிகித வட்டி அளிக்கப்படுவதுடன் அதுவும் வருங்கால வைப்பு நிதித் தொகையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

தொழிலாளி வாங்கும் சம்பளம் மற்றும் இதரபடிகளின் மொத்தக்கூட்டுத் தொகையில் 12 சதவிகிதத் தொகையை தொழிலாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நிர்வாகம் அதே 12 சதவிகிதத் தொகையை அந்தத் தொழிலாளர் பெயரில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் செலுத்த வேண்டும். இதில் 8.33 சதவிகிதத் தொகை தொழிலாளர்களது குடும்ப நல ஓய்வூதியத்திற்கும், மீதமுள்ள 3.67 சதவிகிதத் தொகை அந்தத் தொழிலாளியின் வருங்கால வைப்பு நிதியில் தொழிலதிபரின் நிதியாகவும் சேர்க்கப்படுகிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: