• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • ஆட்டோவில் விட்டுச்சென்ற பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர் - குவியும் பாராட்டு!

ஆட்டோவில் விட்டுச்சென்ற பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர் - குவியும் பாராட்டு!

ஆட்டோ ஓட்டுநர்

ஆட்டோ ஓட்டுநர்

புவனேஸ்வர் பகுதியைச் சேர்ந்த சுசந்தா சாஹு என்பவர், ஓலா ஆட்டோ ஒன்றில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது, அவர் ஆட்டோவில் இருந்து இறங்குவதற்கு முன், தனது மொபைல் போன் மற்றும் பர்ஸ் ஆகியவற்றை ஆட்டோவில் தவற விட்டுச் சென்றுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பெங்களூரில் OLA ஆட்டோவில் ஒரு நபர் தனது தொலைபேசி, பணப்பையை மறந்து வைத்துவிட்டு சென்ற நிலையில், ஆட்டோ டிரைவர் அவரிடம் பொருட்களை திருப்பி கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

புவனேஸ்வர் பகுதியைச் சேர்ந்த சுசந்தா சாஹு என்பவர், ஓலா ஆட்டோ ஒன்றில் ஏறி பயணம் செய்துள்ளார். அப்போது, அவர் ஆட்டோவில் இருந்து இறங்குவதற்கு முன், தனது மொபைல் போன் மற்றும் பர்ஸ் ஆகியவற்றை ஆட்டோவில் தவற விட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு, தனது பொருட்கள் தொலைந்து போனது தெரிய வந்ததும் சுசந்தா அதிர்ந்து போயுள்ளார். இதனிடையே, சுசந்தா பயணித்த ஆட்டோவின் டிரைவரான ஜெகன்நாதா பத்ரா, சுசந்தாவின் பணம் மற்றும் போனை பத்திரமாக அவரிடமே திரும்ப வந்து கொடுத்துள்ளார்.

ஆட்டோ டிரைவரின் செயலால் நெகிழ்ந்து போன சுசந்தா, ஜெகன்நாதவின் நேர்மையை பாராட்டி, அதற்கான வெகுமதியை கொடுக்க முயன்றுள்ளார். ஆனால், அதனை ஜெகன்நாதா மறுத்துள்ளார்.



இந்நிலையில், தனக்கு நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து சுசந்தா ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஜெகன்நாதாவின் வங்கி கணக்கு குறித்த தகவலை குறிப்பிட்ட சுசந்தா, அவரின் நேர்மையை பாராட்டி அவருக்கு ஏதாவது பண உதவி செய்ய நினைத்தால், இதன் மூலம் அதனை செய்து கொடுங்கள்' என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

மற்றொரு ட்வீட் ஒன்றில், ஜகந்நாதாவிற்கு கிடைத்த அன்பையும் பாராட்டையும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். நேர்மையான ஆட்டோ ஓட்டுநருக்காக பணம் அனுப்பியவர்களுக்கு மனமார்ந்த நன்றி, மேலும் நானும் என்னால் முடிந்த பணத்தை கூகுள் பே வழியாக அனுப்பியுள்ளேன், நீங்களும் அனுப்ப விரும்பினால் இந்த எண்ணிற்கு அனுப்புங்கள் என்று ஜகந்நாதாவின் கூகுள் பே நம்பரையும் ஷேர் செய்துள்ளார் .

ஜெகந்நாதா மிகவும் உற்சாகமாக இருக்கிறார், தனக்கு நிதி ரீதியாக வெகுமதி அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும்படி அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார் என்றும் சுசந்தா தெரிவித்துள்ளார்.

ஆட்டோ டிரைவரின் நேர்மையான செயலை பாராட்டி ஏராளமான நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நல்ல வேலை செய்துள்ளீர்கள், நேர்மைக்கு நிகர் எதுவுமில்லை என ஒரு யூசர் கமெண்ட் செய்துள்ளார்.

Also read... அமெரிக்காவில் உடை அவிழ்வதைக் கூட கவனிக்காமல் திருட்டில் ஈடுபட்ட பெண்!

ஆட்டோ ஓட்டுநர் ஒரு ஹீரோ என்றும், இந்த பாராட்டு செய்தி ஒவ்வொரு ஆட்டோ டிரைவருக்கும் சென்றடைய வேண்டும், இது அனைத்து ஆட்டோ ஓட்டுனருக்கு ஊக்கமளிக்கும் என்றும் ஒருவர் கூறியுள்ளார்.

கடவுள் ஆசீர்வதிக்கட்டும். மனிதநேயம் சிறந்தது என நெட்டிசன்கள் பலர் தங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸ் பிரிவில் பதிவு செய்து வருகின்றனர்.



மேலும் ஓலா நிறுவனமும் நன்றி கூறியுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: