நம் உடல் தொடர்ந்து நாள் முழுவதும் தண்ணீரை பெரும்பாலும் சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் இழக்கிறது. ஆனால் இவை தவிர சுவாசம் போன்ற உடலின் வழக்கமான உடல் செயல்பாடுகளால் நீரிழப்பு ஏற்படுவதை நாம் அனைவரும் தினசரி குறிப்பிட்ட அளவு தண்ணீரை கட்டாயம் குடிக்க வேண்டும். நமது உடல் செயல்பாடுகள் அனைத்தும் சரியாக இருக்க போதுமான அளவு தண்ணீரை குடிப்பது முக்கியம். ஆனால் போதுமான அளவு தண்ணீர் குடிக்காத போது நாம் நீரிழப்புக்கு ஆளாகிறோம். இதனால் ஒரு சில முக்கிய உடல் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. எனவே உடலை எப்போதும் நீரேற்றமாக (hydrated) வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏன் தண்ணீர் மிகவும் முக்கியமானது என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
தினமும் எவ்வளவு தண்ணீர்?
நாம் சுவாசிப்பது, வியர்வை வெளியேற்றம், குடல் இயக்கங்கள் மற்றும் சிறுநீர் மூலம் நாள் முழுவதும் தண்ணீரை இழக்க நேரிடுவதால் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம் பார்த்தோம். ஆனால் தினமும் ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஒவ்வொரு நாளும் ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது அவரது வயது, செயல்பாட்டு நிலை மற்றும் வசிக்கும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். வறண்ட அல்லது வெப்பமான கிளைமேட்டில் வசிப்பவருக்கு, குளிர்ந்த, ஈரமான கிளைமேட்டில் வாழுபவர்களை விட அதிக தண்ணீர் தேவைப்படலாம். ஆண்கள் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 3 லிட்டர், பெண்கள் சுமார் 2 - 2 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கபடுகிறது. இந்த அளவில் தண்ணீரை தவிர டீ மற்றும் காபி போன்ற பிற திரவ பானங்கள் அல்லது உணவில் சேர்க்கப்படும் தண்ணீரையும் கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. தினசரி திரவ உட்கொள்ளலில் 20% பொதுவாக உணவில் இருந்தும் மீதமுள்ளவை பானங்களிலிருந்தும் வருகிறது.
இதையும் படிங்க | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?
தினசரி உணவில் போதுமான தண்ணீர்:
பின்வரும் தினசரி வழக்கத்துடன் உங்கள் உணவில் இருந்து போதுமான தண்ணீரை பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.
காலை:
மொத்தம் 32 திரவ அவுன்ஸ்கள் கவராகும் வகையில் 2 எட்டு அவுன்ஸ் கிளாஸ் தண்ணீர் (2*8) மற்றும் 2 எட்டு அவுன்ஸ் கப் காபி (2*8) குடிக்கலாம். இதோடு காலை உணவுக்கு நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். 88% தண்ணீர் நிறைந்திருக்கும் யோகர்ட் அல்லது ப்ளாக்பெர்ரிக்களை சேர்த்து கொள்ளலாம்.
மதியம்:
மற்றொரு 32 திரவ அவுன்ஸ்களுக்காக 2 எட்டு அவுன்ஸ் கிளாஸ் தண்ணீர் ((2*8)) மற்றும் 2 எட்டு அவுன்ஸ் கப் டீ (2*8) குடிக்கலாம். மதிய உணவில் நீர்ச்சத்து நிறைந்த உணவு பொருட்களை சேர்த்து கொள்ளுங்கள். 92% தண்ணீர் நிரம்பி இருக்க கூடிய குழம்பு சார்ந்த சூப்கள், 95% தண்ணீர் அடங்கிய வெள்ளரிகள் உள்ளிட்டவற்றை தேர்வு செய்து சாப்பிடலாம்.
இதையும் படிங்க | பச்சிளங் குழந்தைகளிடையே அதிகரிக்கும் நிமோனியா! விழிப்புணர்வு மூலம் தடுக்க முடியுமா? முதன்மை மருத்துவர் சொல்வது என்ன?- பகுதி 1
மாலை அல்லது இரவு:
இரவு உணவுடன், 2 எட்டு அவுன்ஸ் கிளாஸ் தண்ணீர் (2*8) சேர்த்து கொள்ளுங்கள்
ஆரோக்கிய நன்மைகள்:
உடல் வெப்பநிலையை சமநிலையில் வைக்க உதவுகிறது.
ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, மன அமைதிக்கு உதவுகிறது.
எடை இழப்புக்கு உதவுகிறது.
மலச்சிக்கலை தடுக்கிறது
உள்ளுறுப்புகளில் கற்கள் உருவாவதை தடுக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dehydration, Explainer, Healthy Lifestyle