வானத்தின் உண்மையான அழகை நீங்கள் ரசிக்க விரும்பினால் கடலுக்கு நடுவிலோ அல்லது பாலைவனத்திற்கு நடுவிலோ நின்று தான் பார்க்க வேண்டும். காரணம் அங்கு மட்டும் தான் செயற்கை விளக்குகள் இல்லை.
செயற்கை விளக்குகளின் அதிகப்படியான ஒளியால் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை காண வாய்ப்பின்றி போய்விடுகிறது. நட்சத்திரங்களை பார்க்க முடியாதது மட்டுமல்ல, வாழ்க்கையையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டு இருக்கிறோம்.
MIT இன் டெக்னாலஜி ரிவியூவில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கைபடி, வெளிப்புற செயற்கை விளக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் பிரகாசமான விளக்குகள், கடுமையான ஒளி மாசுபாட்டின் காரணமாக அமைகிறது. இது மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் அதிகப்படியான தீங்கு விளைவிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒளி ஒரு மாசா?
ஒளி என்பது மனிதனுக்கு அடிப்படையானது தானே. காலை முதல் மாலை வரை சூரியன் ஒளிர்கிறது. அந்த ஒளி என்ன மாசா என்ற எண்ணம் உங்களுக்குள் எழலாம்.
ஸ்டார்பக்ஸின் புதிய CE0-வாக பதவியேற்கும் லக்ஷ்மன் நரசிம்மன்.. பின்னணி என்ன?
சூரியனின் ஒளி என்பது இயற்கையான ஒரு நிகழ்வு . இயற்கை அதற்கு தேவையானதை தேவையான அளவு எடுத்துக்கொள்ளும். அதே போல் பூமியின் மீது விழும் சூரிய ஒளி என்பது மாசு அல்ல.
சூரியன் மறைந்த பிறகு இரவுக்கு நாம் பயன்படுத்தும் விளக்குகளும் கூட மாசு அல்ல. அது ஒரு இடத்திற்கு தேவையான வெளிச்சத்தை விட அதிகம் தரும் போது தான் அது 'ஒளி மாசாக' மாறுகிறது. ஒரு அறைக்கு ஒரு விளக்கு போதும் என்ற நிலையில் நான்கு விளக்குகள் பயன்படுத்தப்பட்டால் அது ஒளிமாசு எனப்படும்.
ஒளி மாசுபாட்டின் தீங்கு :
ஒளி மாசுபாடு முக்கியமாக வனவிலங்குகளின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல பறவைகள் இரவில் இடம்பெயரும் தன்மை கொண்டது. ஆனால் இந்த செயற்கை விளக்குகள் அவற்றின் கவனத்தைச் சிதறடித்து , நூற்றுக்கணக்கான மைல்கள் அதன் பாதையை திசை திருப்பி விடுகின்றன. இதனால் பல பறவைகள் தங்கள் வழக்கமான பாதையைத் தொலைத்து விடுகிறது.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் பறவைகள் கட்டிடங்கள் மீது மோதுவதால் பலியாகின்றன என்று ஒரு ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. கட்டிடங்களில் உள்ள பிரகாசமான விளக்குகள் பூச்சிகளை போல் மிளிர்வதால் அதை நோக்கி ஈர்க்கப்பட்டு பறவைகல் கட்டிடங்களின் கண்ணாடிகளில் மோதி இறந்துவிடுகின்றன.
பறவைகள் மட்டுமின்றி மரங்கள் கூட சுற்றியுள்ள பிரகாசத்தால் பாதிக்கப்பட்டு இயற்கைக்கு மாறாய் அவற்றின் இலைகள் மற்றும் மொட்டுகளை அதன் உண்மையான காலத்திற்கு முன்னதாகவே உதிர்கின்றன என்று அறிக்கை கூறுகிறது.
மனிதர்களை பொருத்தமட்டில், இரவு ஒளியால் சர்க்காடியன் சுழற்சி எனப்படும் இயற்கையான தூக்கம் மற்றும் விழித்திருக்கும் சுழற்சி பாதிக்கப்படும் . இரவில் நன்றாக தூங்க படுக்கையறை அறையை இருட்டச் செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நல்ல தூக்கம் இல்லாவிடில் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் வரலாம் .
அது போல அதிக வெளிச்சம் உடலின் மீது விழுந்துகொண்டே இருப்பதால் ஒரு சிலருக்கு தோல் வியாதிகளும் வருகின்றன. கண்களும் பாதிக்கப்படுகிறது. கவன குவி நிலை இல்லாத தன்மையையும் கண்டறிகின்றனர்.
தீர்வு என்ன?
தேவைக்கு அதிகமாக வெளிச்சத்தைப் பயன்படுத்துவதே முக்கிய பிரச்சனை. குறைந்த வெளிச்சம் தேவைப்படும் இடங்களிலும் ஒளிரும் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
இனி பார்வையற்றோர் கூட விண்வெளி அதிசியங்களின் புகைப்படத்தை உணர முடியும் - நாசா புதிய முயற்சி
எல்.ஈ.டி அதற்கு ஒரு தீர்வாக அமையலாம். தேவைக்கு ஏற்ப LED களின் பிரகாசத்தை கட்டுப்படுத்த முடியும். பிரகாசத்தை 0% வரை கூட கட்டுப்படுத்தலாம். எல்இடிகள் ஒரு சிறந்த மாற்று என்று அறிக்கை கூறுகிறது, ஏனெனில் அவை குறைந்த ஒளி மற்றும் ஆற்றலுடன் அதே வெளிச்சத்தை உருவாக்க முடியும்.
தெரு விளக்குகளை மங்கச் செய்வது தெருக் குற்றங்களுக்கு எதிராக சமரசம் செய்யாது என்று அது கூறுகிறது, அதே நேரத்தில் சாலை பகுதிகளில் அதிகமாக வெளிச்சம் போடுவதற்குப் பதிலாக, போக்குவரத்து பாதுகாப்பை அதிகரிக்க முக்கிய இடங்களில் விளக்குகளை வைக்கலாம் என்றும் பரிந்துரைக்கிறது.
வீடுகளில் தேவையான இடங்களில், தேவையான அளவு வெளிச்சம் தரும் விளக்குகளை மட்டுமே பயன்படுத்துங்கள். அதிக வெளிச்சம் என்பது கண்களுக்கும் கேடானது. அதிக வெளிச்சம் பட்டால் கண் உள்ளே இருக்கும் நரம்புகளும் தசைகளும் கூடுதலாக சுருங்க நேரிடும்.
சொந்த ஆரோக்கியம் கருதியெனும் விளக்கின் ஒளியைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள். போன்,லேப்டாப்களிலும் இரவில் பணியாற்றும்போது ஒளியின் அளவை குறைத்து வைத்து பணியாற்றுங்கள். முடிந்தவரை இரவில் பணியாற்றாமல் பகலில் வேலை செய்யுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.