• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • Explainer : UV-C தொழில்நுட்பம் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துகிறது?

Explainer : UV-C தொழில்நுட்பம் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துகிறது?

UV-C Technology

UV-C Technology

மத்திய அரசின் கீழ் இயங்கும் சி.எஸ்.ஐ.ஓ அமைப்பு, புற ஊதா கதிர்களை விளக்குகள் மூலம் செயற்கையாக உருவாக்கி கிருமிகளை அழிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது.

  • Share this:
காற்றுத் துகள்களில் இருக்கும் கொரோனா வைரஸை அழிப்பதற்காக விரைவில் நாடாளுமன்றத்தில் யுவி-சி விளக்குகள் பொருத்தப்பட உள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஜிஜேந்தர்சிங் கூறியுள்ளார்.

கண்ணுக்குப் புலப்படாத கொரோனா வைரஸ் பொதுவெளியில் உள்ள காற்று துகள்களில் இருக்க வாய்ப்புகள் உள்ளன. அவற்றை நீக்குவதற்காக மத்திய அரசின் கீழ் இயங்கும் சி.எஸ்.ஐ.ஓ அமைப்பு, புற ஊதா கதிர்களை விளக்குகள் மூலம் செயற்கையாக உருவாக்கி கிருமிகளை அழிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது.

வீடு, ரயில்கள், பெரிய அரங்குகள், மால்கள் மற்றும் கல்வி நிலையங்கள், ஏசி பேருந்துகளில் காற்று துகள்களில் கொரோனா கிருமிகள் இருந்தால், இந்த விளக்குகளில் இருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்கள் அவற்றை அழிக்கும். அந்த தொழில்நுட்பம் நாடாளுமன்றத்திலும் விரைவில் பொருத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் ஜிஜேந்தர்சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் காற்றுத் துகள்களில் இருக்கும் சார்ஸ்கோவிட் 2 வைரஸ் பரவுதல் கட்டுப்படுத்தப்படும் என விளக்கமளித்துள்ளார்.

Also Read:   கீர்த்தி சுரேஷ் முதல் அனுஷ்கா வரை: தென்னிந்திய டாப் 10 நடிகைகளின் உண்மையான வயது!

யு.வி-சி என்றால் என்ன?

சூரியனில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர்களே அல்ட்ரா வைலட் கதிர்கள் எனப்படும். இந்த கதிர்களில் 3 வகைகள் உள்ளன. யு.வி -ஏ 350 முதல் 700 என்.எம்-ஐக் கொண்டிருக்கும். யுவி-பி கதிர்கள் 280 முதல் 315 என்.எம்-ஐக் உடையதாக இருக்கும். யுவி-சி 100 முதல் 280 என்.எம் என்ற அளவில் இருக்கும். ஏ மற்றும் பி இரண்டும் ஆபத்து கதிர்கள் என்பதால் அதனை ஓசோன் படலம் தடுத்துவிடும். சி கதிர்வீச்சு ஆபத்து குறைவு மற்றும் ஓசோன் படலம் வழியாக பூமிக்குள் நுழையும். யுவி ஏ கதிர்வீச்சு உடலில் பட்டால் டி.ஏன்.வை நேரடியாக பாதிக்கும். யுவி பி கதிர்வீச்சு வெளிப்புறத் தோல்களை பாதிப்பதுடன், தோல் புற்றுநோயை ஏற்படுத்திவிடும். யுவி-சி மனிதர்களாலேயே செயற்கையாகவும் உருவாக்கப்படுகிறது.

Also Read:   லாங் டிரிப்புக்கு திட்டமிடுகிறீர்களா? டயரில் இதையெல்லாம் செக் பண்ணுங்க!

யுவி-சி கதிர்கள் கொரோனாவை கொல்லுமா?

யுவி-சி புற ஊதாக்கதிர்கள் பல தசாப்பதங்களாக மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. காற்றில் இருக்கும் கிருமிகளை நீக்கும் அல்ட்ரா வைலட் சி கதிர்கள் மருத்துவமனைகள் மற்றும் லேப்களில் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவை கண்ணுக்குப் புலப்படாத கொரோனா வைரஸ் கிருமிகள் காற்றில் இருந்தால், அவற்றை அழிப்பதை ஆய்வாளர்கள் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளனர். விளக்குகள் மூலம் செயற்கையாக உருவாக்கப்படும் புற ஊதாக்கதிர்கள் 222 எம்.என் பவரில் அவற்றை அழிக்கின்றன. ஹிரோஷிமா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்விலும் 99.7% உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யுவி-சி கதிர்வீச்சு மனிதர்களுக்கு பாதுகாப்பானதா?

யுவி-சி கதிர்வீச்சை வெளிப்படுத்தும் விளக்குகளை பொதுவாக பயன்படுத்தினால் கண் மற்றும் தோலில் எரிச்சலை ஏற்படுத்தும் என ஐஐடி கான்பூர் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அந்த விளக்குகளை பெரிய அரங்கம், பள்ளி வளாகங்களில் பயன்படுத்தும்போது மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என விளக்கம் அளித்துள்ளனர். மேலும், காற்றில் இருக்கும் சார்ஸ் கோவிட் 2 வைரஸ் கிருமிகளை அழிப்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதேநேரத்தில் மேலும் சில ஆய்வுகள் யுவி-சி விளக்குகள் 207 -222 என்.எம்மில் இருந்தாலும் தோல்களை பாதிக்காது எனத் தெரிவித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: