Birds: பறவைகள் இடம்பெயர்வது எப்படி? புதிய ஆய்வில் தகவல்!

மாதிரி படம்

நேச்சர் இதழில் வெளியாகியிருக்கும் ஆய்வு ஒன்றில் பறவைகள் காந்தப்புலத்தை உணர்ந்து அவற்றின் வழியாக திசையறிந்து செல்வதாக

  • Share this:
காந்தப் புலத்தை அடிப்படையாக வைத்து பறவைகள் ஆண்டுதோறும் சரியான இடத்துக்கு இடம்பெயர்வதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் குளிர்காலத்தின் தொடக்கத்தில் உலகெங்கிலும் இருந்து நூற்றுக்கணக்கான பறவைகள் இந்தியாவுக்கு வருகின்றன. ஆறுகள், மலைகள், பெங்கடல்கள் ஆகியவற்றைக் கடந்து ஒவ்வொரு ஆண்டும் சரியான இடத்துக்கு பறவைகள் வந்து செல்வது பறவை ஆய்வாளர்களிடையே இன்னும் புரியாத புதிராக உள்ளது. இதற்கான விடையை உலகம் முழுவதும் இருக்கும் பறவைகள் ஆய்வாளர்கள் தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நேச்சர் இதழில் வெளியாகியிருக்கும் ஆய்வு ஒன்றில் பறவைகள் காந்தப்புலத்தை உணர்ந்து அவற்றின் வழியாக திசையறிந்து செல்வதாக கூறப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், பறவைகளின் விழித்திரையில் உள்ள கிரிப்டோக்ரோம்கள் எனப்படும் காந்தபுலத்தை உணரும் புரதங்கள், புவியின் காந்தப் புலத்தை உணர்ந்து திசைமானியாக செயல்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பறவைகள் வானிலை மாற்றத்தை எவ்வாறு அறிந்துகொள்கின்றன? எப்போது குடியேற வேண்டும்?, எந்த பாதையில் செல்ல வேண்டும்? என்பதை தீர்மானிக்கும் புதிர்களுக்கான விடையை கண்டுபிடிப்பதற்கு, அந்த ஆய்வு பயன்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியில் உள்ள ஓல்டன்பேர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ராபின்ஸ் பறவையைப் படித்து, அவற்றின் திசைமானியாகக் கருதுவதை ஆய்வுக்குட்படுத்தினர். அப்போது, அந்தப் புரதங்களுக்கு காந்த உணர்திறன் இருப்பதைக் கண்டறிந்தனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஹோர் பேசும்போது, பறவையில் இருக்கும் சில புரத மூலக்கூறுகள் காந்தப்புலத்தின் திறனை உணரும் ஆற்றல் கொண்டிருப்பதால், அவை பறவைகளின் திசைமானியாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பறவைகளுக்கான திசைமானி எது என்பதை கண்டுபிடிப்பதில் பல ஆண்டுகளாக பல்வேறு யூகங்களும் கருதுகோள்களும் இருந்து வருகின்றன. தொடக்க கால ஆராய்ச்சிகளில் விலங்குகளின் உடலில் இருக்கும் ஆக்சிஜனேற்றி - இரும்பு கலவை உடல் சீரமைப்பு சமிக்கைகளுக்கு வழிவகுக்கிறது என ஒரு சிலர் கூறினர். இதேபோன்று, கிரிப்டோக்ரோம் புரதங்கள் ஒளியின் ஃபோட்டான்களை உறிஞ்சும்போது காந்த உணர்திறன் ரசாயனங்களை உருவாக்குகின்றன. இதன்மூலம் கிடைக்கும் எதிர்வினை ஆற்றல் மாறுபாடுகள் பூமியின் காந்தப்புலத்தை பொறுத்து பறவைகளுக்கு திசையை அடையாளம் காட்டுகின்றன இன்னும் சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also read... International Day of the Seafarer 2021: சர்வதேச மாலுமிகள் தினம் 2021 - இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

கிரிப்டோக்ரோம்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வாளர்கள் இன்னும் ஆழமான ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாக கூறியுள்ளனர். அதே நேரத்தில் பறவைகளின் இடப்பெயர்வை துல்லியமாக கண்டறியும் விதமாக ஸ்பெக்டோஸ்கோபிக் வழியை பின்பற்றுகின்றனர். மிகச்சிறிய ஜி.பி.எஸ் கருவிகளை உருவாக்கி அவற்றை பறவைகளில் வைத்தும் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து ஆய்வுகளிலும் துல்லியமான முடிவுகள் கண்டறியப்படவில்லை. பறவைகள் வலசைபோதல் தொடர்பான இன்னும் பல ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியிருப்பதையும் ஒப்புக்கொள்கின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: