Home /News /explainers /

புதிய வகை மாறுபாடான ஒமைக்ரான் எவ்வளவு ஆபத்தானது? மற்ற மாறுபாடுகளை விட கொடியதா?- Explainer

புதிய வகை மாறுபாடான ஒமைக்ரான் எவ்வளவு ஆபத்தானது? மற்ற மாறுபாடுகளை விட கொடியதா?- Explainer

தென்னாப்பிரிக்கா ஆய்வில், ஒமைக்ரான் வகையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் இந்த முறை குழந்தைகளாக இருந்தனர்.

தென்னாப்பிரிக்கா ஆய்வில், ஒமைக்ரான் வகையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் இந்த முறை குழந்தைகளாக இருந்தனர்.

தென்னாப்பிரிக்கா ஆய்வில், ஒமைக்ரான் வகையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் இந்த முறை குழந்தைகளாக இருந்தனர்.

உலகம் முழுவதும் கட்டுக்கடங்காமல் பரவி வரும் ஒமைக்ரான் மாறுபாடு விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது என்று சொல்லலாம். மேலும், அதன் பாதிப்பு எந்தளவுக்கு இருக்கும் என்பது பற்றியும், தடுப்பூசிகள் அதற்கு எதிராக வேலை செய்யுமா என்பது குறித்தும் இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ளலாம்.

ஒமைக்ரான் மற்றும் பிற கோவிட்-19 வகைகளுக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள் என்ன?

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவின் பல பிறழ்வுகள் தோன்றி பெரிய பாதிப்பை ஏற்படுத்தின. அதில், இந்தியாவில் தோன்றிய டெல்டா மாறுபாடும் ஒன்று. அந்த வகையில் டெல்டாவை விட ஒமைக்ரான் மிகவும் அதிகமாக பரவக்கூடியது என்பது தற்போது வெளிப்படையாக தெரிகிறது. தற்போது தோன்றியுள்ள விகாரம் அதற்கு முந்தைய மாறுபாடுகளை விட அதிகமாக பரவக்கூடியது.

எடுத்துக்காட்டாக, ஆஸ்திரேலியாவில் முன்பு பரவிய மாறுபாடுகளை அந்நாட்டு அரசால் முற்றிலுமாக நிறுத்த முடிந்தது. ஆனால் ஒமைக்ரானின் பரவலைத் தடுக்க எதுவும் செய்ய முடியவில்லை. சமூகத்தில் புதிய மாறுபாட்டினால் ஒவ்வொரு 2 முதல் 3 நாட்களுக்கும் ஒருமுறை இங்கிலாந்தில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகின்றன.

ஒமைக்ரான் மற்ற மாறுபாடுகளை விட இன்னும் கொடியதா?

ஒமைக்ரான் முதலில் தோன்றிய தென்னாப்பிரிக்காவின் நிலைமையை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், ஒமைக்ரான் அலையில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவு செய்யப்பட்ட போதிலும், மிகக் குறைந்த அளவில் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைமைக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க | பச்சிளங் குழந்தைகளிடையே அதிகரிக்கும் நிமோனியா! விழிப்புணர்வு மூலம் தடுக்க முடியுமா? முதன்மை மருத்துவர் சொல்வது என்ன?- பகுதி 1

குறைவான வீரியம் கொண்டிருப்பதற்கான காரணம்?

ஒமைக்ரான் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலக நாடுகளில் பெரிய கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில் இது 50 க்கும் மேற்பட்ட மரபணு மாற்றங்களின் தனித்துவமான மற்றும் ஆபத்தான கலவையைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது நுரையீரலுக்கு மிகக் குறைவான சேதத்தை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதேசமயம் முந்தைய மாறுபாடுகள் பெரும்பாலும் காயம் மற்றும் கடுமையான சுவாசக் கஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆனால் எலிகள் மற்றும் வெள்ளெலிகள் மீதான ஆய்வுகளில், ஒமைக்ரான் குறைவான-சேதமடைந்த நோய்த்தொற்றுகளை உருவாக்கியது என்பதை கண்டறிந்தனர். இந்த வகை பெரும்பாலும் மூக்கு, தொண்டை மற்றும் மூச்சுக்குழாய் போன்ற மேல் சுவாசக்குழாய் பகுதிகளை பாதிக்கிறது.

ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறுவை சிகிச்சையின் போது மனித சுவாசப்பாதையில் இருந்து எடுக்கப்பட்ட திசுக்களின் பிட்களை ஆய்வு செய்தனர் மற்றும் 12 நுரையீரல் மாதிரிகளில், ஒமைக்ரான் மாறுபாடு டெல்டா மற்றும் பிற வகைகளை விட மெதுவாக வளர்ந்ததைக் கண்டறிந்தனர். இப்போது பல ஆய்வுகள் கடந்த 10 நாட்களில் அவற்றின் ஆரம்ப முடிவுகளை வெளியிட்டன. அதிலும், இந்த மாறுபாடு தொண்டையில் அதிகமாகப் பெருகி, குறைவான தீவிர நோயை ஏற்படுத்துகிறது என்ற ஒரே முடிவு தான் வந்துள்ளது.

ஒமைக்ரான் எல்லா வயதினருக்கும் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துமா?

கட்டாயம் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, தென்னாப்பிரிக்கா ஆய்வில், ஒமைக்ரான் வகையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் இந்த முறை குழந்தைகளாக இருந்தனர். ஒருவேளை அந்தக் குழுவினருக்கு மிகக் குறைவான தடுப்பூசி கண்டுபிடிப்புகள் காரணமாக மிகக் குறுகிய காலத்தில் ஒமைக்ரான் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகின்றன?

ஒருவர் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை மட்டுமே பெற்றிருந்தால், ஒமைக்ரான் மாறுபாட்டிற்கு எதிரான செயல்திறன் வெறும் 10 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. இருப்பினும், ஃபைசர் அல்லது மாடர்னா பூஸ்டர் தடுப்பூசி அந்த நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை சுமார் 70 சதவீதம் வரை கணிசமாக மேம்படுத்துகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தற்போதைய அனைத்து தடுப்பூசிகளும் கடுமையான நோய் மற்றும் இறப்புக்கு எதிராக செயல்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?

புதிய ஒமைக்ரான்-க்கு எதிராக தடுப்பூசி கிடைக்குமா?

பெரிய மருந்து நிறுவனங்கள் புதுப்பிக்கப்பட்ட ஒமைக்ரான் அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்குவதற்கான திட்டங்களுடன் முழு வேகத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். தேவைப்பட்டால் மார்ச் 2022 க்குள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அதன் தற்போதைய தடுப்பூசியை எதிர்க்கும் தன்மையை நிரூபிக்கும் பட்சத்தில், "தோராயமாக 100 நாட்களில்" ஒமைக்ரான்-வடிவமைக்கப்பட்ட தடுப்பூசியை தயாரிக்க முடியும் என்று ஃபைசர் நிறுவனம் கூறியுள்ளது. மாடர்னா நிறுவனம் அத்தகைய தடுப்பூசியை உருவாக்க மூன்று மாதங்கள் ஆகும் என்று கூறியுள்ளது. ஒமைக்ரானின் அறியப்பட்ட மரபணு வரிசையின் அடிப்படையில் நோவாவாக்ஸ் என்ற கோவிட்-19 தடுப்பூசியை ஏற்கனவே உருவாக்கத் தொடங்கியுள்ளது.

ஒமைக்ரானின் பரவல் குறையும் போது கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு வருமா?

இல்லை. வைரஸ் ஒரு லேசான பதிப்பில் மாற்றமடைந்துள்ளது என்பது நல்ல செய்தி என்றாலும், அதன் பரவும் வேகம் என்பது கடந்த கால மாறுபாடுகளைப் போலவே பல சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. ஒமைக்ரானில் இருப்பது போல, தடுப்பூசி பாதுகாப்பு குறைவாக உள்ள நாடுகள் மற்றும் கண்டங்களில் இருந்து சமமான சேதத்தை ஏற்படுத்தும் மற்றொரு மாறுபாடு வெளிப்படும் என்ற கவலை எப்போதும் இருக்கும்.
Published by:Archana R
First published:

Tags: Explainer, Omicron

அடுத்த செய்தி