ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

மேக வெடிப்பு என்றால் என்ன? ஆண்டுதோறும் இமயமலை பகுதியில் மேகவெடிப்பு நிகழக் காரணம் என்ன?

மேக வெடிப்பு என்றால் என்ன? ஆண்டுதோறும் இமயமலை பகுதியில் மேகவெடிப்பு நிகழக் காரணம் என்ன?

மேகவெடிப்பு

மேகவெடிப்பு

Cloudburst: சாதாரணமாக மேகம் உருவாகும் நேரத்தை விட குறைந்த நேரத்தில் மழைமேகம் உருவாகி மெதுவாக பொழியாமல் மணிக்கு 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு மழையை ஒரே இடத்தில் கொட்டித் தீர்ந்தால் அது தான் மேகவெடிப்பு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

வருடா வருடம் மழைக்காலம் வரும் நேரம் இமய மலைப்பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலை, வட கிழக்கு இந்திய பகுதிகளிலும் மேகவெடிப்பு ஏற்பட்டது என்று செய்தி கேட்டிருப்போம்.  தற்போது கூட அமர்நாத் புனித யாத்திரை பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு 15 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சூழலில்  மேகவெடுப்பு என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது என்று பார்ப்போம். 

சாதாரணமாக மழை எப்படி பொழிகிறது?

முதலில் மழை எப்படி பொழிகிறது என்ற புரிதல் நமக்கு வேண்டும்.  நிலம் சூடாகும் போது நிலத்தில் இருக்கும் நீரும் சூடாகும். நீர் சூடாகும் போது விரிவடைந்து ஆவியாகும். இதனால் அந்த இடத்தில் அழுத்தம் குறையும். எடை குறைவாக இருப்பதால் நீராவி நிலத்தை விட்டு மேலே ஏறும்.

உயரம் ஏற ஏற வளிமண்டலத்தின் தற்பவெப்பநிலை குறைந்துகொண்டே போகும். 15 கிமீ வரை உயரும் நீராவி குளிர்ந்து அங்கேயே மேகமாக மாறும். இப்படி சேரும்  நீர்த்திவலைகள் சேர்ந்து எடை கூடும் நேரம், அந்த மேகங்களின் மேல் குளிர் காற்று வீசினால் மழையாக பொழியும். 

மேகவெடுப்பு

குறைந்த நேரத்தில் இந்த செயல்கள் எல்லாம் நடந்து  வீரியம் கூடி பொழிந்தால் அது மேகவெடிப்பு எனப்படும். சாதாரணமாக மேகம் உருவாகும் நேரத்தை விட குறைந்த நேரத்தில் மழைமேகம் உருவாகி மெதுவாக பொழியாமல் மணிக்கு 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான அளவு மழையை ஒரே இடத்தில் கொட்டித் தீர்ந்தால் அது தான் மேகவெடிப்பு. இந்த அதீத மழையால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு முதலியன நிகழ்கிறது.

இமாலயத்தில் நிகழ்வது எப்படி?

பொதுவாகவே மலை என்பது ஒரு அரண் போன்றது. அதன் ஒரு பகுதியில் வரும் காற்று தடுத்து நிறுத்தப்பட்டு அதே பகுதியில் மழையாய் பொழியும். இந்த பகுதியை விண்ட்வார்ட் சைட் (windward side) என்பர். காற்று தடுக்கப்பட்டதால் நீரை ஏந்தி வரும் குளிர் காற்று ஒரு பக்கத்திலேயே தடுக்கப்படுவதால் மற்றொரு புறம் வறண்டு காணப்படும். வறண்ட பகுதி லீவார்ட் பகுதி (leeward side) எனப்படும் . 

அமர்நாத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு, பலர் மாயம்!

ஜூன், ஜூலை மாதங்களில் தெற்கில் இருந்து இமையம் நோக்கி காற்று நகரும். அப்போது இமாலயத்தின் இந்திய பகுதி தான் காற்றிடும் பகுதியாக இருக்கும். அதனால் இமாச்சலபிரதேசம், உத்திரக்கண்ட் பகுதிகளின் வழியாக வரும் சூடான காற்று உயர்ந்து  குளிர்ந்து மழை மேகமாக மாறும்.

இமயமலை 6 முதல் 8 கிலோமீட்டர் வரை உயரம் கொண்டது. அதனால் உயரம் ஏற ஏற இயற்கையாகவே அங்கு குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அதனால் தான் மலை உச்சி பனியால் மூடப்பட்டுள்ளது. 

இப்போது உயரும் காற்று குளிர்ந்து இமயமலையின் மேல் அடர்த்தியான மழை மேகமாக மாறி விடுகிறது. ஏற்கனவே  குளிர் பிரதேசம் என்பதால் குளிர்காற்று வீசும் போது  மேகங்கள் சீக்கிரம் வெடித்து விடுகிறது. மழை தொடங்கிய சில நிமிடங்களில் மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மேகங்கள் முழுவதும் நீரை கொட்டி தீர்த்துவிடும்.

சாதாரண மலைப்பகுதி என்றாலே நீரோட்டம் இருக்கும். இமயமலை என்பது இண்டஸ், கங்கை நதி, பிரம்மபுத்திரா நதிகளுக்கு நீராதாரமாக விளங்குகிறது. அதனால் மிக விரைவாகவே வெள்ளம் ஏற்பட்டு விடுகிறது.

First published:

Tags: Floods in jammu and kashmir, Heavy Rainfall