ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்படுவதற்கான காரணமும், வரலாறும்!

ஹிரோஷிமா தினம்

குண்டு வீசப்பட்ட இடத்திலிருந்து 4.4 மைல் தொலைவில் உள்ள எல்லா பொருட்களும் எரிந்து சாம்பலாகிவிட்டன.

  • Share this:
ஹிரோஷிமா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் இரண்டு நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீசி அழிக்கப்பட்ட கோரசம்பவத்தை நினைவுக்கூறும் விதத்தில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, இந்த தாக்குதல் காரணமாக அந்நகரத்தில் பாரிய கட்டமைப்புகளின் சேதத்திற்கும் வழிவகுத்தது. ஜப்பானிய அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ஹிரோஷிமாவில் 69 சதவீத கட்டிடங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜப்பானில் அமைதி அரசியலை ஊக்குவிக்க ஹிரோஷிமா தினம் வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரே ஒரு அணுகுண்டால் ஆயிரக்கணக்கான உயிர்கள் மடிந்து எழுபத்தாறு ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது பேரழிவை சந்தித்த ஹிரோஷிமா நகரம், உலகப் புகழ்பெற்ற அமைதி நகரமாக ஒரு சக்திவாய்ந்த மீட்பை உருவாக்கி, குறிப்பிடத்தக்க நகர்ப்புற மையமாகவும் தொழில்துறை மையமாகவும் மாற்றப்பட்டுள்ளது. சீன -ஜப்பானிய மற்றும் ருஸ்ஸோ -ஜப்பானிய நாடுகளுக்கிடையே நடந்த இரண்டு உலகப் போர்களிலும் ஹிரோஷிமா இராணுவ நடவடிக்கைகளின் மையமாக இருந்தது. அணு ஆயுதத்தால் தாக்கப்பட்ட முதல் நகரமும் அதுதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹிரோஷிமா தினத்தின் வரலாறு:

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதிக்கு நடந்த இரண்டாம் உலகப் போரின்போது, ​​அமெரிக்க குண்டுவீச்சு விமானமான B-29 -ஐ பயன்படுத்தி அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தில் அணுகுண்டை வீசியது. குண்டு வீசப்பட்ட ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் ஒரு மாபெரும் நெருப்புக் கோளம் ஒன்று உருவானது. இது 900 அடி தூரத்திற்கு பரவியது. குண்டு வெடிப்பினால் உண்டான அதிர்ச்சியினால் பத்து மைல் தொலைவில் உள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் நொறுங்கின. மேலும் இந்த அதிர்வு 37 மைல் தொலைவுக்கு உணரப்பட்டது.

ஹிரோஷிமாவின் மூன்றில் இரண்டு பங்கு கட்டிடங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. குண்டு வீசப்பட்ட இடத்திலிருந்து 4.4 மைல் தொலைவில் உள்ள எல்லா பொருட்களும் எரிந்து சாம்பலாகிவிட்டன. இந்த அதிர்வு பத்து சதுர கிலோமீட்டர் பரப்பளவை முற்றிலுமாக அழித்து விட்டது. அணு வெடிப்பால் கிட்டத்தட்ட 90% நகரத்தை அழித்த போதிலும், அமெரிக்கா தாக்குதலை நிறுத்தவில்லை. ஹிரோஷிமா தாக்குதலின் மூன்று நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 9ம் தேதி அன்று, அவர்கள் நாகசாகி மீது மற்றொரு அணுகுண்டை வீசினார்கள். குண்டுவெடிப்பின் விளைவைக் கண்ட பிறகு, ஜப்பான் பேரரசர் ஹிரோஹிட்டோ ஆகஸ்ட் 15ம் தேதி அன்று வானொலி மூலம் இரண்டாம் உலகப் போரில் நிபந்தனையற்ற சரணடைதலை அறிவித்தார். ஜப்பான் மக்கள் பல ஆண்டுகளாக இந்த அணு வெடிப்பின் பின் விளைவுகளை எதிர்கொண்டனர்.

Also read... உலக நீதிநாள் 2021: வரலாறும் முக்கியத்துவமும் என்ன?

ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்படுவதற்கான முக்கியத்துவம்:

ஹிரோஷிமா தினம் 2021: அணுகுண்டு வெடிப்பின் 76 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இந்த நாளில் ஹிரோஷிமாவின் அமைதி நினைவுப் பூங்காவில் அமைதி விழா நடத்தி இந்த சம்பவம் அனுசரிக்கப்படுகிறது. குண்டுவீச்சின் போது கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக உயிர் பிழைத்தவர்களும் குடிமக்களும் ஒன்று கூடி அஞ்சலி செலுத்துவர். ஹால்ஷிமா தினத்தை நினைவுகூரும் வகையில் கால்வே அலையன்ஸ் யுத்தத்திற்கு எதிரான வருடாந்திர நிகழ்வையும் ஐயர் சதுக்கத்தில் ஏற்பாடு அந்நாட்டு அரசாங்கம் ஏற்பாடு செய்யும்.
Published by:Vinothini Aandisamy
First published: