உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி முக்கியம் என்பது மறுப்பதற்கில்லை. மேலும், அனைத்து வகையான உடற்பயிற்சிகளும் உங்களை சுறுசுறுப்பாகவும் நன்றாகவும் வைத்திருக்க உதவியாக இருக்கும். குறிப்பாக, தொப்பையைக் குறிவைத்து கொழுப்பை அகற்றச் செய்வதற்கு மிகவும் பயனுள்ள சில உடற்பயிற்சிகள் உள்ளன. ஜாகிங் மற்றும் சைக்கிலிங் இரண்டும் சிறந்த தேர்வுகள். அத்துடன் செடண்ட்டரி லைஃப்ஸ்டைல் எனப்படும் ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு வாழ்க்கையை கழிக்கும் முறையைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக நடைபயிற்சி உதவும்.
எந்தவிதமான உடல் கொழுப்பும் அதிகமாக இருந்தால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு. உள்ளுறுப்பு கொழுப்பு இதய நோய், அல்சைமர், டைப் 2 நீரிழிவு நோய், பக்கவாதம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற தீவிர மருத்துவ பிரச்சனைகளின் ஆபத்தை அதிகரிக்கும்.
எப்போதும் இந்த அட்வைஸை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்:
சுறுசுறுப்பாக இருங்கள்: இரவு உணவிற்குப் பிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சிக்கு செல்லுங்கள். லிஃப்ட்டை தவிர்த்து படிக்கட்டுகளில் செல்லவும். முடிந்த அளவிற்கு சைக்கிளை பயன்படுத்துங்கள். தினமும் குறைந்தது 30 நிமிட மிதமான ஏரோபிக்
உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
முறையாக சாப்பிடுங்கள்: உடலில் அதிக கால்சியம் மற்றும் வைட்டமின் டி, குறைவான உள்ளுறுப்பு கொழுப்புகளுடன் இணைக்கப்படலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உங்கள் தினசரி உணவில் கீரைகள் மற்றும் பால் பொருட்களை சேர்க்கவும்.
இந்த உடற்பயிற்சி தொப்பையைக் குறைப்பதற்கு சிறந்தது:
Express.co.uk ஆய்வின் படி, இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சுகாதார அமைப்பு ஹாலந்து மற்றும் பாரெட், உங்கள் உடல் செயல்பாடுகளை அதிகரிப்பதில் கவனம் இருக்க வேண்டும் என்கின்றது. இது உடலில் தசையை உருவாக்கும். இதனால் தொப்பை கொழுப்பை சிறந்த முறையில் குறைக்கலாம் என்று பரிந்துரைக்கிறது. இந்த இலக்கை அடைய, அதிக தீவிரம் கொண்ட கார்டியோ பயிற்சியை பரிந்துரைக்கிறது.
அதிக தீவிரம் கொண்ட கார்டியோ பயிற்சியை செய்யுங்கள். அது உங்கள் உடலில் ஆற்றலை அதிகரிக்கும். உடற்பயிற்சியின் பின்னர் உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தையும் அதிகரிக்கும்.
தொப்பை கொழுப்பை எரிப்பதிலும் அதிதீவிரம் கொண்ட கார்டியோ பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உயர்-தீவிர பயிற்சி முழு உடல் கொழுப்பு குறைப்பதில் மிகவும் சிறந்த ஒன்று.
Must Read | உடல் எடை குறைப்பு: கட்டுக்கதைகளும்… உண்மைகளும்…
அதிதீவிர கார்டியோ மட்டுமல்ல, நீங்கள் எதை சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் தேவை:
பிரிட்டிஷ் சுகாதார அமைப்பு அறிவுறுத்தலின்படி, "தொப்பையை குறைக்க விரும்பினால், நீங்கள் உணவு உட்கொள்வதை விட அதிக கலோரிகளை எரிக்க வேண்டும். மேலும், சரியான உணவு வகைகளை உண்ண வேண்டும்" என்று கூறுகிறது.
என்ன சாப்பிட வேண்டும் என்ற பரிந்துரைகள் இங்கே:
பீன்ஸ், பருப்பு வகைகள், மீன் மற்றும் முட்டைகளை அதிகம் சாப்பிடுங்கள்
சிறிய அளவு அன்சாச்சுரேட்டட் எண்ணெய்யை உணவில் பயன்படுத்துங்கள்
ஒவ்வொரு நாளும் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்
உங்கள் உணவில் உப்பு அல்லது சர்க்கரை அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்கவும்
ஒவ்வொரு உணவிலும் புரதச் சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
உணவில் ஏன் அதிக புரதங்களை சேர்க்க வேண்டும்?
கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை விட உங்களை முழுமையாக உணர வைப்பதால் உடல் எடையை குறைக்க, தொப்பையைக் குறைக்க புரதம் ஒரு பயனுள்ள வழியாகும். நீங்கள் விரைவில் பசியை உணர மாட்டீர்கள். அதனால் குறைவாக சாப்பிடுவீர்கள். சால்மன் மீன், முட்டை, பால், சிவப்பு பருப்பு, கொண்டைக்கடலை, கோதுமை ரொட்டி, கொட்டை வகைகள் மற்றும் சோயா ஆகியவற்றிலிருந்து நீங்கள் புரதத்தைப் பெறலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஒரு உணவில் எவ்வளவு புரதம் சேர்க்க வேண்டும்?
ஆய்வின்படி, புரதத்தின் ஒரு பகுதி உங்கள் உள்ளங்கையின் அளவு, உங்கள் உணவுக்கு அந்த அளவு சரியாக இருக்கும் என்று கூறுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.