ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் உடல் எடையை குறைக்குமா? மருத்துவர் சொல்வதென்ன?- Explainer

இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் உடல் எடையை குறைக்குமா? மருத்துவர் சொல்வதென்ன?- Explainer

பெயர் குறிப்பிடுவது போல, இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கில் (Intermittent Fasting) ஒரு நபர் உணவு மற்றும் உண்ணாவிரதம் ஆகியவற்றிற்கு இடையே ஒரு மாற்று சுழற்சியைப் பின்பற்ற வேண்டும்.

பெயர் குறிப்பிடுவது போல, இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கில் (Intermittent Fasting) ஒரு நபர் உணவு மற்றும் உண்ணாவிரதம் ஆகியவற்றிற்கு இடையே ஒரு மாற்று சுழற்சியைப் பின்பற்ற வேண்டும்.

பெயர் குறிப்பிடுவது போல, இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கில் (Intermittent Fasting) ஒரு நபர் உணவு மற்றும் உண்ணாவிரதம் ஆகியவற்றிற்கு இடையே ஒரு மாற்று சுழற்சியைப் பின்பற்ற வேண்டும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

சமீப காலமாக உடல் எடையை குறைக்கும் பல டயட் வழிமுறைகளில் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் மிகவும் பிரபலமாகியுள்ளது. உடல் எடையைக் குறைக்கவும், பராமரிக்கவும் விரும்பும் பலருக்கு இந்த உணவுமுறை ஒரு வாரமாகவே பார்க்கப்படுகிறது. வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் தனிநபரின் ஆயுட்காலத்தை நீட்டிப்பது வரை இந்த உணவு முறையில் பல பலன்கள் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் நீங்கள் இடைவிடாத உண்ணாவிரதம் (Intermittent Fasting) அல்லது வேறு எந்த வகையான உணவு முறையையும் தேர்வு செய்வதற்கு முன், அதன் செயல்திறனையும் அதைச் செய்வதற்கான சரியான வழியையும் நீங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலம் நீங்கள் அதன் அனைத்து நன்மைகளையும் பெற முடியும். இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியவற்றை பார்க்கலாம்.

பெயர் குறிப்பிடுவது போல, இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கில் ஒரு நபர் உணவு மற்றும் உண்ணாவிரதம் ஆகியவற்றிற்கு இடையே ஒரு மாற்று சுழற்சியைப் பின்பற்ற வேண்டும். மற்ற உணவுக் கட்டுப்பாடு திட்டங்களைப் போலல்லாமல், இடைப்பட்ட உண்ணாவிரதம் உணவின் தன்மையை விட உணவின் நேரத்தை அதிகம் வலியுறுத்தப்படுகிறது. இடைப்பட்ட உண்ணாவிரதம் (Intermittent fasting) என்பது வழக்கமாக சாப்பிடும் நேரத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உணவை முழுமையாக அல்லது பகுதியாக தவிர்க்க செய்வது.

இந்த உண்ணாவிரதம் இருக்கும் போது எந்த வடிவத்திலும் உணவு மற்றும் திரவம் ஆகிய இரண்டையும் உட்கொள்ள கூடாது. மக்கள் பொதுவாக நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உணவை சாப்பிட வேண்டும். எனவே, இந்த டயட் உணவு முறையை பின்பற்ற சில குறிப்புகளை பற்றி தெரிந்துகொள்வதும் அவசியம்.

நேரமே முக்கியமானது:

இடைவிடாத உண்ணாவிரதத்தை செய்ய ஏராளமான வழிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் நேரம் முக்கிய பங்கு வகிக்கிறது. பகலில் வெறும் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதும், இரவில் கனமான உணவை உட்கொள்வதும் ஒரு வழி. இரவு உணவை நான்கு மணி நேரத்திற்குள் சாப்பிடுவது நல்லது.

இதையும் படிங்க | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?

16/8 முறை:

இந்த முறையில் வழக்கமாக ஒரு நபர் தனது உணவை ஒரு நாளைக்கு சுமார் எட்டு மணிநேரம் வரை கட்டுப்படுத்தி, நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இந்த முறை தினமும் பின்பற்றப்படுகிறது. எனவே, 8 மணி நேரத்திற்கு பிறகு நீங்கள் உணவினை அருந்தலாம்.

டேக் இட் ஈஸி:

நீங்கள் உங்கள் எடையை குறைக்க விரும்பினால், அதற்காக கடுமையான இடைப்பட்ட உண்ணாவிரதத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்பது அவசியமில்லை. குறிப்பாக, நீங்கள் இந்த உணவு முறையை இப்போதுதான் பின்பற்றுகிறீர்கள் என்றால், உங்களுக்கு வசதியாக இருக்கும் நேரத்தில் உணவைத் தவிர்த்துவிடுவது நல்லது. இதன் மூலம் உங்கள் உடல் எடை குறையும்.

ஒரு நாள் தவிர்க்கவும்:

இந்த உணவு முறையில், நீங்கள் ஒவ்வொரு வாரமும் ஒன்று அல்லது இரண்டு முறை என ஒரு முழு நாள் அல்லது 24 மணிநேரம் உண்ணாவிரதம் இருக்கிறீர்கள். அதேபோல உறங்குவதும் உண்ணாவிரதத்தின் ஒரு வடிவமாகும். எனவே எழுந்த பிறகும் உணாவிரதத்தை நீட்டிப்பது எடை இழப்பில் உதவும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இன்று இரவு உணவை மட்டும் சாப்பிடுங்கள், அடுத்த இரவு உணவு வரை சாப்பிட வேண்டாம்.

இதையும் படிங்க | ‘நீர்ச்சத்து எனும் உயிர்ச்சத்து’- உடம்பில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க இவற்றை செய்தால் போதும்!

பக்க விளைவுகள்:

உணவுப் பழக்கவழக்கங்களில் கடுமையான மாற்றத்தை கொண்டுவரும் போது, உடல் அதனுடன் ஒத்திசைக்க நேரம் எடுக்கும். இந்த உண்ணாவிரத முறையைப் பின்பற்றுபவர்கள், வயிற்று உப்புசம், தலைவலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற சிறிய பிரச்சனைகளை அனுபவித்திருக்கிறார்கள். இது பொதுவாக காலப்போக்கில் மறைந்துவிடும்.

Published by:Archana R
First published:

Tags: Explainer, Fasting