தமிழ்நாட்டில் ஓர் ஆண்டில் நடக்கும் பிறந்த குழந்தை மரணங்களில் 15 முதல் 20 சதவீதம் நிமோனியாவால் நடக்கின்றன என்று கூறுகிறார் மாநில பச்சிளங் குழந்தைகள் நல அதிகாரி மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் சீனிவாசன். இதுகுறித்து கூறுகையில், பச்சிளங் குழந்தைகள் சம்மந்தமான விழிப்புணர்வை இந்த பச்சிளங் குழந்தைகள் வாரத்தில் கையில் எடுத்து, Social Awareness and Action Taken to Neutralize Pneumonia Successfully (SAANS) என்ற மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை, சேலம், திருச்சி ஆகிய மையங்களில் பயிற்சிகள் இந்த மாதம் நடக்கவுள்ளன. இந்த பயிற்சிகளானது 5 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகள் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பதை தடுக்கும் என கூறுகிறார். எனவே, தடுப்பதை நோக்கமாக கொண்டு நவம்பர் 15 முதல் 21 வரை பச்சிளங் குழந்தைகள் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
ஆகவே, இந்த SAANS மூலம் வழிமுறைகளை வகுத்து பயிற்சிகள் தரப்படுகின்றன. குழந்தை மருத்துவர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மாவட்ட மகப்பேறு மற்றும் குழந்தை நல அலுவலர், மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலகர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, நிமோனியாவை ஆரம்ப கட்டத்திலேயே எப்படி கண்டறிவது என்பதை கற்றுத் தருகிறோம். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், 3 கோடி குழந்தைகளுக்கு நிமோனியா ஏற்பட்டு 30 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றனர். அப்படி பார்க்கையில், நாட்டில் 10 சதவீத குழந்தைகள் நிமோனியாவால் இறப்பதாக தரவு சொல்கிறது.
Must Read | மழை வெள்ளத்திற்கிடையே சத்தமின்றி பரவும் டெங்கு! செய்ய வேண்டியது என்ன?
குழந்தைகள் இடையே நிமோனியா ஏற்பட காரணம் என்ன?
இதற்கு காரணங்கள் என்னவென்றால், முதலில் குழந்தைக்கு முறையான தாய்ப்பால் கிடைக்காதது ஒரு காரணமாக இருக்கலாம். சரியான நேரத்தில் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தாதது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், காற்று மாசு, குறிப்பாக விரகு அடுப்பை பயன்படுத்தும் வீடுகளில் ஏற்படும் காற்று மாசு ஆகிய காரணங்களால் குழந்தைகளிடையே நிமோனியா தாக்கம் அதிகமாகிறது என்கிறார் மருத்துவர் சீனிவாசன்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் நிமோனியா இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், சில காலங்களுக்கு முன்னர் நிமோனியா இறப்புகள் இரண்டு காரணங்களால் இருந்தன. ஒன்று ஸ்ட்ரெப்டோகாகல் மற்றொன்று h1b1 வைரஸால் நிகழ்ந்தவை. தடுப்பூசி மூலம் ஹெச்1 இன்ஃபுளூஎன்சா குறைந்துவிட்டது. ஆனாலும், தற்போது 85 சதவீத நிமோனியா ஸ்ட்ரெப்டோகாகல் (Streptococcal) நிமோனியாவாகதான் உள்ளது. இதனை கட்டுப்படுத்தவே பிசிவி தடுப்பூசி (pneumococcal conjugate vaccine) கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு தற்போது மக்களிடையே இருக்கிறது. குறிப்பாக, நிமோனியாவால் ஏற்படும் உயிரிழப்பை தடுப்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே உள்ளது என்றார் மருத்துவர் சீனிவாசன். அந்த வகையில், எங்கள் துறையை சார்ந்த அனைவருக்கும் இது தொடர்பாக முறையாக பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Children, Explainer, Newborn baby, Virus