Home /News /explainers /

மன கவலை vs மன அழுத்தம்- வித்தியாசங்கள் என்ன? சரிசெய்ய தெரபி என்ன?- Explainer

மன கவலை vs மன அழுத்தம்- வித்தியாசங்கள் என்ன? சரிசெய்ய தெரபி என்ன?- Explainer

பொதுவாக மன அழுத்தத்தை உருவாக்கிய காரணிகள் நம்மை விட்டு நீங்கினாலும், மன அழுத்தம் நீங்காது.

பொதுவாக மன அழுத்தத்தை உருவாக்கிய காரணிகள் நம்மை விட்டு நீங்கினாலும், மன அழுத்தம் நீங்காது.

பொதுவாக மன அழுத்தத்தை உருவாக்கிய காரணிகள் நம்மை விட்டு நீங்கினாலும், மன அழுத்தம் நீங்காது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
உடல்நல பிரச்சனைகள், வாழ்வியல் மாற்றங்கள், சுற்றுசூழல் பாதிப்பு, பருவநிலை மாற்றம் போன்ற முக்கிய காரணிகளால் நமது உடல் செயல்பாடுகள் மாற்றம் பெறும். சிலருக்கு இதை பற்றிய புரிதல் சரிவர இருப்பதில்லை. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, கவலை உள்ள மனநிலை உண்டாகினாலோ அதை எப்படி சரிசெய்வது என தெரிவதில்லை. பலருக்கு தனக்கு இருக்கும் மனக் கவலைக்கும், மன அழுத்தத்துக்கும் உள்ள வித்தியாசம் பற்றிய விழிப்புணர்வு கிடையாது.

மன அழுத்தம் கொண்ட நிலை மன கவலையை விட முற்றிலும் வித்தியாசமானது. இவை இரண்டும் ஒரே நபருக்கு இருக்கவும் வாய்ப்பு அதிகம். மன அழுத்தம் என்பது அதிக வேலை பளு, துணையுடன் முரண்பாடு, நீண்ட நாள் பிரச்சனைகள், நாள்பட்ட வியாதி, எதோ ஒன்றின் மீது அதீத எரிச்சல் போன்றவற்றினால் ஏற்படுகிறது. இவை ஒருவருக்கு உடல் அளவிலும், மனதளவிலும் பாதிப்பை தரும். தீராத அழுத்தம், பிடிப்பின்மை, எரிச்சல், தசை வலி, செரிமான பிரச்சனை, தூக்கமின்மை ஆகிய அறிகுறிகளை இவை கொண்டிருக்கும்.

ஆனால் மன கவலை என்பது இவற்றை காட்டிலும் முற்றிலும் மாறுபடும். தேவை இல்லாதவற்றை நினைத்து நினைத்து மனதை வருத்திக்கொள்ளும் நிலையை கொண்டது. குறிப்பாக இறந்த காலத்தில் நடந்த கசப்பான விஷயங்கள், எதிர் காலத்தை பற்றிய பயம் போன்றவற்றினால் மனக்கவலை உண்டாகுகிறது. இதனால் தூக்கமின்மை, கவன சிதறல், தசை பிடிப்பு, எரிச்சல், நம்பிக்கை இன்மை ஆகிய பாதிப்புகள் ஏற்படுகிறது. மன அழுத்தம் இல்லாதவர்களுக்கும் மன கவலை வருவதற்கு வாய்ப்புள்ளது என மனநல நிபுணர்கள் கூறுகின்றனர்.

Must Read | ‘நீர்ச்சத்து எனும் உயிர்ச்சத்து’- உடம்பில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க இவற்றை செய்தால் போதும்!

பொதுவாக மன அழுத்தத்தை உருவாக்கிய காரணிகள் நம்மை விட்டு நீங்கினாலும், மன அழுத்தம் நீங்காது. இதுவே உங்களுக்கு நீண்ட காலம் மன அழுத்தம் இருந்தால் அவையே உங்களுக்கு மன கவலையாக உருவெடுக்கலாம். மன அழுத்தம் அல்லது மன கவலை - எதுவாக இருந்தாலும் அவற்றை சரிசெய்வது சற்று கடினமே. எனவே இந்த நிலையில் நீங்கள் மருத்துவரை ஆலோசிப்பது அவசியம்.

இவை இரண்டையும் குணப்படுத்த சில அடிப்படை மருத்துவ முறைகளும் உள்ளது. சைக்கோதெரபி அல்லது சரியான மருந்துகளை எடுத்து கொள்வதன் மூலம் மன கவலையை குணப்படுத்த முடியும். மருந்துகள் மட்டுமே ஒருவரின் மனநிலை சார்ந்த பிரச்சனையை சரி செய்யாது. இவற்றுடன் சரியான வாழ்வியல் மாற்றங்களையும் கடைபிடிக்க வேண்டும். தினசரி உடற்பயிற்சி, சரியான அளவு தூக்கம், ஆரோக்கியமான உணவுமுறை போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மேலும் அதிக அளவில் காபி குடித்தல், மது பழக்கம், புகை பழக்கம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஒருவேளை மனநிலை சார்ந்த பாதிப்புகளை கையாள உங்களுக்கு மிக சிரமமாக இருந்தால் மருத்துவ உதவியை பெறுங்கள். நமக்கு இருக்கும் இந்த ஒரு வாழ்வில் தேவையற்றவற்றை நினைத்து வருந்துவதை விட, நம்மிடம் உள்ள பலவற்றை நினைத்து சந்தோஷமாக வாழ முயலுங்கள்.
Published by:Archana R
First published:

Tags: Anxiety, Explainer, Stress

அடுத்த செய்தி