Home /News /explainers /

குவிந்து கிடக்கும் போலி N-95 மாஸ்க்குகள்; எது ஒரிஜினல் என்கிற தெளிவை பெறுவது எப்படி?

குவிந்து கிடக்கும் போலி N-95 மாஸ்க்குகள்; எது ஒரிஜினல் என்கிற தெளிவை பெறுவது எப்படி?

சர்ஜிக்கல் மாஸ்க்

சர்ஜிக்கல் மாஸ்க்

N95 Mask | ஒருபக்கம் இருக்க கோவிட்-19 தொற்றுநோய் உருவாகி இரண்டு ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், சான்றளிக்கப்படாத உற்பத்தியாளர்களின் போலி முகக்கவசங்கள் சந்தை முழுவதும் பரவியுள்ளன.

கோவிட்-19 தொற்றுநோயில் இருந்து நம்மை பாதுகாப்பதில் என்95 முககவசங்கள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. என்95 அல்லது எஃப்எஃப்பி2 எஸ் (FFP2 S) முகக்கவசங்கள் கோவிட்-19 வைரஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக சுகாதார நிபுணர்கள் மீண்டும் மீண்டும் பரிந்துரைத்த வண்ணம் உள்ளனர்.

ஏனெனில் குறிப்பிட்ட முகக்கவசமானது காற்றில் பரவும் (தொற்றுநோயை பரப்பும்) நீர்த்துளிகளிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன மற்றும் 94 அல்லது 95 சதவீத துகள்களை பில்டர் செய்கின்றன (வடிகட்டுகின்றன). மேலும் இவ்வகை முகக்கவசங்களானது சாதாரண துணியால் ஆன முகக்கவசங்கள் மற்றும் சர்ஜிக்கல் மாஸ்க்கை விட சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன, இவைகள் மிகவும் நெருக்கமான முறையில் முகத்துடன் பொருந்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் இவற்றின் கட்டமைப்பு (structural design) காற்றில் உள்ள துகள்களை பில்டர் செய்வதிலும் திறன் மிக்கதாய் இருக்கும்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க கோவிட்-19 தொற்றுநோய் உருவாகி இரண்டு ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், சான்றளிக்கப்படாத உற்பத்தியாளர்களின் போலி முகக்கவசங்கள் சந்தை முழுவதும் பரவியுள்ளன. இணையவழி தளங்கள் மற்றும் உள்ளூர் கடைகளில் - சில்லறைக்கு பதிலாக கொடுக்கப்படும் மிட்டாய்களை போல - கிடைக்கும் ஆயிரக்கணக்கான போலி முகக்கவசங்களில் எது உண்மையானது? எது போலியானது என்பதை வேறுபடுத்துவது ஒரு சாதாரண மனிதனுக்கு மிகவும் கடினமான ஒரு வேலையாகும்.

தன்னையும் நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் பாதுகாக்க, முகக்கவசம் போன்ற மிகவும் முக்கிமான ஒரு பொருளை வாங்கும் போது, போலியான ஒன்றை அடையாளம் காண எது அசல் / ஒரிஜினல் என்கிற தெளிவை நாம் பெற்றாலே போதுமானதாக இருக்கும்.எந்தெந்த முகக்கவசங்கள் சான்றளிக்கப்பட்டு, பரிந்துரைக்கப்படுகின்றன?

ஃபில்டரிங் ஃபேஸ்பீஸ் ரெஸ்பிரேட்டர் மாஸ்க்குகள் (Filtering facepiece respirator mask) வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. என்95 ரெஸ்பிரேட்டர்ஸ் அமெரிக்காவில் உள்ள தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான தேசிய நிறுவனத்தால் (NIOSH) கட்டுப்படுத்தப்படுகின்றன மற்றும் எஃப்எஃப்பி2 எஸ் ஆனது ஐரோப்பிய தரநிலைகளின் அடிப்படையில் இந்திய தரநிலை பணியகத்தால் (BIS) கட்டுப்படுத்தப்படுகிறது.

Also Read : புற்றுநோய் ஆபத்தை தடுக்கும் 5 சூப்பர்ஃபுட்ஸ்

குறிப்பிட்ட தரநிலையைச் சந்திக்கும் எஃப்எஃப்பி2 எஸ் ரெஸ்பிரேட்டர்ஸ் அவற்றின் செயல்திறன் மற்றும் துகள்களை வடிகட்டுவதற்கான திறனில் என்95 ரெஸ்பிரேட்டர்களுக்குச் சமமானதாகக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு சாவ்லான் எஃப்எஃப்பி2 எஸ் (Savlon FFP2 S) மாஸ்க்கும் இந்திய தரநிலைப் பணியகத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி தரமான செயல்திறனுக்கான கடுமையான சோதனைக்கு உட்படுகிறது. மேற்கண்ட பரிந்துரைகளில் வராத, சோதனைகளை கடக்காத எந்தவொரு முகக்கவசமுமே - போலி மாஸ்க்குகள் தான்.ஒரிஜினல் என்95 மாஸ்க் - எப்படி வேலை செய்யும்?

தொற்று மற்றும் காற்றில் பரவும் வைரஸ்கள் பரவுவதற்கு பெருந்தடையாக இருப்பது - என்95 / எஃப்எஃப்பி2 எஸ் தான். கடுமையாகப் பரிசோதிக்கப்பட்ட என்95 / எஃப்எஃப்பி2 எஸ் என்பது முகக்கவசங்களில் பொதுவாக ஐந்து-அடுக்குகள் பயன்படுத்துகின்றன, மேலும் அவைகளால் 0.3 மைக்ரான் அளவுக்கு சிறிய அளவிலான வைCVIDரஸ்கள், பாக்டீரியாக்கள் உள்ளிட்ட காற்றில் பரவும் பர்டிகுலேட் ஏரோசோல்களை (particulate aerosols) தடுத்து பாதுகாப்பை வழங்குகின்றன.

Also Read : நல்ல விஷயங்களுக்கும் தேவை லிமிட்! வைட்டமின் மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் என்ன பாதிப்பு ஏற்படும்?

மேலும் இத்தகைய முகக்கவசங்கள் அணிபவரின் முகத்தோடு கட்சிதமாக பொருந்தும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளன, அதாவது மாஸ்க்கின் பக்கவாட்டு பகுதிகளின் வழியாகவும் கூட மற்றவர்கள் வெளியிடும் நீர்த்துளிகள் உள்ளே வராது. இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், இவ்வகை முகக்கவசங்களை கழுவ கூடாது. மீறினால் மாஸ்க்குகளின் கட்டமைப்பில் குறைகள் ஏற்பட்டு அவற்றின் செயல்திறன் பாதிக்கப்படலாம்.என்95 / எஃப்எஃப்பி2 முகக்கவசங்கள் உங்களை மட்டுமின்றி உங்களை சுற்றியுள்ள மற்றவர்களையும் பாதுகாக்க உதவும் என்பதை உற்பத்தியாளர்கள் மறக்க மாட்டார்கள். எனவே தான் இவைகள் வெளியேற்றப்படும் காற்றை வடிகட்டவும் செய்கின்றன, அதாவது பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து நோய்த்தொற்று இல்லாதவருக்கு கோவிட்-19 பரவுவதையும் தடுக்கின்றன. போலியான முக்கவசங்கள், ஒருவேளை நீங்கள் அணிந்து இருக்கும் ஆடைகளுக்கு பொருத்தமாக இருக்கலாம். ஆனால் தரநிலைகளின் முதல் படியை கூட தாண்டாது.
Published by:Selvi M
First published:

Tags: Corona Mask, CoronaVirus, Covid-19, Explainer

அடுத்த செய்தி