• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • Boss Day | முதலாளிகள் தினம் 2021: வரலாறு முதல் விமர்சனங்கள் வரை..!

Boss Day | முதலாளிகள் தினம் 2021: வரலாறு முதல் விமர்சனங்கள் வரை..!

முதலாளிகள் தினம் முதன் முதலில் அமெரிக்காவில் தோன்றியது.

  • Share this:
பெரும்பாலான மக்களுக்கு வேலை தான் வாழ்க்கையின் அச்சாணியாக இருக்கிறது. வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்லவும், இந்த சமூகத்தில் மதிப்பு மிகுந்த வாழ்க்கையை வாழவும், நம்முடைய மற்றும் நம்மை சார்ந்தோரின் தேவைகளை நிறைவேற்றி கொள்ளவும் வேலைகள் பெரிதும் உதவுகின்றன. வேலைகளின்றி வாழ்கை இல்லை என்பதே பலரின் நிலையாக இருக்க, அக்டோபர் 16ஆம் தேதியான இன்று முதலாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆண்டு முழுவதும் தங்கள் வாழ்விற்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் மற்றும் நியாயம், கருணை அடிப்படையில் தேவைகளை நிறைவேற்றி வைக்கும் முதலாளிகளுக்கு, ஊழியர்கள் தங்கள் நன்றி மற்றும் வாழ்த்துகளை தெரிவிக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

ஊழியர்களின் உழைப்பு மற்றும் சிறப்புகளை போற்றும் வகையில் உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படுவதை போலவே, ஊழியர்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்ட முதலாளிகளை பெருமைப்படுத்தும் வகையில், முதலாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகள் முதலாளிகள் -ஊழியர்கள் இடையிலான உறவை மேம்படுத்த உதவுகிறது. முதலாளிகள் தினம் கொண்டாடப்படுவதற்கு பின்னால் இருக்கும் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி பார்க்கலாம்.

வரலாறு:

முதலாளிகள் தினம் முதன் முதலில் அமெரிக்காவில் தோன்றியது. அந்நாட்டின் இல்லினாய்ஸ் (Illinois) பகுதியில் உள்ள ஸ்டேட் ஃபார்ம் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தில் செக்ரெட்ரியாக பணியாற்றிய ஹரோஸ்கி (Haroski) என்பவர் தானும் அலுவலகத்தில் தன்னுடன் பணியாற்றிய சக ஊழியர்களும், துணை அதிகாரிகளும் தங்களை கனிவுடன் கவனித்து வந்த நிறுவன முதலாளியை பாராட்டி கவுரவிக்க வேண்டும் என்று விரும்பினார். இதில் சிப்பாரு என்னவென்றால் இவருக்கு முதலை வேறு யாருமல்ல இவரது தந்தை தான். ஊழியர்களோடு ஊழியர்களாக பணியாற்றிய ஹரோஸ்கி, தன்னை பார்ப்பது போன்றே பிற ஊழியர்களையும் பார்த்து கொள்ளும் தந்தையின் குணத்தை கண்டு வியந்தார்.

அனைத்து முதலாளிகளும் தங்கள் ஊழியர்களுக்கு நல்ல தலைமை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க தன் தந்தை சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறார், எனவே பாராட்டுக்கு தகுதியானவர் என்று ஹரோஸ்கி உணர்ந்தார். இதனை தொடர்ந்து அமெரிக்க வர்த்தக சபையில் 1958-ஆம் ஆண்டு தேசிய முதலாளி தினத்தை பதிவு செய்தார் மற்றும் இந்நாளை கொண்டாட தனது தந்தையின் பிறந்த நாளான அக்டோபர் 16-ஐ தேர்ந்தெடுத்தார். இதனை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு 1962-ல் இல்லினாய்ஸ் கவர்னர் ஓட்டோ கெர்னர் என்பவர் ஹரோஸ்கியின் முதலாளி தினத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார்.

Must Read | உலக முதுகெலும்பு நாள்- முதுகு வலியை தடுக்க சில ’நச்’ வழிகள்!

முக்கியத்துவம்:

இந்த நாள் ஊழியர்கள் மற்றும் அவர்களின் மேற்பார்வையாளர்கள் அல்லது முதலாளிகளுக்கு இடையிலான பணி உறவை மேம்படுத்தும் என்ற நோக்கத்தில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேற்பார்வையாளர்கள் அல்லது முதலாளிகள் ஊழியர்களின் கடின உழைப்பை பாராட்டி, ஊக்குவிக்கும் வகையிலும் இந்த நாள் உள்ளது.

விமர்சனம்:

ஒரு சிலர் இந்த தினம் அவசியம் என்று நினைக்கும் நிலையில், சிலர் முதலாளிகள் நாள் போன்ற கொண்டாட்டங்கள் தொழிலாளர்களை தங்கள் முதலாளிகளை மகிழ்விக்க வேண்டும் தேவையற்ற அழுத்தத்தை சுமக்க வேண்டியிருப்பதாக குறிப்பிடுகின்றனர். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை அளிக்கும் உழைப்பாளிகள் பாராட்டப்படுவது ஏற்கத்தக்கது. ஆனால் இவர்களின் உழைப்பில் லாபம் சம்பாதிப்பவர்களை பாராட்டுவது கேள்விக்குறியாக உள்ளது என்ற விமர்சனங்களும் உலகம் முழுவதும் எழாமல் இல்லை. இருப்பினும் உலகளவில் சமீப ஆண்டுகளாக முதலைகள் தினம் கொண்டாடப்படுவது அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: