பெட்ரோல், டீசலுக்கு மாற்றாகும் ஹைட்ரஜன் எரிபொருள் - கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!

மாதிரி படம்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தா வண்ணம், மக்களின் பொருளாதாரத்துக்கும் ஏற்ற வகையிலான மாற்று எரிபொருளாக ஹைட்ரஜன்

  • News18
  • Last Updated :
  • Share this:
பெட்ரோல், டீசல் பயன்பாடு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சாமானியர்களின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்து வருகிறது. இதற்கு மாற்றாக, புதிய எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தா வண்ணம், மக்களின் பொருளாதாரத்துக்கும் ஏற்ற வகையிலான மாற்று எரிபொருளாக ஹைட்ரஜன் இருப்பதால், அதன் மூலம் இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் முடிவு செய்துள்ளன.

அதனடிப்படையில், அண்மையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2021 -22 ஆம் ஆண்டுக்கான NHEM (National Hydrogen Energy Mission) சட்டவரைவு விரைவில் உருவாக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கூறினார். இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இருந்து வெளியாகும் அதிகப்படியான கார்பன் உமிழ்வு, ஓசோன் படலத்தை கடுமையாக பாதிப்பு சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழிவகுக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மாற்று எரிபொருள் பயன்பாட்டை உருவாக்கவும், ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ள மத்திய அரசு, 2022ம் ஆண்டுக்குள் 175 GW மாற்று எரிபொருளை உருவாக்குவது என இலக்காக நிர்ணயித்துள்ளது. அதற்காக, 2021 -22ம் ஆண்டு பட்ஜெட்டில் 1500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

ஹைட்ரஜனை தேர்தெடுப்பதற்கு காரணம்

பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி ஆகியவை தீர்ந்துபோகும் வளங்களாக இருப்பதால், அவற்றுக்கு மாற்று எரிபொருளை கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டிய தேவை உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் மின்சாரத்துக்கு நிலக்கரியை அதிகம் சார்ந்திருக்கிறது. எதிர்காலத்தில் இவற்றின் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இவற்றுக்கு மாற்றாக ஹைட்ரஜனை மாற்று எரிபொருளாக பயன்படுத்த உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. ஹைட்ரஜன் வாயுவினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது.

வாகனங்களில் பயன்படுத்தும்போது, பெட்ரோல் டீசலை விட மூன்று மடங்கு அதிக திறனை கொடுகின்றன. இந்த சாதகமான அம்சங்களை கொண்டுள்ள ஹைட்ரஜனை வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தும்போது விலைவாசி உயர்வு கட்டுக்குள் வரும். கிரே, நீலம், பச்சை என மூன்று வகையான ஹைட்ரஜன் உள்ளன. கிரே ஹைட்ரஜன் புதைபடிவ எரிபொருட்கள் மற்றும் இயற்கை வாயுக்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. நீல ஹைட்ரஜன் புதைபடிவ எரிபொருள் மற்றும் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளில் இருந்து உருவாக்கப்படுகிறது.

Also read... கொரோனாவில் இருந்து மீண்ட பாதிக்கும் மேற்பட்டோருக்கு இதய பாதிப்பு உள்ளது - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நீல ஹைட்ரஜன் புதுபித்துக்கொள்ளக் கூடிய வளங்களான சூரிய ஒளி மற்றும் காற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்ட வாகனங்கள் சாதாரண மின்சார வாகனங்களைக் காட்டிலும் அதிக திறனை கொடுக்கின்றன. ஹைபிரிட் எலக்டிரிக், பிளக் இன் ஹைபிரிட், பேட்டரி எலக்டிரிக் வாகனம், பியூல் செல் எலக்டிரிக் வாகனம் என நான்கு வகைகளில் வாகனங்கள் உள்ளன. எரிபொருளாக ஹைட்ரஜனை நிரம்பிக்கொள்ளவும், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை நிரப்பிக்கொள்ளும் வகைகளிலும் வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் பயன்பாட்டில் நல்ல ரிசல்டையும் கொடுத்துள்ளன.

சாதக பாதகங்கள்:

நல்ல விஷயமாக என்னவென்றால், கார்பன் உமிழ்வு துளியும் இருக்காது. ஒருமுறை ஜார்ஜ் செய்தால் 400 முதல் 500 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். லித்தியம் பேட்டரியை விட எடை குறைவாகவும், அதிக பயன்பாட்டையும் கொடுக்க வல்லது. வணிகம் சார்ந்து இயங்கும் வாகனங்களுக்கு நல்ல லாபத்தைக் கொடுக்கும். 5 நிமிடங்களுக்கு குறைவாக எரிபொருளை நிரப்பிக்கொள்ளலாம். ஹூண்டாய், ஹோண்டா, டொயோட்டா என மூன்று நிறுவனங்கள் மட்டுமே இந்த வாகன உற்பத்தியில் இருப்பது பாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

2020ம் ஆண்டில் பயன்பாட்டில் இருந்த 8 மில்லியன் வாகனங்களில் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தும் வாகனங்கள் 25 ஆயிரத்துக்கும் குறைவாக மட்டுமே இருந்தன. ஹைட்ரஜன் வாயுவை நிரப்பும் அடிப்படை கட்டமைப்புகள் இன்னும் மேம்படுத்தவில்லை. உலகளவில் 500க்கும் குறைவான ஹைட்ரஜன் வாயுவை நிரப்பும் நிலையங்கள் இருக்கிறது. வெடிக்கும் அபாயம் உள்ளதால், மிகவும் பாதுகாப்பாக ஹைட்ரஜன் வாயுவை சேமித்து வைத்திருக்க வேண்டும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: