• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • கருப்பு மிளகில் பப்பாளி விதைகள் கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது? எளிய விளக்கம்- Explainer

கருப்பு மிளகில் பப்பாளி விதைகள் கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது? எளிய விளக்கம்- Explainer

கருப்பு மிளகு என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த பொதுவாக பயன்படுத்தப்படும் மசாலா.

  • Share this:
ஆய்வுகளின் படி, உணவு கலப்படங்கள் மிகவும் நச்சுத்தன்மையுடையவை. அவை இதய செயலிழப்பு, கல்லீரல் கோளாறுகள், சிறுநீரக கோளாறுகள் மற்றும் பலவற்றிற்கு வழிவகுக்கும் என்று மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. அதைத் தவிர்க்க, நாம் நம் உணவை நன்கு புரிந்துகொண்டு, புத்திசாலித்தனமாக தேர்வு செய்வது முக்கியம்.

உங்கள் உணவு கலப்படமா இல்லையா என்பதைச் சரிபார்க்க சில வழிகள் மூலம் கண்டறிய முயற்சி செய்யலாம். அதன் தொடர்ச்சியாக, கருப்பு மிளகில் பப்பாளி விதைகள் கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Also Read | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?

கருப்பு மிளகு என்பது மருத்துவ குணங்கள் நிறைந்த பொதுவாக பயன்படுத்தப்படும் மசாலா. ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கை முறைக்கான பழங்கால இந்திய வழிகாட்டியான சரக சம்ஹிதையிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தின் படி, இது உடலின் உள் வெப்பத்தை அதிகரிக்க உதவுகிறது. இது பாரம்பரியமாக சுவாச நோய்களுக்கும், குடல் தொடர்பான நிலைமைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, நீங்களும் மிளகின் அதிகபட்ச நன்மைகளைப் பெற விரும்பினால், அவை கலப்படமற்றவை என்பதை உறுதிசெய்ய, இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.

செயல்முறை 1: ஒரு தெளிவான கண்ணாடி கிளாசில் தண்ணீர் நிரப்பவும். சிறிதளவு கருப்பு மிளகை அவற்றில் போடவும் எடை காரணமாக கலப்படமில்லாத மிளகு தண்ணீரின் மூழ்கிவிடும். பப்பாளி விதைகள் எனில் அவை மிதக்கும்.

செயல்முறை 2: ஒரு சிறிய அளவு கருப்பு மிளகை எடுத்து ஒரு மேஜையில் வைக்கவும். உங்கள் விரலால் மிளகை அழுத்தி பார்க்கவும். கலப்படமில்லாத மிளகுகள் எளிதில் உடைந்து போகாது கலப்படம் செய்யப்பட்ட மிளகுகள் எளிதில் உடைந்துவிடும்.

Also Read | “உங்க ஹார்ட்ட ஹெல்தியா பாத்துக்கோங்க…” இதயத்துக்கான சிறந்த உணவு முறைகள் இதோ!

அதேபோல், மலாக்கைட் க்ரீன் என்றால் என்ன? Britannica.com படி, மலாக்கிட் க்ரீன், அனிலைன் க்ரீன், பென்சால்டிஹைட் க்ரீன் அல்லது சீனா க்ரீன் என்றும் அழைக்கப்படுகிறது. உள்ளூர் கிருமி நாசினிக்கான நீர்த்த கரைசலில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு அவை முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதுகுறித்து Britannica.com வலைத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “மலாக்கிட் பச்சை பூஞ்சை மற்றும் கிராம்-பாசிட்டிவ் பாக்டீரியாவுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும். மீன் வளர்ப்புத் தொழிலில், முட்டைகள் மற்றும் இளம் குஞ்சுகளைக் கொல்லும் நீர் அச்சு, சப்ரோலெக்னியா என்ற பூஞ்சையைக் கட்டுப்படுத்த இவை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நீர்வாழ் பூஞ்சைகளை கொள்ளும் நோக்கத்திற்காக மட்டும் இவை பயன்படுத்தப்படுவதில்லை. மிளகாய், பட்டாணி மற்றும் கீரை உற்பத்தியிலும் மலாக்கிட் பச்சை பயன்படுத்தப்படுகிறது. காய்கறிகளை பசுமையாகவும், பச்சையாகவும், புதியதாகவும் பார்க்க அது பயன்படுத்தப்படுகிறது”.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: