• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • ஹஜ் 2022 பயணத்துக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்: முழுமையான வழிகாட்டி

ஹஜ் 2022 பயணத்துக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்: முழுமையான வழிகாட்டி

Hajj Yatra

Hajj Yatra

2022 ஹஜ் யாத்திரைக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கான செயல்முறை 100 % ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் முறையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. விண்ணப்பங்களை எவ்வாறு நிரப்புவது என்பதற்கான படிப்படியான வழிகாட்டி இங்கே.

  • Share this:
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை செல்வதற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள், கையால் எழுதப்பட்ட அல்லது தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாநில ஹஜ் குழுக்கள் ஏற்காது. ஆர்வமுள்ள யாத்ரீகர்கள் ஹஜ் விண்ணப்பத்தை www.hajcommittee.gov.in தளத்தில் அல்லது ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள ஹஜ் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். ஹஜ் விண்ணப்பம் மேற்கொள்ளும் "HAJ COMMITTEE OF INDIA" செயலியை Google Playstore இல் இருந்து பதிவிறக்கலாம்.

2022 ஹஜ் யாத்திரைக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கான செயல்முறை 100 % ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் முறையிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. ஹஜ்-2022 யாத்திரைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 31, 2022. யாத்திரை செல்ல விரும்புபவர்கள், "ஹஜ் மொபைல் ஆப்" மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் ஹஜ் விண்ணப்பங்களை எவ்வாறு நிரப்புவது என்பதற்கான படிப்படியான வழிகாட்டி இங்கே.
நீங்கள் ஆன்லைனில் அல்லது செயலியில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யத் தொடங்கும் முன்பு, கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஆவணங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பாஸ்போர்ட்: ஹஜ் யாத்திரை விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்களில் முக்கியமானது, பாஸ்போர்ட். அது மட்டுமின்றி, நீங்கள் பயணம் செல்ல விரும்பும் குறிப்பிட்ட தேதியும் குறிப்பிட வேண்டும். கடைசி நிமிடத்தில் தாமதங்கள் ஏற்படாமல் தவிர்க்க, இயந்திரத்தால் படிக்கக்கூடிய, யாத்திரைக்கு விண்ணப்பிக்கும் முன்பு வழங்கப்பட்ட, செல்லுபாடியாகும் இந்திய-சர்வதேச பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும்.

வங்கிக்கணக்கு: ஹஜ் விண்ணப்பத்துக்கு Cover Head, ஹஜ் யாத்திரை குழுத்தலைவரின் வங்கிக்கணக்கு முக்கியம். இருப்பினும், அனைத்து யாத்ரீகர்களும் வங்கிக்கணக்கை வைத்திருப்பது அல்லது புதிதாக வங்கிக்கணக்கு தொடங்கலாம். உங்களுக்கான ரீஃபண்டு தொகை ஏதேனும் இருந்தால், நேரடியாக உங்கள் வங்கிக் கணக்குக்கே செலுத்தப்பட்டுவிடும்.

ஆதார் அட்டை: ஹஜ் யாத்திரை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்ட இடத்தில், ஆதார் அட்டை விவரங்களைக் குறிப்பிட வேண்டும் என்பதை இந்திய ஹஜ் கமிட்டி அறிவுறுத்தியது. ஆனால், ஹஜ் விண்ணப்பத்துக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை.

மொபைல் எண்: தேவைப்படும் நேரத்தில், அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்ள வசதியாக இருப்பதற்காக, எல்லா யாத்ரீகர்களும் தங்கள் ஹஜ் விண்ணப்பத்தில் மொபைல் எண்ணை குறிப்பிட வேண்டும்.

Also read:  ச்சீ..ச்சீ.. 300க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பகங்களை தழுவியதாக பெருமை பேசி வசமாக மாட்டிக்கொண்ட இளைஞர்…

ஹஜ் விண்ணப்பப் படிவம் 2022 - படிப்படியான வழிகாட்டி

படி 1: ஹஜ் விண்ணப்பத்திற்கான புதிதாகரெஜிஸ்டர் செய்தல்
படி 2: ஹஜ் விண்ணப்பப் படிவத்தை நிரப்புதல்
படி 3: புகைப்படம் &, ஆவணத்தைப் பதிவேற்றுதல்
படி 4: கட்டணம் செலுத்துதல்
படி 5: ஹஜ் விண்ணப்பப் படிவத்தை பிரின்ட் செய்தல்

படி 1: ஹஜ் விண்ணப்பத்திற்காக புதிதாக ரெஜிஸ்டர் செய்தல்

Hajcommittee.gov.in என்ற அதிகாரபூர்வமான வலைதளத்துக்கு சென்று, "HAJ FORM" என்பதை கிளிக் செய்து, "Apply" என்பதில் கிளிக் செய்து, புதிய ரெஜிஸ்டர் செய்முறையை தொடங்கவும்.

"NEW USER REGISTRATION." என்பது திரையில் தோன்றும். அதைக் கிளிக் செய்யவும்.

"NEW USER REGISTRATION." கிளிக் செய்த பிறகு, படிவத்தை கவனமாக பூர்த்தி செய்யவும். விண்ணப்பதாரர் மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி, முதல் பெயர், கடைசி பெயர் மற்றும் வலுவான கடவுச்சொலை உள்ளிட்டு, கடவுச்சொல்லை மீண்டும் உறுதி செய்ய வேண்டும்.

உங்கள் மொபைல் எண்ணில் செக்யூரிட்டி கோடு உள்ளிடவும், நீங்கள் உள்ளிட்ட தகவல் சரி என்றால், செக் பாக்சை கிளிக் செய்து, ‘விவரங்களை சமர்ப்பிக்கவும்’ என்பதை கிளிக் செய்யுங்கள்.

Also read:   ஜியோ ஃவேர்ல்ட் டிரைவ் ஷாப்பிங் மால் திறப்பு.. ஓபன் தியேட்டர் உள்ளிட்ட பிரம்மிக்க வைக்கும் வசதிகள்..

அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்த பிறகு, அதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு செய்தி உங்கள் திரையில் தோன்றும். அது உங்கள் கணக்கு ஆக்டிவேட் செய்யப்பட்டுவிட்டது என்பதை உறுதி செய்யும். நீங்கள் இப்போது லாகின் செய்யலாம்.

பதிவுசெய்யப்பட்ட யூசர் உள்-நுழைவு மற்றும் விண்ணப்பப் படிவம் நிரப்புதல்:

ஹஜ் 2022 விண்ணப்பம் செய்ய, உங்கள் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.

படி 2: ஹஜ் விண்ணப்பப் படிவத்தை நிரப்புதல்

நீங்கள் சைன்-இன் செய்து நுழைந்த பிறகு, எந்த கேட்டகிரியில் விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை கிளிக் செய்து, டிராப் டவுன் பாக்ஸில் எத்தனை பெரியவர்கள் உள்ளனர் என்பதை தேர்வு செய்து, ‘NEXT’ என்ற பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.

விண்ணப்பதாரரின் விவரங்களை நிரப்புதல்:

விண்ணப்பதாரரின் விவரங்களான (உங்கள் பாஸ்போர்ட்டில் உள்ளவாறு), கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்கள், உங்கள் பெர்சனல் விவரங்கள், தற்போது வசிக்கும் முகவரி, நாமினி விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவற்றை உள்ளிடுங்கள். அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, டிக்ளரேஷன் என்பதை கிளிக் செய்து, 'SAVE & NEXT' பட்டனை கிளிக் செய்து சமர்ப்பிக்கவும்.

Also read:   சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாத பெற்றோர்கள்.. மூடநம்பிக்கையால் பறிபோன சிறுமியின் உயிர்..

படி 3: புகைப்படம் &, ஆவணத்தைப் பதிவேற்றுதல்

டிராப்டவுன் பேட்டியில் இருந்து யாத்ரீகர்களைத் தேர்ந்தெடுக்கவும்.
புகைப்படம் மற்றும் ஆவணத்தைப் பதிவேற்ற "Browse" என்பதைக் கிளிக் செய்யவும். அனைத்து ஆவணங்களும் JPG/JPEG வடிவத்தில் மட்டுமே இருக்க வேண்டும். பாஸ்போர்ட் புகைப்படம் 10kb முதல் 100kb வரை என்ற அளவிலும், 100பிக்சல் முதல் 148பிக்சல் வரை இருக்க வேண்டும்.  ஆவணங்களின் அளவு 100kb முதல் 500kb வரை, அதன் அகலம் 570pixel முதல் 795pixel வரை இருக்க வேண்டும்.

அனைத்து யாத்ரீகர்களின் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றிய பிறகு, ‘Upload’ என்ற பட்டனை அழுத்தவும். உடன் வரும் ஒவ்வொரு யாத்ரீகருக்கான விவரங்களையும் இதே போல அப்லோட் செய்ய வேண்டும்.

படி 4: கட்டணம் செலுத்துதல்

புகைப்படங்களை அப்லோட் செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தும் இணைப்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் வழியாக கட்டணம் செலுத்தலாம். அதிலே, ''Online Payment" என்பதைத் தேர்வு செய்து," "Click here to Pay Online." என்பதைக் கிளிக் செய்யவும்.
Pay Online என்பதைக் கிளிக் செய்தவுடன், கட்டணம் செலுத்தும் கேட்வேவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பிறகு, கட்டணத் தொகையை செலுத்தலாம்.

பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்தவுடன், அதற்கான ரசீது உருவாகும். இறுதியான சமர்ப்பிப்புக்கு, நீங்கள் மீண்டும் Online HAF இல் லாகின் செய்யவும். "FINAL SUBMISSION", என்பதைக் கிளிக் செய்தால், உங்களுக்கு அலெர்ட் மெசேஜ் கிடைக்கும். அதில் OK என்பதைக் கிளிக் செய்யவும்.

Also read:   Annaatthe Movie Review: அண்ணாத்த – சிவா செஞ்சிட்டாரா.. வென்றுவிட்டாரா?

படி 5: ஹஜ் விண்ணப்பப் படிவத்தை பிரின்ட் செய்தல்

சிஸ்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு குழு ஐடி உங்களுக்கு காண்பிக்கப்படும். அது, உங்களின் ஹஜ் 2022 விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதை உறுதி செய்கிறது. உங்கள் ஆன்லைன் ஹஜ் விண்ணப்பத்தை பார்க்க அல்லது பிரின்ட் செய்ய, ‘Download PDF’ என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் எல்லா ஆவனைகளையும் அப்லோடு செய்திருந்தால், பிரின்ட் செய்யப்பட்ட HAF மற்றும் ஆவணங்களை அந்தந்த மாநில ஹஜ் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று இந்திய ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது. ஆவணங்களை பதிவேற்றவில்லை என்றால், உங்கள் விண்ணப்பத்தை செயல்படுத்த, பிரின்ட் செய்யப்பட்ட ஹஜ் விண்ணப்பம் மற்றும் ஆவணங்களின் நகலை, உங்கள் மாநில ஹஜ் கமிட்டியிடம் ஜனவரி 31, 2022 அன்று சமர்ப்பிக்கவும்.

ஹஜ் விண்ணப்பத்துடன் அப்லோட் செய்யப்பட வேண்டிய ஆவணங்களின் விவரங்கள்

Also read:  லேடீஸ் ஹாஸ்டலுக்கு செல்ல உதவிக்காக ஆண் நண்பரை அழைத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் யாத்ரீகர்கள் பின்வரும் ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்

1) திருப்பிச் செலுத்தப்படாத புராசஸிங் கட்டணம் ரூ.300/- (ஆன்லைனில் மட்டும்). (ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும்)
2) ஹஜ் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்ப்பித்தல்
3) மெஷின்-ரீடபிள் மற்றும் செல்லுபடியாகும் இந்திய சர்வதேச பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசிப் பக்கம்.
4) சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் .
5) ஹஜ் குழு தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை
6) முகவரிச் சான்றிதழ்: பாஸ்போர்ட்டில் பதிவு செய்யப்பட்ட முகவரியே தற்போதைய முகவரியாக இருந்தால், பாஸ்போர்ட்டின் நகல் போதுமானதாக இருக்கும்.

பிற சந்தர்ப்பங்களில், முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட ஹஜ் விண்ணப்பத்தை, பதிவிறக்கம் செய்து, அதனுடன் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒரு சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணத்தின் நகல் இணைக்கப்பட வேண்டும்.
- ஆதார் அட்டை
- வங்கிக்கணக்கு புத்தகம்
-வாக்காளர் அடையாள அட்டை; அல்லது
கடந்த மூன்று மாதங்களுக்கான யுடிலிட்டி பில்:
-மின்கட்டண ரசீது
-தொலைபேசி பில் (லேண்ட்-லைன்).

Also read:   புர்கா அணியாமல் ஜீன்ஸ் அணிந்ததற்காக பெண் வாடிக்கையாளரை அவமதித்து விரட்டியடித்த கடைக்காரர்!

Cover Number/ கவர் நம்பர் என்றால் என்ன?

யாத்ரீகர்களின் விண்ணப்பங்களையும், ஆவணங்களின் உள்ளீடுகளையும் மாநில / யூனியன் பிரதேச சங்கத்தினரால் சரிபார்க்கப்பட்ட பிறகு, இந்திய ஹஜ் கமிட்டியால் IHPMS என்ற மென்பொருளிலிருந்து, கணினியால் உருவாக்கப்படுவது கவர் நம்பர் அல்லது கவர் எண் என்று கூறப்படுகிறது. இந்த ஹஜ் சங்கங்கள் கவர் எண் குறித்து கவர் தலைவரிடம் தெரிவிப்பார்கள். யாத்ரீகர்கள், இந்த கவர் எண்ணை தங்களின் மாநில அல்லது யூனியன் பிரதேச சங்கத்தில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த எண் இல்லாமல், ஹஜ் விண்ணப்பம் Qurrah எனப்படும் லாட்டரியில் பரிசீலிக்கப்படாது. அனைத்து விண்ணப்பதாரர்களும், அனைத்து தகவல் தொடர்புகளுக்கும் இந்த கவர் எண்ணை ரெஃபரன்ஸ் எண்ணாக பயன்படுத்த வேண்டும்.

அதே போல, கவர் தலைவர் எனப்படும் குழுத் தலைவர் Adult Male (ஆண், பெரியவர்) ஆக இருக்க வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களின் ஹஜ் கட்டணத்துக்கும் அவர் தான் பொறுப்பு. அது மட்டுமின்றி, எல்லா விண்ணப்பதாரர்களுக்கும், ஒரே கவரின் கீழ், ஒன்றாகப் பயணிக்க வேண்டும், ஒரே வகையான தங்கும் வசதி இருக்க வேண்டும்.

Qurrah (லாட்டரி) என்றால் என்ன?

Qurrah என்பது கம்ப்யூட்டரைஸ் செய்யப்பட்ட லாட்களை எடுப்பதைக் குறிக்கிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டின் எண்ணிக்கையை விட விண்ணப்பங்கள் அதிகமாகும் போது, Qurrah வின் அடிப்படையில் யாத்ரீகர்கள் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட யாத்ரீகர்களுக்கு, அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் SMS வழியாக அறிவிப்பு வழங்கப்படும். அது மட்டுமின்றி, அவர்கள் ஹஜ் சங்கத்தின் வலைத்தளத்திலும் தங்கள் விண்ணப்பத்தின் நிலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: