Home /News /explainers /

காக்கதீயா வம்சத்திலிருந்து ஆங்கிலேயர் வரை.. கோஹினூர் வைரம் கடந்து வந்த பயணம்

காக்கதீயா வம்சத்திலிருந்து ஆங்கிலேயர் வரை.. கோஹினூர் வைரம் கடந்து வந்த பயணம்

கோஹினூர்

கோஹினூர்

கிழக்கிந்திய கம்பெனி 10 வயது மகாராஜா துலீப்பிடம் இருந்து நகையை எடுத்துக்கொண்டபோது பிரிட்டன் கோஹினூரை கைப்பற்றியது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai |
ஐக்கிய ராஜ்யத்தின் ராணியும் காமன்வெல்த் தலைவருமான இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து, உலகின் மிகவும் பிரபலமான வைரமான கோஹினூர் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

நாடுகளின் கோரிக்கை :
எலிசபெத் ராணி இறப்புக்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசுகள் கோஹினூருக்கு உரிமை கோரி வருகின்றன. இந்தியா அதைத்  திரும்ப அனுப்பக் கோரியது. ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் 105.6 காரட் ஓவல் வடிவ வைரம், லாகூர் கடைசி ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் சட்டப்பூர்வமாக தங்களால் பெறப்பட்டது என்று வலியுறுத்தி,  அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்தது.

அவரது மகனும் வாரிசுமான சார்லஸ் - மனைவி கமிலாதான் இப்போது ராணி. கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் அவரது கரங்களுக்குதான் செல்லும் என்று கூறப்படுகிறது. ஆனால் உண்மையாக கோஹினூர் உண்மையில் எங்கிருந்து வந்தது?

300 வைரங்கள் பதித்த நெக்லஸ் - ராணி எலிசபெத்-க்கு திருமண பரிசளித்த ஹைதராபாத் நிஜாம்

ஒளியின் மலை
'ஒளியின் மலை' என்று பொருள்படும், கோஹினூர் முதலில் சுமார் 186 காரட் இருந்தது. அதன் சரியான தோற்றம் தெரியவில்லை என்றாலும், அறிக்கைகளின்படி இது  கிழக்கிந்திய கம்பெனி 10 வயது மகாராஜா துலீப்பிடம் இருந்து நகையை எடுத்துக்கொண்டபோது பிரிட்டன் கோஹினூரை கைப்பற்றியது .

காக்கத்தியம்…
13 ஆம் நூற்றாண்டில் இன்றைய ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிருஷ்ணா நதியின் தென்கரையில் உள்ள கொல்லூர் சுரங்கத்தில் காகதீய வம்சத்தின்போது வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. வாரங்கலில் உள்ள ஒரு கோயிலில்  பத்ரகாளியின் இடது கண்ணாக காகதீய வம்சத்தால் பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சுல்தானியர்...
டெல்லி சுல்தானகத்தின் துர்கோ-ஆப்கான் கல்ஜி வம்சத்தின் ஆட்சியாளர், அலாவுதீன் கல்ஜி, 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவின் ராஜ்யங்களை ஆக்கிரமித்தபோது, ​​ அதை காகத்தியர்களிடமிருந்து கொள்ளையடித்தார்.

முகலாயர்கள்:
முகலாயப் பேரரசின் டர்கோ-மங்கோலிய நிறுவனர் பாபர் 1526 இல் பானிபட் போரில் டெல்லி மற்றும் ஆக்ராவைக் கைப்பற்றியதற்கான காணிக்கையாக வைரத்தைப் பெற்றார்.  பாபர், 187 காரட்டுகளுக்கு மேல் எடையுள்ள வைரத்தைப் பற்றி தனது குறிப்பில் எழுதியுள்ளார். இதுதான் பழைய கோஹினூரின் தோராயமான அளவு.

எலிசபெத் மகாராணிக்கு பிறகு கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் யாருக்கு போகும்?

பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகன், ஹுமாயூன் தனது ஆப்கானிய போட்டியாளரான ஷெர்ஷா சூரியால் தோற்கடிக்கப்பட்ட பிறகு, அவருக்கு அடைக்கலம் கொடுப்பதற்காக பெர்சியாவின் ஷா தஹ்மாஸ்பிடம் கல்லை வழங்கினார்.

வைரம், பல போர் மற்றும் சண்டைகளுக்குப் பிறகு முகலாயர்களிடம் திரும்பியது. பின்னர் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஷாஜகானின் கைகளுக்குச் சென்றது. அவர் 1635 இல் பதவியேற்ற தனது மயில் சிம்மாசனத்தில் கோஹினூரை உட்பொதித்தார். ஷாஜகானின் மகன் ஔரங்கசீப் சில காலம் கோஹினூரை வசம் வைத்திருந்தார் என்றும் கூறப்பட்டது.

பாரசீகர்- ஆப்கானியர் :
பல தசாப்தங்களுக்குப் பிறகு, பாரசீக மன்னர் நாதிர்ஷா, கர்னால் போரில் குறைந்த முகலாய ஆட்சியாளரான முகமது ஷாவை தோற்கடித்த பிறகு, 1938-39 இல் டெல்லியை ஆக்கிரமித்து வைரத்தை எடுத்துக் கொண்டார். நாதிர் ஷாவின் பேரன் ஷாரோக் ஷா 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆப்கானிய பேரரசின் நிறுவனர் அஹ்மத் ஷா துரானிக்கு அதை வழங்கினார். துரானியின் பேரனும் ஆப்கானிய மன்னருமான ஷா ஷுஜா  குடும்பத்தில் பல ஆண்டுகளாக வைரம் இருந்தது.ஆங்கிலேயர்கள் :
ஷூஜா, ஜூன் 1809 -ம் ஆண்டில் அவரின் முன்னோடி மஹ்மூத் ஷாவால் தூக்கியெறியப்பட்டார். பின்னர் அவர் ரஞ்சித் சிங்கின் பாதுகாப்பின் கீழ் லாகூரில் இருந்தார். அவர் இந்தியாவின் முதல் மற்றும் ஒரே சீக்கிய ஆட்சியாளர் ஆவார். அடைக்கலம் கொடுத்ததற்காக ஷூஜா கோஹினூரை சிங்குக்கு  பரிசாக வழங்கினார். 1849 இல் சிங்கின் மரணத்திற்குப் பிறகு, பஞ்சாப் சீக்கிய மாகாணம் ஆங்கிலேயர்களால் இணைக்கப்பட்டபோது, ​​கோஹினூர் எடுத்துச் செல்லப்பட்டு ஆணையர் சர் ஜான் லாரன்ஸிடம் வழங்கப்பட்டது, அவர் அதை ஆறு வாரங்கள் தனது இடுப்புப் பையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அவர், அதை ரஞ்சித் சிங்கின் வாரிசான தலிப் சிங்கிடம் கொடுத்து, அதை விக்டோரியா மகாராணியிடம் கொடுக்கச் சொன்னார். அதை ராணிக்கு வழங்கிய பிறகு, 1851 இல் லண்டனில் நடந்த கிரேட் கண்காட்சியில் இது முதன்மையான கண்காட்சியாக மாறியது. அதன் பிறகு, அது ராயல் நகைகளின் ஒரு பகுதியாக லண்டன் மகுடத்தில் பொருத்தப்பட்டது.

விக்டோரியா மகாராணியும் இதை அணிந்திருந்தார். இது பின்னர் ராணி அலெக்ஸாண்ட்ரா மற்றும் ராணி மேரிக்கு வழங்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டு ஆறாம் ஜார்ஜ் முடிசூட்டு விழாவின்போது, ​​அவரது மனைவி மற்றும் சமீபத்தில் இறந்த எலிசபெத்தின் தாயாருக்கு கோஹினூர் வழங்கப்பட்டது. தற்போது அவரது இறுதிச் சடங்கில் அவரது சவப்பெட்டியின் மேல் இடம்பெற்றது. அடுத்து அது அடுத்த ராணியான காமிலாவிற்கு அளிக்கப்பட உள்ளது. கோஹினூர் அணிபவருக்கு துரதிர்ஷ்டம் ஏற்படும் என்றும் ஒரு நம்பிக்கை நிலவுவது குறிப்பிடதக்கது..
Published by:Ilakkiya GP
First published:

Tags: Queen Elizabeth

அடுத்த செய்தி