Home /News /explainers /

Explainer: 1999-ல் 10,000 பேர், 2021-ல் 6 பேர்.! புயல் மற்றும் சூறாவளி இறப்பு எண்ணிக்கையை இந்தியா குறைத்திருப்பது எப்படி.!!

Explainer: 1999-ல் 10,000 பேர், 2021-ல் 6 பேர்.! புயல் மற்றும் சூறாவளி இறப்பு எண்ணிக்கையை இந்தியா குறைத்திருப்பது எப்படி.!!

புயல்

புயல்

மிக தீவிர புயலுக்கு 5 பேர் மட்டுமே மரணித்திருப்பது, நாடு பேரழிவு அபாயக் குறைப்பில் (DRR- disaster risk reduction) குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது புலப்படுகிறது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் அதிதீவிர புயலாக வலுவடைந்து கடந்த மே 26 அன்று ஒடிசாவின் பாலசோருக்கு தெற்கே கரை கடந்தது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோர மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. புயல் தாக்கியதில் மூன்றரை லட்சத்திற்கும் மேலான வீடுகள் சேதமடைந்தது. சுமார் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர்பலி என்று பார்க்கும் போது 6 பேர் பலியாகி உள்ளனர்.

சுமார் 22 ஆண்டுகளுக்கு முன் 1999 ஆம் ஆண்டு ஒடிசாவை தாக்கிய புயலில் ஏறக்குறைய 10,000-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இப்போது மிக தீவிர புயலுக்கு 5 பேர் மட்டுமே மரணித்திருப்பது, நாடு பேரழிவு அபாயக் குறைப்பில் (DRR- disaster risk reduction) குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது புலப்படுகிறது. பெரிய அளவிலான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்டவை, சுமார்14 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் யாஸ் புயலில் சிக்கி விடாமல் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவதை உறுதி செய்தது. புயல் நேரடியாக தாக்கிய இரு மாநிலங்களான ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மிக குறைவான இறப்பு ஏற்படவும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உதவி செய்துள்ளன.

கடும் சூறாவளி தாக்கியுள்ள போதும் பெரிய அளவிலான உயிர் சேதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டதற்கு, கடந்த சில ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பயிற்சிகள் மற்றும் பேரழிவு அபாயக் குறைப்பு மெக்கானிஸத்தை வலுப்படுத்தியது, மத்திய அரசு மாறும் மாநில அரசு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒரு சரியான ஒருங்கிணைப்பு காரணமாக இருக்கிறது. கடந்த தசாப்தத்தில் 5 ஆண்டுகளில் சராசரியாக 3-4 பில்லியன் டாலர்களிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர்களாக பேரழிவு அபாயக் குறைப்பு நடவடிக்கைகளுக்கான நிதியை கணிசமாக அதிகரிப்பதற்கும் இது சாத்தியமானது.

உயிரிழப்புகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்த எப்போதுமே இந்தியா ஒவ்வொரு பேரழிவையும் ஒரு சவாலாகவே எடுத்து கொண்டு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. "பூஜ்ஜிய உயிரிழப்பு" என்ற நிலையை அடைய உலகளாவிய மன்றங்களில் பேரழிவு அபாயக் குறைப்புக்கான ஐ.நா. அலுவலகத்துடன் விவாதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒடிசாவில் அமைக்கப்பட்ட சூறாவளி முகாம்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற எடுக்கப்பட்ட இந்தியாவின் முயற்சிகளை பேரிடரின் போது மற்ற நாடுகள் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனென்றால் கடுமையான யாஸ் புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இரண்டே நாட்களில் மேற்கு வங்கத்தில் எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் மற்றும் ஒடிசாவில் ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கி இருந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்கனவே கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், பெருந்தொற்றுக்கு இடையேயும் இந்த மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன. மாநில நிர்வாகங்களின் விழிப்பான நடவடிக்கை தவிர, அமைச்சரவை செயலாளர் தலைமையிலான மத்திய தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு கடந்த வாரத்தில் 2 முறை கூடியது. புயல் முன்னெச்சரிக்கை தொடர்பான அனைத்து பணிகளும் ஆப்ரேஷ்னல் மோடில் (operational mode) இருப்பதை உறுதி செய்ய பிரதமரும், உள்துறை அமைச்சரும் தனித்தனி உயர்மட்டக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கினர். சமீபத்தில் வீசிய தாக்டே புயலில் ஏற்பட்ட உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு அரசு நிர்வாகங்கள் உயர் மட்ட விழிப்புணர்வுடன் செயல்பட்டன.

கடந்த புதன்கிழமை அதி தீவிர யாஸ் புயல் கரையை கடந்த போது தேசிய பேரிடர் மறுமொழிப் படை (NDRF) மீட்பு பணிகளுக்காக சுமார் 107 டீம்களை நிறுத்தியது, கூடுதலாக 17 ராணுவ பிரிவுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் கடற்படையின் 4 போர்க்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் முழு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. இவை தவிர கடலோர காவல்படை அதன் 5 கப்பல்கள் மற்றும் ஒரு விமானத்தை செயல்பாட்டிலேயே வைத்திருந்தது. மேலும் 5 கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் இருந்தது. இவ்வளவையும் தயார் நிலையில் வைத்திருக்க, ஒரு வாரத்திற்கு முன்பே நவீன செயற்கைக்கோள்கள் மற்றும் ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள் சூறாவளியின் வழியை கணித்தது அதிகாரிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. முன்கூடிய கணிப்புகள் பெரும் புயலுக்கு எதிராக தயாராக இவை அதிகாரிகளுக்கு தேவையான அவகாசத்தையும் அளித்துள்ளது.

Read More:   இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வேரியண்டுக்கு புதிய பெயர் சூட்டியது உலக சுகாதார அமைப்பு!

கடந்த 10 ஆண்டுகளில் கடலோர மாவட்டங்களை சுற்றி பாதுகாப்பான தங்குமிடம் ஷெல்ட்டர் வீடுகளை உருவாக்குவதன் மூலமும், வெள்ள தடுப்புகளை உருவாக்குவதன் மூலமும், நேஷனல் டிசாஸ்டர் ரெஸ்பான்ஸ் ஃபோர்ஸ் (NDRF) மற்றும் ஸ்டேட் டிசாஸ்டர் ரெஸ்பான்ஸ் ஃபோர்ஸ் (SDRF)ஆகியவற்றின் பல பட்டாலியன்களை தயார் செய்வது, பேரிடரை எதிர் கொண்டு சமாளிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களுடன் கூடிய மிகவும் திறமையான பயிற்சி பெற்ற படைகளை தயார் செய்வது என பேரழிவு அபாயக் குறைப்பு நடவடிக்கைகளில் இந்தியா பெருமளவில் தொடர்ந்து முதலீடு செய்துள்ளது. இதில் NDRF மட்டுமே சுமார் 14,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது.

Read More:   பாலியல் குற்றச்சாட்டுகளை திசைத்திருப்புவது நானா? - பாடகி சின்மயி வெளியிட்ட வீடியோ!

பேரிடர்களை சமாளிக்க ஏதுவாக பேரழிவு ஆபத்து குறைப்பு (disaster risk reduction) மூலம் பயிற்சியளிக்கப்பட்ட மாநிலங்களின் ஸ்டேட் டிசாஸ்டர் ரெஸ்பான்ஸ் ஃபோர்ஸிலும் (SDRF) இதே போன்ற குழு உள்ளது. வெள்ளத்தை தணிக்கும் நடவடிக்கைகளில் முதலீடு செய்வதிலிருந்து, பேரழிவு தடுக்கும் உள்கட்டமைப்பை உருவாக்கி மேம்படுத்துவது வரை, பேரழிவு அபாய குறைப்புக்கு பெருமளவிலான நிதியை இந்தியா ஒதுக்கியுள்ளது. இயற்கை பேரிடர்கள் குறித்து அதிநவீன முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை ஏற்படுத்துவது அல்லது லேட்டஸ்டான செயற்கைக்கோள்களை ஏவுவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. பேரழிவு நேரங்களில் பொருளாதார இழப்புகள் மற்றும் உயிர் இழப்புகளைக் குறைப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:

Tags: Cyclone, Disasters, National Disaster Management, Odisha

அடுத்த செய்தி