Home /News /explainers /

French Presidential Election: பிரான்ஸ் அதிபர் தேர்தல், வெல்லப்போவது யார்?

French Presidential Election: பிரான்ஸ் அதிபர் தேர்தல், வெல்லப்போவது யார்?

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்று, நாட்டின் தனித்துவ அடையாளத்தையும்  உரிமையையும்  மீட்டெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை மரின் லூப்பன் கொண்டுள்ளார்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்று, நாட்டின் தனித்துவ அடையாளத்தையும்  உரிமையையும்  மீட்டெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை மரின் லூப்பன் கொண்டுள்ளார்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்று, நாட்டின் தனித்துவ அடையாளத்தையும்  உரிமையையும்  மீட்டெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை மரின் லூப்பன் கொண்டுள்ளார்

பிரான்ஸ் நாட்டின் 12வது அதிபர் தேர்தலின் முதல் சுற்று இன்று நடைபெறுகிறது. 500 ஆதரவு கையொப்பங்கள் பெற்ற 12 வேட்பாளர்கள் இன்றைய முதல் சுற்றில் களம் காண்கின்றனர்.

அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 7ன் கீழ், இரண்டு சுற்று தேர்தல் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். முதல் சுற்றில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை என்றால், இரண்டு வாரங்களுக்குப் பிறகு முதல் சுற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற இரண்டு வேட்பாளர்களுக்கு இடையே இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும்.

முதல் சுற்றில் தேர்வடையக்கூடியவர்கள் என இம்மானுவேல் மாக்ரோனையும் (En Marche கட்சித் தலைவர்), மரின் லூப்பனையும் (தீவிர வலது சிந்தனையாளர்) கருத்துக்கணிப்புகள் அறிவித்து வருகின்றன. எவ்வாறாயினும், அந்நாட்டின் தேர்தல் வரலாற்றில் எந்த வேட்பாளரும் முதல் சுற்று வாக்கெடுப்பின் மூலம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.



முதல் சுற்றில், குடிமக்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளர்கள் எவருக்கும் வாக்கு செலுத்தலாம், ஆனால், இரண்டாவது சுற்றில் இரண்டு வேட்பாளர்களில் ஒருவரை மட்டுந்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்தல் களம்:  வளமான உலகுக்கு தன்னிறைவு பொருந்திய  ஐரோப்பிய ஒன்றியம் தேவையா? தேவையில்லையா? போன்ற பல்வேறு கேள்விகள் இந்த தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. நேட்டோ ராணுவக் கூட்டணியைத் தாண்டி ஐரோப்பிய ஒன்றியம் தனது மூலோபாய மற்றும் பாதுகாப்பு கூட்டுறவை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை இம்மானுவேல் மாக்ரோன் தொடர்ந்து எழுப்பி வருகிறார். 

அவர், இத்தகைய நிலைப்பாட்டை எடுக்க பல்வேறு காரண/காரியங்கள் உண்டு. முதலாவதாக, பிரெக்சிட்டுக்கு (Brexit) பின்பு ஐரோப்பிய ஒன்றியத்தில் அனுஆயுதம் கொண்ட ஒரே நாடாக பிரான்ஸ் உள்ளது.  ஒட்டு மொத்த ஐரோப்பிய நிலப்பரப்பு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தார்மீக பொறுப்பை ஏற்க நினைக்கிறது.

மேலும், அமெரிக்காவுடனான சில கசப்பான அனுபவங்களும் இத்தகையை நிலைப்பாட்டை  வலுசேர்க்கின்றன. உதாரணமாக,  கடந்தாண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளை முழுவதுமாக விலக்கிக்கொள்வதாக அமெரிக்கா தன்னிச்சையாக அறிவித்தது. இதனால் ஏற்பட்ட அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள், அந்நாட்டின் அமைதி மற்றும் நிலைத்தன்மையை முற்றிலுமாக சீரழித்தது. சிரியா நாட்டுடனான போரிலும்  அமெரிக்காவின் தன்னிச்சையான நடவடிக்கைகள் பிரான்சை சிக்கலான நிலைக்குத் தள்ளின.      

இதற்கிடையே, இந்திய - பசிபிக் பகுதியில்  நிலைத்தன்மையையும், பாதுகாப்பையும் ஊக்குவிப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளின் ராணுவக் கூட்டணி சமீபத்தில் தோற்றுவிக்கப்பட்டது.  கூட்டமைப்பின் முதற்கட்ட நடவடிக்கையாக, அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டின் துணையுடன் நீர்மூழ்கிக் கப்பலின் இயக்கத்தை ஆஸ்திரேலியா தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ராணுவக் கூட்டணி மூலம், இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது பங்களிப்பை முற்றிலுமாக குறைத்துவிடும் என்று பிரான்ஸ் கருதுகிறது.

 மறுபுறம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்று, நாட்டின் தனித்துவ அடையாளத்தையும்  உரிமையையும்  மீட்டெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை மரின் லூப்பன் கொண்டுள்ளார். பிரான்சுக்குள் இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது கூடுதல் வரி மற்றும் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் ஊதியம் மேலான கூடுதல் வரி விதிக்கப்படும். நாட்டுக்குள் அகதிகளின் வருகை முற்றிலுமாக தடை செய்யப்படும் போன்ற கருத்துக்களை மரின் லூப்பன் கொண்டுள்ளார். 

தேர்தல் வாக்குறுதிகள்:  

இம்மானுவேல் மாக்ரோன்: வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். அடுத்த ஐந்தாண்டுகளில் தகுதியானவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.  மக்கள், வணிக நிறுவனங்கள் மீதான அதீத வரி நீக்கப்படும். ஓய்வூதியதாரர்களின் வயது 62லிருந்து 65 ஆக அதிகரிக்கப்படும்.



மரின் லூப்பன்:  இஸ்லாமிய மற்றும் அகதிகள் மீதான  வெறுப்பு பேச்சை மரின் லூப்பன் கடந்த சில மாதங்களாகவே  தீவிரப்படுத்தவில்லை என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  அவரின், அரசின் நிலைப்பாடுகளில் சில நெகிழ்வுத் தன்மை காணப்படுவதாகவும், மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு முகத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். அதேசமயம்,  நகர்ப்புறங்களில் மக்களின்  வாழ்வாதாரங்கள் குறித்தும், தொடர்ந்து அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் குறித்தும் பேசி வருகிறார்.

வாக்களிக்கும் முறை: காகித வாக்குச்சீட்டு அமைப்பைக் கொண்டுள்ளது.
Published by:Salanraj R
First published:

Tags: France

அடுத்த செய்தி