Home /News /explainers /

லோன் பெறுவது முதல் விசா வாங்குவது வரை.. வெளிநாட்டு கல்வியில் பெற்றோர்களின் பங்கு!

லோன் பெறுவது முதல் விசா வாங்குவது வரை.. வெளிநாட்டு கல்வியில் பெற்றோர்களின் பங்கு!

வெளிநாட்டு கல்வி

வெளிநாட்டு கல்வி

வெளிநாட்டிற்கு அனுப்பி பிள்ளைகளை படிக்க வைக்க ஆசைப்படும் பெற்றோர்கள் கட்டாயம் நிதி ரீதியிலான சிக்கல்களை அலசி ஆராய வேண்டும்.

  கல்லூரி வாசலில் கால் எடுத்து வைக்க உள்ள பிள்ளைகளின் பெற்றோர்கள் என்ன படிப்பு, எந்த பல்கலைகழகம் மற்றும் கல்லூரி என்பதை தேர்வு செய்வதற்குள் ஒரு வழியாகிவிடுவார்கள். அதிலும் அவர்களுடைய பிள்ளைகள் வெளிநாட்டில் படிக்க விரும்பினால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். வழக்கமான காலங்களை விட கொரோனா பெருந்தோற்று காலம் வெளிநாட்டிற்கு சென்று கல்வி பயிலுவதற்கான விஷயங்களை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

  கொரோனா தொற்று திடீரென தீவிரமடைந்து லாக்டவுன் போடப்படுவதும், சில மாதங்களிலேயே அது சரசரவென சரிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதையும் காண முடிந்தது. என்ன தான் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும், பொருளாதார ரீதியிலான பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை. இப்படிப்பட்ட இக்காட்டான சூழ்நிலையில் வெளிநாடு சென்று படிக்க விரும்பும் பிள்ளைகளுக்காக என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்...

  இதையும் படிங்க.. குடும்பத்திற்காக இன்சூரன்ஸ் எடுக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

  ஸ்டேண்ட் விசா பெறுவது:

  வெளிநாட்டிற்கு படிக்கச் செல்ல முதலில் தேவை ஸ்டேண்ட் விசா. 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 2.6 லட்சம் மாணவர்கள் மட்டுமே இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு படிக்கச் சென்றுள்ளனர். ஆனால் கொரோனா தொற்றுக்கு முன்னதாக 2019ம் ஆண்டு சுமார் 5.6 லட்சம் மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பை படிப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

  அடுத்தடுத்து கொரோனா தொற்று வெவ்வேறு ரூபத்தில் விஸ்வரூபம் எடுத்து வருவதால் கல்விக்கான விசா வழங்க நாடுகள் பலவும் தயங்குகின்றன. எனவே பிள்ளைகளை படிப்பிற்காக வெளிநாடு அனுப்ப உள்ள பெற்றோர், விசாவிற்கான தடைகளை தகர்க்க தயாராக இருக்க வேண்டும்.

  சரியான நாடு, பல்கலைக்கழக தேர்வு:

  பிள்ளைகள் படிப்பிற்காக செல்ல வேண்டிய நாடு மற்றும் பல்கலைக்கழகத்தை தேர்வு செய்வது பெற்றோர்களின் அடுத்த முக்கியமான வேலை. வெளிநாட்டிற்கு அனுப்பி பிள்ளைகளை படிக்க வைக்க ஆசைப்படும் பெற்றோர்கள் கட்டாயம் நிதி ரீதியிலான சிக்கல்களை அலசி ஆராய வேண்டும். ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் தேர்வு செய்யப்பட உள்ள படிப்பு மற்றும் அதற்கான செலவு என்ன என்பதை பட்டியலிட வேண்டும்.

  விசாவிற்கு முன்னதாகவே உங்களுடைய நிதி நிலை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் அதற்கான முன் முயற்சிகளை எடுக்க வேண்டும். மேலும் கல்விக்காக லோன் பெறுவதற்கும் முன்பு பல விஷயங்களை யோசிக்க வேண்டும்.

  இதையும் படிங்க...Gold Rate : உக்ரைன் போரால் உச்சம் தொட்ட தங்கம் விலை.. பேரதிர்ச்சியில் மக்கள்

  கல்வி கடன் விண்ணப்பம்:

  வெளிநாட்டிற்கு அனுப்பி பிள்ளைகளை படிக்க வைக்க குறுகிய காலத்தில் பெருந்தொகை தேவை என்பதால் கடன் பெற முயல்வது வழக்கமான ஒன்று. இருப்பினும், பெற்றோர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் கடனுடன் இணைக்கப்பட்ட அடமானத்தை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குறிப்பாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் மக்களை தொற்றுநோய் மனரீதியாகவும், நிதி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எல்லா அளவிலும் சோதித்துள்ளது. லாக்டவுன் காரணமாக பல லட்சக்கணக்கான பணியாளர்கள் பாதி சம்பளத்திற்கு பணியாற்றி வருகின்றனர். வேலை இழந்தவர்கள் தங்கள் குடும்பத்தை நடத்துவதற்கு வருமானம் தேடுவது இன்னும் மோசமானது. இதுபோன்ற நேரத்தில், கடனைத் தேர்ந்தெடுப்பதை, சுயமாக சிந்தித்த பின்னரே முடிவு செய்ய வேண்டும்.

  கடன் பெறுவது மட்டுமே உங்களுடைய ஒரே வழியாக இருந்தால், கல்வித் தேர்வுகள் மற்றும் மாணவர்களின் கல்விப் பதிவு ஆகியவை கடன் ஒப்புதலில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை அறிந்திருப்பது அவசியம். சராசரி பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது, ​​இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றிருந்தால், கடனைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.




  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Educational Loan, Study in Abroad

  அடுத்த செய்தி