Father's Day: தந்தையர் தினம் எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

மாதிரி படம்

அன்னையர் தினம் கொண்டாடப்படும் அளவுக்கு தந்தையர் தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவதில்லை.

  • Share this:
'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் இடம் பெற்ற 'தெய்வங்கள் எல்லாம்...' பாடலில் ''காயங்கள் கண்ட பின்னே உன்னைக் கண்டோம்'' என எழுதியிருப்பார் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார். உண்மையில் சினிமாவில் தாயின் சிறப்பைக் கூறும் பாடல்கள் அளவுக்கு தந்தையை பற்றிய பாடல்கள் மிகக் குறைவு. அதுவும் இதுபோன்ற சோகப் பாடல்கள் தான் அதிகம்.

நாம் வளரும் போது தாய் நம்மை அன்புடன் வழி நடத்துவார். ஆனால் தந்தை மிகக் கண்டிப்பானவராக இருப்பார். பெரும்பாலும் வேலை நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் தந்தை நம்முடன் நேரம் செலவிடுவதே இல்லை. இதன் காரணமாக நாம் தந்தை என்றாலே ஒரு வெறுப்புடன் தான் அவரை அணுகுவோம். குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் அவரைப் பார்த்தாலே பலருக்கும் எரிச்சல் தான் வரும். ஆனால் தந்தையின் கண்டிப்பு தான் நம்மை சிறப்பாக வழி நடத்தியது என்பதை நாம் தந்தையான பிறகே உணர்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்னையர் தினம் கொண்டாடப்படும் அளவுக்கு தந்தையர் தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவதில்லை. வாழும் காலத்திலேயே நமக்காகவே வாழும் ஒரு மனிதரை கொண்டாடுவதே அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும். அப்படிப்பட்ட அப்பாக்களுக்காக தந்தையர் தினம் எப்போது ? ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா ?

இந்த வருடம் தந்தையர் தினம் ஜூன் 20 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தந்தையர் தினம் கொண்டாடப்படும் தேதி வருடா வருடம் மாறுபடும். பெரும்பாலான நாடுகளில் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் நம் சொந்த அப்பாக்கள் மட்டுமல்லாமல், நம் அப்பா ஸ்தானத்தில் வைத்து மதிக்கும் அனைவருக்காகவும் கொண்டாடப்படுகிறது. மேலும் ஸ்பெயின், போர்ச்சுகல், உள்ளிட்ட நாடுகளில் மார்ச் 19 ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தைவானில் ஆகஸ்ட் 8 ஆம் தேதியும், தாய்லாந்தில் டிசம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது. தாய்லாந்தில் முன்னாள் அரசர் புமிபோல் அடுலியாதேஜ் (Bhumibol Adulyadej)பிறந்த நாளை முன்னிட்டு தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

Also read... Environment: வறட்சி மற்றும் பாலைவனமாக்கலை எதிர்க்கும் சர்வதேச நாள் 2021!

ஆனால் தந்தையர் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் மகிழ்ச்சிகரமானது இல்லை. அமெரிக்காவில் கடந்த 1908 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி மேற்கு விர்ஜினியாவில் சுரங்க விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் மரணித்தனர். இந்த விபத்தை நினைவுபடுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமைகளில் தந்தையர் தினம் கொண்டாட கிரேஸ் கோல்டன் கிளேட்டன் என்பவர் அறிவுறுத்தினார்.

இருப்பினும் தந்தையர் தினம் பரவலாகக் கொண்டாடப்படவில்லை. அதன் பிறகு 1972ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்டு நிக்சன் தந்தையர் தினத்தை ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாட முடிவு செய்தார். அதன் பிறகே தந்தையர் தினம் வெகு சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. நம் அப்பாவைக் கொண்டாட ஒரு தினம் மட்டும் போதாது என்றாலும், அன்றைய தினம் நம் அப்பாவுடன் பிடித்த உணவுகளை சாப்பிட்டு, அவருடன் நேரம் செலவிடுவோம். அவர் வாழும் நாட்களிலேயே கொண்டாடுவோம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: