தற்போதைய காலத்தில் பெரும்பாலானோர் சொந்தமாக கார் வைத்துள்ளனர். குறிப்பாக கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர், கார் விற்பனை அதிகரித்துள்ளது. லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து கார் வாங்கினாலும் கார் திருட்டால் அவற்றை ஒரே நாளில் இழந்து விடும் சூழல் நிலவுகிறது. உங்கள் கார் தொலைந்து போனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,
1. எஃப்.ஐ.ஆர்
உங்கள் கார் தொலைந்தால் முதலில் உங்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்யுங்கள். புகாரை பதிவு செய்ய காவல்துறை அதிகாரிகள் உங்கள் காரின் விவரங்கள் குறித்து கேட்பார்கள். பின்னர் உங்கள் எஃப்.ஐ.ஆரின் நகலை பெற்று கொள்ளுங்கள்.
2. உங்கள் இன்ஷூரன்ஸ் முகவரை தொடர்பு கொள்ளுங்கள்
சாலைகளில் ஓடும் வாகனங்கள் அனைத்துக்கும் மோட்டார் இன்ஷூரன்ஸ் கட்டாயம் எடுத்திருக்க வேண்டும் என்பது சட்டம். வாகனம் காணாமல் போய்விட்டாலோ அல்லது விபத்தில் முழுவதும் சேதம் அடைந்தாலோ அந்த வாகனத்துக்குரிய முழு மதிப்பையும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாகக் கொடுத்துவிடும். அதாவது, வாகனத்தின் அப்போதைய சந்தை மதிப்பு அல்லது இன்ஷூரன்ஸ் தொகை, இதில் எது குறைவோ அது இழப்பீடாகத் தரப்படும். காவல் நிலையத்தில் புகார் செய்த பின்னர், கார் திருட்டு குறித்து உங்கள் இன்ஷூரன்ஸ் முகவரை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.
3. உங்கள் RTO-க்கு தெரிவிக்கவும்
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, கார் திருட்டு குறித்து உங்கள் ஆர்டிஓவுக்கு (போக்குவரத்து அலுவலகம்) தெரிவிக்க வேண்டும்
4. தேவையான ஆவணங்களை உங்கள் இன்ஷூரன்ஸ் முகவரிடம் சமர்ப்பிக்கவும்
உங்கள் கார் திருட்டு இன்ஷூரன்ஸ் உரிமைகோரலுக்கு சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்
அவை.,
இன்ஷூரன்ஸ் ஆவணங்களின் நகல்.
அசல் எஃப்.ஐ.ஆர் நகல்.
உரிமைகோரல் வடிவங்கள்.
ஓட்டுநர் உரிமம் நகல்.
ஆர்.சி புத்தகத்தின் நகல்.
RTO ஆவணங்கள்
இந்த ஆவணங்களைத் தவிர,
இழப்பீடு கோரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சேர்த்து, கையொப்பமிட்டு காப்பீடு நிறுவனத்தில் சமர்பிக்க வேண்டும். குறிப்பிட்ட சில வகையான இழப்பீடுகளுக்கு சில சிறப்பு பொருட்களையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். உதாரணமாக உங்கள் அசல் கார் சாவியையும் சமர்ப்பிக்க வேண்டும்.
Also read... Explainer: குடும்ப வன்முறை பற்றி நாம் அறிந்ததும் அறியாததும்...!
5. காவல்துறை அதிகாரிகளிடமிருந்து No-Trace Report-ஐ சேகரிக்கவும்
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்கள் காரைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், காவல்துறை அதிகாரிகளிடமிருந்து No-Trace Report-ஐ சேகரிக்கவும். No-Trace Report அறிக்கையையும் பெற உங்களுக்கு உரிமை உண்டு. உங்கள் இன்சூரன்ஸ் முகவரால் அனுமதிக்கப்பட்ட உரிமைகோரலைப் பெற இந்த ஆவணம் கட்டாயமாகும்.
6. உரிமைகோரலுக்கு அனுமதி பெற எவ்வளவு காலம் ஆகும்?
மேலே குறிப்பிட்டுள்ளபடி, No-Trace Report 30 நாட்களுக்குப் பிறகு தான் உருவாக்கப்படும். உங்கள் கார் தொலைந்து போனதற்கான புகாரை நீங்கள் பதிவுசெய்த தேதியிலிருந்து கணக்கிடப்படும். இது தவிர, உங்கள் இன்சூரன்ஸ் முகவர் உங்கள் காரின் ஐடிவியை உருவாக்க 60-90 நாட்கள் வரை ஆகலாம். ஒட்டுமொத்தமாக, முழு செயலும் நிறைவேற 3-4 மாதங்கள் ஆகலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.