Home /News /explainers /

பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும்? பயண திட்டங்கள், தவறுகளுக்கு யார் பொறுப்பு? - Explainer

பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும்? பயண திட்டங்கள், தவறுகளுக்கு யார் பொறுப்பு? - Explainer

Modi

Modi

M's Security Breached: ஒரு மாநிலத்திற்கு பிரதமர் செல்லும் போது அவரின் ஒவ்வொரு நொடி நகர்வுக்குமான பாதுகாப்பு மாநில போலீசாரின் பொறுப்பாகும். இதை SPG குழுவினர் மேற்பார்வையிடுவார்கள். பிரதமரின் பயணத்திற்காக சாலைப் பாதையை பாதுகாப்பாக வைத்திருப்பது மாநில காவல்துறையின் பொறுப்பாகும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
    பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதால் அவர் தனது பயணத்திட்டை பாதியில் கைவிட விவகாரம் விஸ்வரூபம் எடுத்து விவாதப் பொருளாக மாறியிருக்கும் சூழலில் பிரதமருடைய பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும்? அவரின் பயணத் திட்டங்களை வகுப்பது யார்? தவறுகளுக்கு யார் பொறுப்பு? என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.

    பஞ்சாபில் 42,750 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக நேற்று (ஜனவரி 5) பிரதமர் மோடி பதிண்டாவில் இருந்து சாலை மார்க்கமாக பெரோஸ்பூருக்கு சென்ற போது வழியில் திடீரென விவசாயிகள் போராட்டம் காரணமாக அங்குள்ள மேம்பாலம் ஒன்றில் சுமார் 20 நிமிடங்கள் பிரதமர் மோடி காத்திருக்க வைக்கப்பட்டிருந்தார். இதனால் அவருடைய பயணத் திட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கக் கூடிய நாட்டின் உச்சபட்ட பாதுகாப்பு வளையத்தில் இருக்கக் கூடிய பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள இந்த குறைபாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பிரதமரின் பாதுகாப்பில் குறைபாட்டை ஏற்படுத்திய பஞ்சாப் மாநில அரசு மீது பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    PM Modi in Punjab


    பிரதமரின் பாதுகாப்பிற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை என்ன?

    SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு தான் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வரும் அமைப்பாகும். சமீபத்திய SPG சட்டத்திருத்தத்தின்படி, பிரதமரின் பாதுகாப்பை மட்டுமே SPG கவனித்து வருகிறது. SPG கமாண்டோ படையினர் தான் பிரதமருக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறார்கள்.

    Also read:  பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: பஞ்சாப் அரசுக்கு காங்கிரஸ் தலைவர் கண்டனம்

    மேம்பட்ட பாதுகாப்பு தொடர்பும் SPG ஆல் மேற்கொள்ளப்படுகிறது. அப்படியென்றால், பிரதமரின் பயணத்திட்டம் மத்திய முகமை அதிகாரிகளால் ஆவணப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என அர்த்தம். ஒரு மாநிலத்திற்கு பிரதமர் செல்லும் போது அவரின் ஒவ்வொரு நொடி நகர்வுக்குமான பாதுகாப்பு மாநில போலீசாரின் பொறுப்பாகும். இதை SPG குழுவினர் மேற்பார்வையிடுவார்கள். இதுதவிர பிரதமரின் நிகழ்ச்சி நடக்கும் இடம், வழித்தடத்தை சானிடைஸ் செய்வது, நாசவேலை தடுப்பு சோதனைகள், பிரதமருக்கு அருகில் வருபவர்களை சோதனை செய்தல் அனைத்தும் சிறப்பு பாதுகாப்பு குழுவால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    பிரதமரின் முழுப் பாதுகாப்பு பொறுப்பும் SPGயிடம்தான் உள்ளது?

    இல்லை. பிரதமரின் அருகாமை பாதுகாப்பு SPGயின் பொறுப்பு என்றாலும், பிரதமர் பயணம் செய்யும் பட்சத்தில் சுற்றளவு பகுதிகள் மாநில காவல்துறையால் பாதுகாக்கப்பட வேண்டும். இதன் அர்த்தம் என்னவென்றால், பிரதமர் செல்லத் திட்டமிடப்பட்டுள்ள பாதை மாநில காவல்துறையால் இறுதி செய்யப்பட்டு சுத்திகரிக்கப்பட வேண்டும், பின்னர் SPG உடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். பிரதமரின் பயணத்திற்காக சாலைப் பாதையை பாதுகாப்பாக வைத்திருப்பது மாநில காவல்துறையின் பொறுப்பாகும்.

    PM Modi convoy


    எஸ்பிஜியுடன் கலந்தாலோசித்து வழி குறித்த முடிவு மாநில காவல்துறையால் எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் தற்செயல் திட்டங்களில் ஒரு பாதுகாப்பு படை பிரதமரின் வழித்தடத்தில் பாதுகாப்பு அளிக்கும். சில சமயங்களில் அவசரச் சூழ்நிலை ஏற்பட்டு கடைசி நிமிட முடிவை எடுக்கலாம், இல்லையெனில் வழி, வரிசைப்படுத்தல் போன்றவை அனைத்தும் அரசால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு SPG உடன் பகிரப்படும்.

    Also read:  தன்னை உயிருடன் அனுப்பி வைத்த பஞ்சாப் முதல்வருக்கு பிரதமர் மோடி நன்றி கூறியதாக தகவல்

    பல முறை பிரதமரின் பயணத் திட்டங்களை கையாண்ட அனுபவம் பெற்ற முன்னாள் டிஜிபி ஒருவர் நியூஸ்18-க்கு அளித்த பேட்டியில், தற்செயல் வழியைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது மாநிலக் காவல்துறைக்குக் கட்டளையிடப்படுவது மட்டுமல்லாமல், பிரதமரின் கான்வாயில் டிஜிபி அல்லது நியமிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் பயணிக்க வேண்டும் என்பது எஸ்ஓபி விதிமுறையின் ஒரு பகுதியாகும்.

    பிரதமர் கான்வாயில் டிஜிபி பயணம் செய்ய தனி வாகனம் உள்ளது. அவரால் செல்லமுடியாத பட்சத்தில், ஒரு நியமிக்கப்பட்ட அதிகாரி அவரைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும், இதனால் ஏதேனும் தேவைகள் ஏற்பட்டால், பிரதமரின் கான்வாய்க்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதை அவர் உறுதிசெய்ய வேண்டும்.

    வான்வழி பயணங்கள்:

    பிரதமர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்வதாக இருந்தால், ஒரு மாற்று சாலை வழித்தடத்தை தயாராக வைத்திருக்க வேண்டும். அந்த வழித்தடம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்கும். அந்த வழித்தடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைந்தபட்சம் 24 மணி நேரத்துக்கு முன்பாகவே செய்யப்பட்டிருக்க வேண்டும். ஹெலிகாப்டர் புறப்படும் இடத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை பிரதமரை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கான பாதுகாப்பு ஒத்திகை பிரதமரின் வருகைக்கு 24 மணி நேரம் முன்னதாகவே செய்யப்பட வேண்டும்.

    Also read:  பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை.. பிரதமர் திரும்பி சென்றதற்கு வருந்துகிறேன்: பஞ்சாப் முதல்வர் சன்னி

    SPG, உள்ளூர் போலீஸ், உளவுத்துறை இந்த பாதுகாப்பு ஒத்திகையின் அங்கமாக இருப்பார்கள். பிரதமரின் வருகைக்கான ஏற்பாட்டை கவனிக்கும் 4வது பொறுப்பு மாவட்ட நிர்வாகத்தினுடையது. மாற்று வழிகள் பெரும்பாலும் அரசால் தீர்மானிக்கப்பட்டு SPG க்கு தெரிவிக்கப்பட்டு இரு நிறுவனங்களும் திருப்தி அடைந்தால் பிரதமரின் பயணம் மேற்கொள்ளப்படும். நாசவேலை முயற்சி நடந்தால் உளவுத்துறை அதிகாரிகள் உஷார்படுத்துவார்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பிரதமரின் பாதுகாப்பு மீறல் முதல் முறையாக நடந்துள்ளதா?

    2006ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் கேரள பயணத்தில் அவருக்கு பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் பிரதமரை ராஜ் பவனுக்கு அழைத்துச் செல்லும் வழியில் பிரதமரின் பைலட் வாகனம் மாற்றுப் பாதைக்கு வழிதவறி அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

     
    Published by:Arun
    First published:

    Tags: Narendra Modi, PM Narendra Modi

    அடுத்த செய்தி