• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • Corona 3rd Wave | கொரோனா 3ம் அலை: விஞ்ஞானிகள் தந்த நல்ல செய்தியும்.. கெட்ட செய்தியும்..

Corona 3rd Wave | கொரோனா 3ம் அலை: விஞ்ஞானிகள் தந்த நல்ல செய்தியும்.. கெட்ட செய்தியும்..

கொரோனா 3ம் அலை - மாதிரி படம்

கொரோனா 3ம் அலை - மாதிரி படம்

3ம் அலை பாதிப்பு உச்சத்தில் இருக்கும் போது, சாதாரணமான சூழ்நிலையில் ஒரு நாளைக்கு 100,000க்கும் குறைவான நோய்த்தொற்று பாதிப்புகளும், மோசமான சூழ்நிலையில் கிட்டத்தட்ட 150,000-த்திற்கு அதிகமான பாதிப்புகளும் பதிவாகலாம்

  • Share this:
ஆகஸ்ட் மாதத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை உச்சத்தை எட்டும்போது இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை மற்றொரு உயர்வைக் காணும் என்று ஒரு ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் மற்றும் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) பேராசிரியர்கள் மாதுகுமல்லி வித்யாசாகர் மற்றும் மணீந்திரா அகர்வால் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த மாதம் 3ம் அலை பாதிப்பு உச்சத்தில் இருக்கும் போது, சாதாரணமான சூழ்நிலையில் ஒரு நாளைக்கு 100,000க்கும் குறைவான நோய்த்தொற்று பாதிப்புகளும், மோசமான சூழ்நிலையில் கிட்டத்தட்ட 150,000-த்திற்கு அதிகமான பாதிப்புகளும் பதிவாகலாம் என்று குறிப்பிட்டுள்ளனர். கொரோனா பாதிப்புகளின் தற்போதைய அதிகரிப்பு, அக்டோபரில் உச்சத்தை அடையக்கூடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மூன்றாவது அலைகளை குறிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் குழு குறிப்பிட்டுள்ளனர்.

Also Read:    ஊரே வியந்து பேசும் பி.வி.சிந்துவின் பயிற்சியாளர் யார்?.. Park Tae-Sang பற்றிய சுவாரஸ்ய தகவல்!

எவ்வாறாயினும், வரவிருக்கும் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு, இரண்டாம் அலையை போல மிருகத்தனமாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர். இரண்டாம் அலை ஆரம்பித்து, உச்சத்தை அடைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்குள் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கியது குறித்தும் குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொரோனா 3ம் அலை - மாதிரி படம்


இது குறித்து கணித மாதிரியை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள், ப்ளூம்பெர்க்குடன் பேசுகையில், தற்போது அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகளை சந்தித்து வரும் கேரளா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் மூன்றாவது அலையின் போது, இந்தியாவில் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கலாம் என்று கூறியுள்ளனர்.

Also Read:   டேக்ஸி ஓட்டுநர் மீது இளம்பெண் தாக்குதல்.. தடுக்க வந்தவருக்கும் அடி..

கடந்த மே மாதம் ஐஐடி ஹைதராபாத் பேராசிரியர் வித்யாசாகர், கணித மாதிரியின் அடிப்படையில் வரும் நாட்களில் இந்தியாவின் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை எட்டும் என்று கணித்திருந்தார். இருப்பினும், மே மாதத்தின் நடுப்பகுதியில் 2ம் அலை பாதிப்பு உச்சத்தை எட்டும் என்ற அவரது ஏப்ரல் மாத கணிப்பு தவறாகவே முடிந்தது. ட்விட்டரில் அவர்களது பதிவுகளை காணும்போது கூட, ​​"ஒரு வாரத்திற்கு முன்பு வரை தொற்றுநோய் வேகமாக மாறிக்கொண்டே இருந்தது" என தவறான அளவுருக்கள் காரணமாக ஆராய்ச்சியாளர்கள் குழு நியாயப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Also Read:   ஷேன் வார்னே-க்கு கொரோனா உறுதி.. அதிர்ச்சியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்!

இந்த நிலையில் கொரோனாவின் 3ம் அலை துவக்கத்துடன், சிக்கன் பாக்ஸைப் போல எளிதில் பரவும் தன்மை கொண்ட மற்றும் தடுப்பூசி போடப்பட்ட மக்களால் பரவும் டெல்டா வேரியண்ட் இந்த எழுச்சியைத் தூண்டும் என்று நிபுணர்கள் இப்போது எச்சரித்துள்ளனர். இந்திய Sars-CoV-2 மரபணு கூட்டமைப்பின் (INSACOG) தரவுகளின்படி, மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஒவ்வொரு 10 கொரோனா பாதிப்புகளில் கிட்டத்தட்ட 8 பேர் கொரோனா வைரஸின் அதிக வீரியம் கொண்ட டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மொத்தம் 41,831 கொரோனா பாதிப்புகள் பதிவாகியது. மேலும் 541 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் வடகிழக்கு பிராந்தியங்கள் உட்பட 10 மாநிலங்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: