Home /News /explainers /

குடும்பத்தில் இருந்து விலக்கப்பட்ட மகன்... அப்பாவின் சொத்தில் பங்கு கிடைக்குமா?

குடும்பத்தில் இருந்து விலக்கப்பட்ட மகன்... அப்பாவின் சொத்தில் பங்கு கிடைக்குமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Explainer | பெற்றோர்கள் சுயமாக சம்பாதித்ததன் மூலம் வாங்கிய சொத்துக்களோ அல்லது மேலே குறிப்பிட்டுள்ள சொந்தமாக பெறப்பட்ட சொத்துக்களிலோ, சட்டப்பூர்வமான வாரிசுக்கு எந்த விதமான பங்கும் உரிமையும் கிடையாது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொதுவாகவே பரம்பரை சொத்து என்று வரும்பொழுது குடும்ப வாரிசுகளுக்கு, அந்த பரம்பரை சொத்தில் சமமாக பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்டமே இருக்கிறது. அதே போல, அப்பாவின் சொத்து பிள்ளைகளுக்குத்தான் சேரும். அதுவே அப்பாவின் சொந்த சம்பாத்தியம் என்று வரும்பொழுது ஒரு தந்தையின் சொத்தை , உயில் எழுதி வைத்திருப்பது போல தான் சமமாக பிரித்துக் கொடுக்கப்படும்.

    ஒருவேளை தந்தையின் சொந்த சம்பாத்தியம் பிள்ளைகளுக்கு பற்றி உயில் எதுவும் இல்லை என்றால் சமமாக பிரித்துக் கொடுக்கப்படும். இந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு சில சிக்கல்கள் காரணமாக, ஒரு மகனை குடும்பத்திலிருந்து சட்டப்பூர்வமாக ஒரு தந்தை விலக்கி வைத்துள்ளார். இந்து வாரிசுரிமை சட்டப்படி அந்த மகனுக்கு தன் தந்தையின் சொத்தில் எவ்வளவு உரிமை இருக்கிறது?

    அப்பாவின் சொந்த-சொத்தில் மகனின் உரிமை :

    இந்து வாரிசுரிமை சட்டம் 1956 இன் படி, ஒருநபர் தன்னுடைய சொந்தமான சம்பாத்தியத்தின் மூலமாகவோ அல்லது முன்னோர்களின் சொத்திலிருந்து கிடைத்த பங்கோ அல்லது சட்டப்பூர்வமான வாரிசாக இருந்ததன் வழியாக கிடைத்த சொத்தோ அல்லது பரிசாகவோ அல்லது வேறு வழியில் உயில் மூலமாகவோ கிடைத்த அனைத்து சொத்துகளுமே சொந்தமாக பெற்ற சொத்துக்கள் என்றுதான் கருதப்படும். அதுமட்டுமில்லாமல் இறந்த சகோதரன், தாய் மாமா, சித்தப்பா உள்ளிட்டவர்கள் மூலமாக பெறப்பட்ட பரம்பரை சொத்துக்களும் சொந்தமாக பெறப்பட்ட சொத்துக்கள் என்றுதான் கருதப்படுகின்றன.

    Read More : ஆரோக்கியமான நிதி வாழ்க்கைக்கு நீங்கள் செய்ய வேண்டியவை இதோ!

    அப்பாவின் சொந்தமாக பெறப்பட்ட சொத்தில் பங்களிப்பு

    பெற்றோர்கள் சுயமாக சம்பாதித்ததன் மூலம் வாங்கிய சொத்துக்களோ அல்லது மேலே குறிப்பிட்டுள்ள சொந்தமாக பெறப்பட்ட சொத்துக்களிலோ, சட்டப்பூர்வமான வாரிசுக்கு எந்த விதமான பங்கும் உரிமையும் கிடையாது. ஆனால் அவ்வாறு பெறப்பட்ட சொத்தில் சட்டப்பூர்வமான வாரிஸின் பங்களிப்பு இருக்கும் பட்சத்தில் அதை நிரூபித்தால், மகனுக்கு அந்த சொத்தில் உரிமை இருக்கிறது. அதேபோல, அவ்வாறு பெறப்பட்ட சொத்தில் பிள்ளையும் மற்றொரு உரிமையாளராக இருக்கும் பட்சத்தில் அந்த சொத்தில் உரிமை இருக்கிறது.



    சொத்து பரிமாற்றச் சட்டம் 1882 இல் குறிப்பிட்டுள்ளபடி, தன்னுடைய சொந்தமாக பெற்ற சொத்தை அதன் உரிமையாளர் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தன்னுடைய தந்தை சொந்த சம்பாத்தியமாக பெற்ற எந்த சொத்தாக இருந்தாலும் அதில் மகனுக்கு எந்த உரிமையும் பங்கும் கிடையாது.

    எனவே ஒரு தந்தை தன்னுடைய பிள்ளையை சொத்தில் பங்கு எதுவும் கிடையாது என்று விலக்கி வைக்கலாம். அப்படிச் செய்யும் பட்சத்தில், மகனுக்கு சட்டப்பூர்வமான உரிமை எதுவும் இல்லை. பெற்றோரின் சொத்தில் அல்லது பெற்றோருடைய வீட்டில் எந்தவித பங்கும் கிடைக்காது. ஆனால் ஒரு தந்தை சொத்து பற்றி உயில் எழுதும் எழுதி வைக்கவில்லை என்றால் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு இருந்தாலும், சட்டப்பூர்வ வாரிசாக மகன் இருப்பதால் அனைவருக்கும் அந்த சொத்தில் சமமாக பங்கு பிரித்து, விலக்கப்பட்ட நபருக்கும் கொடுக்க வேண்டும்.

    பூர்வீக சொத்தில் எவ்வளவு உரிமை இருக்கிறது

    அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா என்று நான்கு தலைமுறையாக இருந்து வரும் ஒரு சொத்துதான் பூர்வீக சொத்து என்று கருதப்படுகிறது. அந்தக் குடும்பத்தில் பிறப்பவர்கள், தலைமுறை தலைமுறையாக ஒருவருக்குக் கிடைக்கும் சொத்துக்குச் சட்டப்பூர்வமான வாரிசாக இருப்பார்கள். எனவே குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டாலும், அந்த குடும்பத்தின் சட்டபூர்வமாக வாரிசாக இருப்பதால் பூர்வீக சொத்தில் பங்கு கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.



    மற்றொரு புறம் இந்த வகையில் தலைமுறையாக வணிகம் செய்து வருபவர்கள் இந்து பிரிக்கப்படாத குடும்பம் (HUF) என்ற இந்து சட்டத்தின் படி, HUF என்று அமைப்பில் சொத்து, வருமான வரி ஆகியவை கணக்கிடப்படும். இந்த அமைப்பின்படி, அதன் தலைவர் குடும்பத்தின் அனைத்து சொத்துக்களையும் நிர்வகிப்பார். ஆனால், குடும்பத்தில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் அனுமதியும், ஒப்புதலும் இல்லாமல் பூர்வீக சொத்தில், குடும்ப சொத்தில் எந்த ஒரு சிறிய அளவைக்கூட அவரால் விற்பனை செய்ய முடியாது.

    மகன், மகள் உட்பட அந்த குடும்பத்தில் இருக்கும் அனைவருமே சொத்தை விற்பனை செய்வதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே விற்க முடியும் அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் செய்ய முடியும். குடும்பத்தில் இருக்கும் ஒரு நபருக்கு மட்டும் சொத்திலிருந்து பங்கு கொடுக்க முடியாது என்று அவர்களால் கூற முடியாது; அவ்வாறு கூறினால் மறுக்கப்பட்ட நபர் குடும்பத்தின் மீது வழக்கு தொடரலாம்.



    பிறக்கும் போதே கிடைக்கும் உரிமை – தாத்தா சொத்தில் பேரனுக்கு உரிமை

    உயில் எழுதாமல் தந்தை இறந்தால் மட்டும் தான் அந்த சொத்தில் பங்கு கிடைக்கும் என்ற நிலை இல்லாமல், பிறக்கும் பொழுதே சொத்துக்கு உரிமையாளராகவும் பிறக்கலாம். அதாவது, தன் தந்தையால் குடும்பத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டாலும் தந்தையின் சொத்தில் பங்கு உரிமையோ இல்லாமல் போனாலும், பூர்வீக சொத்தில் ஒரு நபருக்கு உரிமை இருக்கிறது. எனவே தாத்தாவின் சொத்தில் பேரனுக்கு பங்கு இல்லை என்று அப்பாவால் சொல்ல முடியாது.

    சொத்துரிமை பரிமாற்றம் மூலம் கிடைக்கும் மற்றும் மறுக்கப்படும் உரிமை

    பூர்வீக சொத்தாக இருந்தாலும், தாத்தா சொத்தில் பேரனுக்கு உரிமை இருந்தாலும் சட்டபூர்வமாக உரிமை இருந்தாலுமே, தாத்தா தன்னுடைய சொத்தை மகனுக்கு பரிசாக வழங்கி விட்டால் அதில் பேரனுக்கு எந்த உரிமையும் கிடைக்காது. அதாவது தன்னுடைய அப்பாவிற்கு தன்னுடைய தாத்தாவின் சொத்து சட்டப்பூர்வமான வாரிசாக கிடைக்காமல், தாத்தாவின் சொந்த விருப்பத்தின் பேரில் எழுதி கொடுக்கப்பட்ட சொத்தாக இருக்கும் போது, பேரனுக்கு உரிமை கிடையாது. அப்பாவின் சொந்த சம்பாத்தியத்தில் எப்படி மகனுக்கு உரிமை மறுக்கப்படுகிறதோ, அதேபோல தாத்தா விருப்பத்தின் பேரில் எழுதி கொடுத்த சொத்தில் பேரனுக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவே இந்து பிரிக்கப்படாத குடும்பத்தில் இருக்கும் தாத்தாவின் சொத்து என்றால் அதில் பேரனுக்கு பங்கு உள்ளது.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Explainer

    அடுத்த செய்தி