Home /News /explainers /

Explainer: 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் 2 நாள் வேலை நிறுத்தம்... எதற்காக இந்த போராட்டம்?

Explainer: 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் 2 நாள் வேலை நிறுத்தம்... எதற்காக இந்த போராட்டம்?

கோப்பு படம்

கோப்பு படம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போது, 1.75 லட்சம் கோடி ரூபாய் ஈட்டுவதற்கான அரசின் முதலீட்டு முயற்சியின் ஒரு பகுதியாக பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
நாட்டில் பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்குவதற்கான மத்திய அரசின் முடிவை கண்டித்து வரும் மார்ச் 15 மற்றும் 16 ஆகிய இரு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் பழைய தலைமுறை தனியார் வங்கிகளில் பணியாற்றும் சுமார்10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கி ஊழியர்களின் இந்த போராட்டத்திற்கான சமீபத்திய காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போது, 1.75 லட்சம் கோடி ரூபாய் ஈட்டுவதற்கான அரசின் முதலீட்டு முயற்சியின் ஒரு பகுதியாக பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்தார். இதில் ஐடிபிஐ வங்கி தவிர, 2021-22 ஆம் நிதி ஆண்டில் 2 பொதுத்துறை நிறுவனங்களையும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தையும் தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராகவே மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு 9 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (United Forum of Bank Unions) அழைப்பு விடுத்துள்ளது. முதலில் வங்கிகளில் பெருகிவரும் வராக் கடன் நிலுவையை துரிதமாக வசூலிக்கவும், வாடிக்கையாளர்கள் சேமிப்பிற்கு வட்டியை உயர்த்தவும், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் ஊழியர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே மார்ச் 15,16 தேதிகளில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 13-ம் தேதியான நாளை மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை, அடுத்த நாள் வார விடுமுறையான ஞாயிற்றுகிழமை என்பதால் இந்த இரு நாட்களும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். எனவே நாடு முழுவதும் மொத்தமாக நாளை முதல் 4 நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Also read... கொரோனா வைரஸ் தடுப்பூசி: COVID-19 தடுப்பூசி ஆண்களை விட பெண்களுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்... காரணம் இங்கே...!

செக் கிளியரன்ஸ், புதிய வங்கி கணக்குகள் திறத்தல், கடன் வழங்கும் நடைமுறைகள் உள்ளிட்ட முக்கிய வங்கி பணிகள் மார்ச் 17 வரை பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இருப்பினும் இந்த 4 நாட்களில் ஏடிஎம்-கள் வழக்கம் போல் இயங்கும், ஏடிஎம் மெஷின்களில் பணம் நிரப்பும் பணி பாதிக்கப்படாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து கிளைகளிலும், அலுவலகங்களிலும் வழக்கமான பணிகள் நடைபெற ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறி உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எனினும் வேலை நிறுத்தத்தால் பணிகள் பாதிக்கப்பட கூடும் என்றும் கூறியுள்ளது.

தனியார் வங்கி ஊழியர்களும் ஸ்ட்ரைக்கா?

எச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, கோட்டக் மஹிந்திரா, ஆக்சிஸ் மற்றும் இண்டஸ்லேன்ட் போன்ற புதிய தலைமுறை தனியார் வங்கிகளின் சேவைகள் வழக்கம் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் மேற்கண்டவை நாட்டிலுள்ள வங்கி சேவைகளில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே கொண்டுள்ளன.

பேச்சுவார்த்தை நடந்ததா?

ஆம் நடந்தது. கூடுதல் தலைமை தொழிலாளர் ஆணையர் எஸ்.சி.ஜோஷி கடந்த மார்ச் 4, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் அரசு மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே சமரசம் ஏற்பட கூட்டங்களை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கான முடிவை மறுபரிசீலனை செய்ய அரசு ஒப்பு கொண்டால் ஸ்ட்ரைக் நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்வதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறினர். ஆனால் இறுதி வரை அரசு தரப்பு உறுதி ஏதும் தரவில்லை. எனவே தான் எனவே மார்ச் 15,16 ஆகிய இரு நாட்கள் தொடர்ச்சியாக வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டதாக அனைத்திந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bank Strike

அடுத்த செய்தி